Tuesday, March 20, 2007

எல்லாரும் பெருமூச்சு விட்டாச்சா?

ரண்டு நாட்களாக விடாது சுழற்றி அடித்து வந்த சூறாவளி நேற்றிரவு மேற்கிந்திய தீவுகளில் கரைகடந்தது போலிருக்கிறது. நேற்று வரை இந்திய அணியை திட்டி தீர்த்து வந்த நம் ரசிக கண்மணிகள் நேற்றைய 'பட்டையை கிளப்பிய' வெற்றிக்குப் பின் மகிழ்ச்சியுடன் நடமாடத் தொடங்கிவிட்டனர். இது ஒரு கத்துக்குட்டி அணிக்கெதிரான வெற்றி என்றாலும் பெரிய வெற்றியாகையால் 'இங்க பாரு மச்சான், கோப்பை நமக்குத்தான்' எனும் விதத்தில் (வழக்கம்போல) வீர சவடால்கள் விடத்துவங்கியுள்ளனர். 'அடப்பாவிகளா! நேத்து தானடா வீட்டையெல்லாம் உடைச்சீங்க. அதுக்குள்ள தலையில தூக்கிவச்சி கொண்டாட ஆரம்பிச்சாச்சா'. என்னவோ போங்க நம் இந்திய மக்களின் உணர்ச்சிகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

நேத்து நான் மேட்ச் பார்க்கும் போது கூட (கும்பலாத்தான் மேட்ச் பார்த்தேன். அதுல இருக்கும் கிக்கே தனி) இந்தியா பேட்டிங் முடிஞ்சவுடனே ஒருத்தன் சொல்றான், 'இது போதும்டா. சூப்பர் 8-க்கு போகாட்டி கூட பராவில்லைடா'. அடப்பாவிப்பயலே, நேத்து வரைக்கும் கொலைவெறியோட அலஞ்சியேடா. இதே மூஞ்சிதான் இலங்கை கூட இந்தியா தோற்றுப்போய்விட்டால் (அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு) மீண்டும் கையில கல்லை தூக்குவான். அந்தளவிற்கு நம்ம மக்கள் எமோஷனல். அந்த நிமிடத்தில் என்ன நடக்கிறதோ அதற்கேற்றால் எதிர்வினை இருக்கும் நம்மிடம். நம் மக்கள் மூளையைவிட இதயத்திற்கு அடிபணிந்தவர்கள். :)

என்னவோங்க, சின்ன அணியிடம் வென்றால் கூட பெருமைப்படும் அளவிற்கு வென்றார்கள். இதில் எனக்கு இன்னொரு மகிழ்ச்சி என்னன்னா சேவாக் ரன் அடிச்சது தான். சேவாக் அடித்த எல்லா ஷாட்டுகளுமே சரியாக அடிக்கப்பட்டவை ஒரே ஒரு ஷாட் தவிர(அவர் அவுட் ஆன ஷாட்). நேற்று வரை அவரை திட்டி தீர்த்த வர்ணனையாளர்கள் கூட புகழ்கிறார்கள் (இவர்களும் நம்ம ரசிகர்கள் மாதிரிதான்). இதே மாதிரி சேவாக் இலங்கை கூட ஆடுவாரா என்று எல்லாரும் கேட்பது தெரிகிறது. சேவாக்கின் தனித்தன்மையே அவருக்கு ஒரு பந்து வீசப்பட்டால், அதில் அவருக்கு சிக்ஸ் அடிக்கவும் தெரியும்(நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்று பொருள்), அதே பந்தில் அவுட்டாகவும் தெரியும் (அந்த நேரத்தில் அவரை காப்பாற்ற ட்ராவிடால் மட்டுமே முடியும்). நேற்றைய ஆட்டத்திற்குப் பின் அவர் ஃபார்ம், நம்பிக்கை, பாடி லாங்குவேஜ் எல்லாம் முன்னேறி இருக்கும். நேற்று அவர் நூறடித்துவிட்டு பேட்டை உயர்த்தி காட்டியபோது, சேவாக்கின் தாயை விட மகிழ்ச்சியடந்தவர் ட்ராவிட்தான். அவர் 100 அடித்தது போன்றதொரு மகிழ்ச்சி.

