Sunday, March 4, 2007

மே.இந்தியாவிலிருந்து கனடாவிற்கு


'ஆண்டர்ஸன் கம்மின்ஸ்'. இந்த பெயர் அல்லது அருகிலிருக்கும் படத்திலுள்ள முகம் ஞாபகம் இருக்கிறதா? ஆம். இவர் மே.இந்திய அணிக்காக விளையாடியவர். 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 478 ரன்களை குவித்ததுடன் 78 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஒரு ஆல்-ரவுண்டர். 1996 உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளார்.

சரி, அவருக்கென்ன இப்போ என்று கேட்கிறீர்களா? அவர் நடக்கவிருக்கும் உலகக் கோப்பையில் வெறு ஒரு நாட்டிற்காக விளையாட இருக்கிறார். அதாவது இந்த முறை அவர் பங்கு பெற்றிருக்கும் அணி கனடா.

என்ன குழப்பமாக இருக்கிறதா? குழப்பமொன்றும் இதில் வேண்டாம். அதாவது கம்மின்ஸ் கனடாவில் தான் பிறந்து வளர்ந்தார். அந்நாட்டு குடிமகன் தான். ஆனால், இடையில் மே.இந்திய தீவுகளில் வசித்த போது மே.இந்திய அணிக்காக விளையாட தேர்வு பெற்று ஆடி வந்தார். தற்போது கடந்த 11 ஆண்டுகளாக தனது தாய்நாடான கனடாவில் வசித்து வருகிறார். அதே நேரம் கனடா கிரிக்கெட் அணியிலும் தேர்வு பெற்று விளையாடி வருகிறார். உலகக் கோப்பை அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

எனக்குத் தெரிந்து இரு வேறு அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் இவர். மற்றவர் தெ.ஆ-வின் முன்னாள் அணித்தலைவர் கெப்ளர் வெஸ்ஸல்ஸ். அவர் ஆஸ்திரேலியா அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

2 comments:

மணிகண்டன் said...

Benjamin Lambert என்பவர் மேற்கிந்தியத்தீவுகளுக்கும், USAவுக்கும் விளையாடி இருக்காரு.

ப்ரவுன் என்பவர் இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் ஆடியிருக்காரு. இவங்களை பத்தின விவரங்கள் cricinfo.com இருக்குங்க.

Naufal MQ said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி மணிகண்டன்.