Wednesday, March 28, 2007

இந்தியாவின் அடுத்த 5 போட்டிகள்

அதிர்ச்சி தோல்வியுற்று உ.கோ விலிருந்து வெளியேறியுள்ள இந்திய அணியின் அடுத்த தொடருக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது. மே மாதம் இந்த போட்டிகள் நடக்க இருக்கின்றது.

மே 2 - இந்தியா Vs அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராயப்பேட்டை, சென்னை


மே 5 - இந்தியா Vs ஹை-டெக் பாலிடெக்னிக், கோயம்புத்தூர்


மே 7 - இந்தியா Vs கிண்டர்கார்டன் நர்சரி, மேலவீதி, மதுரை


மே 9 - இந்தியா Vs புனித யோவான் கலைக்கல்லூரி, நெல்லை


மே 12 - இந்தியா Vs மகளிர் நடுநிலைப்பள்ளி, திருச்சி

இவையனைத்தும் பலம் வாய்ந்த அணிகளாக இந்திய அணியால் கருத்தப்படுவதால், போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை செட் மேக்ஸ் சேனல் நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்யும்.

14 comments:

மணிகண்டன் said...

நம்ம தமிழ்மணம் டீமோட ஒரு போட்டி ஏற்பாடு பண்ணுங்களேன் :)

Naufal MQ said...

//மணிகண்டன் said...
நம்ம தமிழ்மணம் டீமோட ஒரு போட்டி ஏற்பாடு பண்ணுங்களேன் :)
//

தமிழ்மணம் நிர்வாகம் அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தெரிகிறது. தமிழ்மணம் இந்திய அணியினருடன் மோதி தங்களை மட்டமாக்கி கொள்ள விரும்பவில்லையாம்.

சைனா வாலா said...

I also post a comment in IDLIVADAI of like this joke. Please see below link.

http://idlyvadai.blogspot.com/2007/03/blog-post_25.html.

India’s Next Four matches…
April 2: India vs Chavakkad Government Higher Secondary School
April 5: India vs BVB Boys School, Kunnamkulam
May 3: India vs Alappuzha Ladies College
May 5: India vs Pogo Primary school(I std to 5th std), Ernakulam
Dravid: Its tough time for us. But we will do the Best... Our aim - Defeat the Pogo primary school, because lot of players are young and energetic...

Naufal MQ said...

சைனா வாலா,
இந்தியா வங்கதேசத்திடம் தோற்றதிலிருந்தே நம்ம ஆட்கள இந்த மாதிரி காமெடியில அடிச்சு ஆடத் தொடங்கிட்டாங்க. இதுமாதிரி இ-மெயில் டெய்லி பத்து வருது. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிதான் மிச்சம்.

சுதாகர் said...

பெட்டிங்-க்கு யாரை அணுக வேண்டும்? ;-)

Naufal MQ said...

//சுதாகர் said...
பெட்டிங்-க்கு யாரை அணுக வேண்டும்? ;-)
//
இங்கேயே வச்சுக்கலாம்.

Anonymous said...

எங்களை இந்தியாவுடம் மோதவிட்டு அவமானப்படுத்திய பி.சி.சி.ஐ-யை வன்மையாக கன்டிக்கிறோம்.

தலைமை ஆசிரியர்
கிண்டர்கார்டன் நர்சரி, மேலவீதி, மதுரை.

Anonymous said...

ஒக்க மக்கா.. இதுலாயாச்சும் ஜெயிக்கிறானுங்களானு பாக்கலாம்.

Anonymous said...

//இந்திய ரசிகர்கள் said...
ஒக்க மக்கா.. இதுலாயாச்சும் ஜெயிக்கிறானுங்களானு பாக்கலாம்.
//

இருங்கடா. இதுலயும் உங்களுக்கு ஆப்பு வைக்கிறோம்.

தென்றல் said...

/எங்களை இந்தியாவுடம் மோதவிட்டு அவமானப்படுத்திய பி.சி.சி.ஐ-யை வன்மையாக கன்டிக்கிறோம்.

தலைமை ஆசிரியர்
கிண்டர்கார்டன் நர்சரி, மேலவீதி, மதுரை.
/
பி.சி.சி.ஐ மட்டும் இல்ல... fastbowlerரையும் சேர்த்துதான்...!

நியாயமான கோபம்!
தலைமை ஆசிரியர் அவர்களுக்கு,
உங்களுக்கு என்னுடய ஆதரவு.

Avanthika said...

//இந்தியா Vs ஹை-டெக் பாலிடெக்னிக், கோயம்புத்தூர்///

அண்ணா எங்க ஊர பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு... எங்க range க்கு ...no chance...take back anna
..:-))

Naufal MQ said...

//தென்றல் said...
நியாயமான கோபம்!
தலைமை ஆசிரியர் அவர்களுக்கு,
உங்களுக்கு என்னுடய ஆதரவு.
//

பி.சி.சி.ஐ முடிவுகளுக்கு நான் பொறுப்பல்ல. :)

Naufal MQ said...

//அவந்தி said...
//இந்தியா Vs ஹை-டெக் பாலிடெக்னிக், கோயம்புத்தூர்///

அண்ணா எங்க ஊர பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு... எங்க range க்கு ...no chance...take back anna
..:-))
//

சரி சரி கூல் டவுன்.

வல்லிசிம்ஹன் said...

மகளிர் அணியிலிருந்து சூடான விவாதம்.
கண்டனம்.!!
எங்களுக்கு வேற வேலை இல்லையா:-)