Saturday, March 24, 2007

2011 - உ.கோ: இந்திய அணி

மார்ச் போனால் செப்டம்பர் இருக்கு. இது படிக்கும்(?!) மாணவர்களின் பழமொழி. இது இப்போது இந்திய அணிக்கும் பொருந்தி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் வெகு விரைவில் அணி வெளியேறியதை கண்டு மனம் தளராத இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த உலகக் கோப்பைக்கான அணியை தயார் செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளது. அதற்கான அணி விரைவில் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் 4 ஆண்டுகள் Vision 2011-க்காக சிறப்பு பயிற்சியளிக்கப்படும் என தெரிகிறது. கீழ்கானும் வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் ஊகிக்கப்படுகின்றனர்:

1. சச்சின் (கேப்டன்)
2. டிராவிட்
3. கங்குலி
4. ஹர்பஜன்
5. முகில் சோப்ரா
6. முகேஷ் தாஸ்
7. அன்வர் கான்
8. கிரிகேஷ் படேல்
9. முகம்மது ஸைஃப்
10. ஹரிஹரன்
11. ராய்க்கர்
12. ஹனுமந்த் சிங்
13. பத்ம குமார்.

இந்த அணி சிறப்பாக விளையாடும் என (வழக்கம்போல்) இந்திய கிரிக்கெட் வாரியமும், மக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

7 comments:

அபி அப்பா said...

இதென்ன புது கூத்து! இன்னும் 4 வருஷத்துக்கு கங்குலி, திராவிட், தெண்டில்கர் உண்டா?

வெண்பா said...

மொதல்ல சேப்பாக்கத்துலயும், மெரினாலயும் ஒரு கிட்டிபுள் கேம்ப் நடத்தச்சொல்லுப்பா. ஆதிலருந்து ஆரம்பிச்சாதான் சரிப்படும்.

Naufal MQ said...

//அபி அப்பா said...
இதென்ன புது கூத்து! இன்னும் 4 வருஷத்துக்கு கங்குலி, திராவிட், தெண்டில்கர் உண்டா?
//

பின்ன... தடித்த தோலாக்கும்... மானம் ரோஷமெல்லாம் நமக்கேது... :)

Naufal MQ said...

// veebee said...
மொதல்ல சேப்பாக்கத்துலயும், மெரினாலயும் ஒரு கிட்டிபுள் கேம்ப் நடத்தச்சொல்லுப்பா. ஆதிலருந்து ஆரம்பிச்சாதான் சரிப்படும்
//
இந்த ஆலோசனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

Naufal MQ said...

பினாத்தலார் தொலைபேசி மூலம் சொன்னது(கன்னாபின்னவென்று திட்டியது):

கவாஸ்கர் மற்றும் கபில்தேவ் பெயரை பரிசீலிக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

Chappell has done a wonderful job of fulfilling the dreams of 100+ crore Indians.

Naufal MQ said...

//Anonymous said...
Chappell has done a wonderful job of fulfilling the dreams of 100+ crore Indians.
//
2011-ஆண்டு அணிக்கு அவருடைய அண்ணன் (தம்பி?) இயன் சாப்பல் தான் பயிற்சியாளராம். வாரிசு அரசியல்????