எல்லா பெரிய அணிகளும் சிறிய அணிகளை 200+ வித்தியாசத்தில் ஜெயிக்கும் போது நாமலும் அதை செய்ய முடியும் என்பதை நிரூபித்த நம்ம பசங்களுக்கு ஒரு 'ஓ' போட்டுத்தான் ஆகனும். மேலும் மேலும் அசத்துவார்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கிருக்கிறது.
========================================================

ப்புறம், கடந்த 3/4 நாட்கள் கிரிக்கெட்டின் கருப்பு நாட்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. மறைந்த பாப் உல்மரின் இறப்பிற்கு பலவாறு காரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

பாகிஸ்தான் அயர்லாந்து அணியுடன் தோற்றதிற்கு காரணம் மேட்ச் ஃபிக்ஸிங் என்றும், பாகிஸ்தான் அணியினர் சூதாட்ட தரகர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர் என்றும், சூதாட்ட பெரும்புள்ளிகள் உல்மரை கொலை செய்திருக்கலாம் என்றும் வதந்திகள் (?) கிளம்பியவண்ணம் உள்ளன.
சிலர், அவர் அளவிற்கதிகமாக மது அருந்தியிருக்கலாம் அதனால் தான் வாந்தியெடுத்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் உடல்-பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. முடிவுகள் கிரிக்கெட்டிற்கு பங்கம் விளைவிப்பவையாக இல்லாமல் இருக்க வேண்டும்.

===================================================


வையெல்லாம் நடந்து முடிந்திருக்கையில், நம் கவனிக்கத் தவறிய மற்றொரு நிகழ்ச்சியும் இந்த இரண்டு நாட்களில் நடந்திருக்கிறது. இங்கிலாந்து அணியில் அது சிறிய அளவில் புயலை கிளப்பி இப்போது அடங்கியிருக்கிறது. இங்கிலாந்து அணியின் துனை கேப்டன் Flintoff தனது அணித்தோழர்களுடன் (James Anderson, Ian Bell, Jon Lewis, Paul Nixon and Liam Plunkett) சேர்ந்து இரவு நேரத்தில் குடித்து கலாட்டா செய்திருக்கிறார்.

இதனை கண்டிக்கும் விதமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனைவருக்கும் அபராதம் விதித்திருக்கிறது. ஆனால், துனை கேப்டனான Flintoff-ற்கு மட்டும் தன்டனை கூடுதலாக வழங்கியிருக்கிறார்கள். என்ன தெரியுமா? அவருடைய துனை கேப்டன் பதவியை பறித்ததுடன் கனடாவிற்கெதிரான எதிரான போட்டியில் அவரை விலக்கினர்.

இப்போது Flinoff தன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களிடமும், கிரிக்கெட் வாரியத்திடமும் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.

விளையாடப் போன இடத்தில் ராக்கூத்து கேட்குதா உனக்கு மவனே!!

23 comments:

Anonymous said...

yov interting a edhavapodumaya ..ellam paya kadhai ..emandhu ponane pa

karthick prabhu

Naufal MQ said...

நண்பா,

கொஞ்சம் வேலை, அரைத்தூக்கம், அதனால் வந்த சோம்பல் எல்லாம் சேர்ந்து பாடாப்படுத்துகிறது. இன்னொரு நாளைக்கு நல்லாப் பதிவா போட்டுவிடலாம். :)

இப்போ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க. :)

இலவசக்கொத்தனார் said...

