Monday, March 19, 2007

Tremor Continues....

முதலில் பாப் உல்மரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். :(

இந்த உலகக் கோப்பையில் என்னென்னவோ நடந்து வருகிறது. என்னைக் கேட்டால் இதுதான் நான் பார்த்த/பார்க்கும் உ.கோ போட்டிகளிலேயே மோசமானது என்பேன். துன்பங்கள் நிறைந்ததாயிருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடங்கிய நேரத்தில் எல்லாரும் முதல் சுற்று மிகவும் சலிப்படையச் செய்யும்/செய்கிறது என்று சலித்துக் கொண்டார்கள். நமது வலைப்பதிவர்கள் கூட சிறிய அணிகள் உலகக் கோப்பை போட்டிகளில் தேவையா என்று கொதித்து போயினர். ஆனால், நடந்தது என்ன? உங்கள் எல்லாருக்கும் தெரியும். இந்தியாவை பங்களாதேஷ் மண்ணைக் கவ்வ செய்தது. மற்றொரு புறம் அதே நாளில், அயர்லாந்து பாகிஸ்தானை உலகக் கோப்பையை விட்டே விரட்டி அடித்தது. அதோடு மட்டுமில்லாமல், அந்த போட்டியின் விளைவே பாப் உல்மரின் இறப்பிற்கு ஏற்பட்ட மன உளைச்சலை உண்டாக்கியிருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். அவர் கூட பாக்-அயர்லாந்து போட்டியின் முடிவில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
"I am deeply hurt and cannot tell you how it is going to affect me," Woolmer told AFP late on Saturday after the Ireland defeat, saying he would answer more questions on email later in the week.

பாப் உல்மர் இங்கிலாந்து அணிக்காக ஆடியிருந்தாலும் அவர் இங்கிலாந்து அணிக்கு மட்டும் சொந்தமல்ல. அவர் கான்பூரில் பிறந்தவராதலால் இந்தியாவிற்கும் சொந்தமாகிறார். அவர் உலகக் கிரிக்கெட்டிற்கே சொந்தக்காரர். இங்கிலாந்து கவுண்டி அணியின் பயிற்சியாளராக பணியாற்றியிருக்கிறார். பின்பு, தெ.ஆ அணிக்காக பயிற்சியாளராக பணியாற்றி அப்போதய அணித்தலைவர் ஹேன்ஸி க்ரோனேயுடன் சேர்ந்து தே.ஆ-வை உலகை வெல்லும் அணியாக மாற்றியதை யாரும் மறுக்க முடியாது. அதன் பின்பு, பாகிஸ்தான் அணிக்காக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணியை வலுமிக்கதாக ஆக்க தவறியது அவருடைய குற்றமாக கருத இயலாது. பாகிஸ்தான் அணியின் உட்பூசல் நிறைந்த காலத்தில் அவர் பணியாற்றியது அவருக்கு பின்னடைவாக ஆகிப்போனது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் பயிற்சியளித்த விதம் உலகை வியப்படையச்செய்தது. உலகில் முதல் கிரிக்கெட் லேப்-டாப் கோச் அவர்தான். அவரின் இறப்பு கிரிக்கெட்டின் இழப்பு.

பின்பு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் இண்ஜமாம் ஒருநாள் போட்டிகளிலிருந்து (உ.கோப்பைக்குப் பின்) தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அது எல்லாரும் எதிர்பார்த்ததே. ஆனால், அவர் அறிவித்த நேரந்தான் சரியில்லை. பாகிஸ்தானுக்கு ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் அவர் இதை அறிவித்திருப்பது எவ்விதத்தில் அறிவுப்பூர்வமானது என தெரியவில்லை. பல விதங்களில் பாகிஸ்தான் அணிக்கு அடி. பாவம்.

இன்றைய போட்டியை குறித்து கூறவேண்டுமானல், இந்தியாவிற்கு எளிதான ஒரு போட்டிதான். சச்சின் - கங்குலி வெற்றி இணை மீண்டும் பேட்டிங்கை துவக்கக்கூடும். வெற்றி மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும். முதல் போட்டியில் தோற்றதில் ரசிகர்கள் மிகவும் வெறுத்துப் போயிருக்கிறார்கள். பெர்முடா அணியுடன் கூட இந்தியா வெல்லாது எனும் அளவிற்கு. ஒரு நகைச்சுவை துணுக்கு கூட உலவி வருகிறது.

இண்ஜமாம் ட்ராவிட்டை பார்த்து பாடுகிறார்:
இண்ஜமாம்: வர்ரீயா? வரமாட்டியா? வராங்காட்டி உன் பேச்சு காய்....

அதற்கு ட்ராவிட்: நீ முன்னாடி போனா...நான் பின்னாடி வாரேன்...


கொடுமை. மக்களே இந்திய அணி அடுத்த சுற்றுப் போட்டிக்கு தகுதி பெரும். 'அப்செட்' அடிக்கடி நிகழ்வதில்லை. அப்படி நிகழ்வதாயிருந்தால் அதனை 'அப்செட்' என்று அழைத்திருக்கமாட்டார்கள். இலங்கையுடனும் வெல்லும். ஏன் இலங்கையை சமீபத்தில் (1976-ல் அல்ல) வென்றதை மறந்து விட்டீர்களா? தயவு செய்து பாகிஸ்தான் அணியுடன் இந்த இந்திய அணியை ஒப்பிடாதீர்கள்.

ரசிக கண்மணிகளே! இன்றைய வெற்றியை கொண்டாட ஆயத்தமாகுங்கள்!! துன்பங்களை மட்டுமே தந்து வரும் இந்த உலகக் கோப்பை இந்தியாவின் வெற்றிகள் மூலம் நம்மை துன்பம் மறந்து மகிழ்ச்சியூட்டட்டும்!!!

7 comments:

கார்த்திக் பிரபு said...

yov innuma india vai nambureeru ..idhu umakey niyama ..arivu poorvama anugunga ..appo than unmaiyana nilamai theriyum india super 8 poga chance romba romba romba romba kammmi

Naufal MQ said...

அய்யா,
நீங்கள் சொல்வது அனுமானத்தில் தான். நான் சொல்வது அனுமானத்தில் தான். என்ன, நான் நேர்மறை கண்ணோட்டத்தில் அனுகுகிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். :)

சென்ஷி said...

//ரசிக கண்மணிகளே! இன்றைய வெற்றியை கொண்டாட ஆயத்தமாகுங்கள்!! துன்பங்களை மட்டுமே தந்து வரும் இந்த உலகக் கோப்பை இந்தியாவின் வெற்றிகள் மூலம் நம்மை துன்பம் மறந்து மகிழ்ச்சியூட்டட்டும்!!! //

எனக்கு கிரிக்கெட்டின் மேல் அதீத ஈடுபாடு ஒன்றும் கிடையாது. ஆனாலும் ரசிக்கும் மனம் உண்டு.
இன்றைய உங்கள் எழுத்து உண்மையிலேயே இந்தியா ஜெயிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெய்ஹிந்த்

சென்ஷி

Anonymous said...

Pl think +ve

Naufal MQ said...

//எனக்கு கிரிக்கெட்டின் மேல் அதீத ஈடுபாடு ஒன்றும் கிடையாது. ஆனாலும் ரசிக்கும் மனம் உண்டு.
இன்றைய உங்கள் எழுத்து உண்மையிலேயே இந்தியா ஜெயிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெய்ஹிந்த்

சென்ஷி
//

வாருங்கள் சென்ஷி,
கருத்துக்கும் இந்தியாவை வந்து வாழ்த்தியமைக்கும் நன்றி. :)

இந்தியா ஜொலிக்கட்டும்.

Naufal MQ said...

//Nakkeeran said...
Pl think +ve
//

:-)

Avanthika said...

//இன்றைய வெற்றியை கொண்டாட ஆயத்தமாகுங்கள்!! துன்பங்களை மட்டுமே தந்து வரும் இந்த உலகக் கோப்பை இந்தியாவின் வெற்றிகள் மூலம் நம்மை துன்பம் மறந்து மகிழ்ச்சியூட்டட்டும்!!! ///

YES ANNA... LET US ENJOY THE SPORTS IN ITS REAL SPIRITS, THIS WORLD CUP SEEMS TO TEACH A LOT OF THINS TO US...