எல்லா நிகழ்வுகளையும் சொல்லிட்டீங்க. அதனால இதையும் பத்தி சொல்லிடுங்க. பங்களாதேஷின் இளம் வீரர் சுழல் பந்து வீச்சாளர் மஞ்சருல் இஸ்லாம் ரானா இந்தப் போட்டிகள் நடக்கையில் ஒரு இரு சக்கர வாகன விபத்தில் மரணமடைந்தார்.

உலகக் கோப்பை அணிக்கு தேர்ந்தெடுக்கப்படாத இவர், ஒரு உள்ளூர் போட்டியில் பங்கெடுத்த பின் திரும்பி வரும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டது. இவருடன் உடனிருந்த ஒரு உள்ளூர் கிரிக்கட்டருக்கும் பலத்த அடி. அவரின் தற்போதைய நிலமை தெரியவில்லை. இவர் ஹெல்மெட் போட்டு இருந்தாரா என்ற விபரமும் இல்லை.

இவரது குடும்பத்தாருக்கும் நமது வருத்தங்கள்.

Naufal MQ said...

வாங்க இ.கொ,,

அதப்பத்தி அப்போவே ஒரு பதிவு போட்டாச்சு. அதெல்லாம் கரெக்டா இருப்போம்ல. :)

இலவசக்கொத்தனார் said...

மன்னிக்கவும் வேகப்பந்து வீச்சாளர் அவர்களே. அந்தப் பதிவு நான் பார்க்கவில்லை.

இங்கு எல்லாவற்றையும் தொகுத்து அளித்தது போல் கோர்வையாக இருந்து இது மட்டும் இல்லாததால்தான் சுட்டிக் காட்டினேன்.

உங்கள் உலகக் கோப்பை கவரேஜ் நன்றாக இருக்கிறது.

Naufal MQ said...

இதுக்கு போயி எதுக்கு மன்னிப்பெல்லாம் இ.கொ நண்பரே.

உங்கள் கருத்து & பாராட்டிற்கு நன்றி.

மணிகண்டன் said...

// இலங்கை கூட இந்தியா தோற்றுப்போய்விட்டால் (அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு) //

இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன் :).

சென்ஷி said...

//எனக்கு கிரிக்கெட்டின் மேல் அதீத ஈடுபாடு ஒன்றும் கிடையாது. ஆனாலும் ரசிக்கும் மனம் உண்டு.
இன்றைய உங்கள் எழுத்து உண்மையிலேயே இந்தியா ஜெயிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெய்ஹிந்த்

சென்ஷி
//

வாருங்கள் சென்ஷி,
கருத்துக்கும் இந்தியாவை வந்து வாழ்த்தியமைக்கும் நன்றி. :)

இந்தியா ஜொலிக்கட்டும்.//

நம் நேற்றைய கருத்து (அ) கனவு இன்று பலித்துள்ளது :)

ஜெய்ஹிந்த்

சென்ஷி

Anonymous said...

பாப் உல்மர் கிரிக்கெட் புக்கிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. புக்கிகள், மாப்பியா, விளம்பரதாரர்கள் இவர்களின் கையில் கிரிக்கெட் உள்ளது. பாக்குரவனுங்க தான் கேனயனுங்க.

கார்த்திக் பிரபு said...

its ok thala no probs ..unga kitta niraya edir parkirane

neerum mani kandanum kalakureeru

ennagalala seyya mudiyadhadh neeru seyureeu adhe periya vishyam

oru urimaila than appdi oru coment potane kovam illaye??

Naufal MQ said...

நண்பா கார்த்திக்,
இதுக்கு போயி யாராச்சும் கோவிச்சுப்பாங்களா? நீங்க தவறாம வாசித்து வருவதே எனக்கு பெரிய ஊக்கம். :) நன்றி உங்கள் உரிமைக்கு.

Naufal MQ said...

//Anonymous said...
பாப் உல்மர் கிரிக்கெட் புக்கிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. புக்கிகள், மாப்பியா, விளம்பரதாரர்கள் இவர்களின் கையில் கிரிக்கெட் உள்ளது. பாக்குரவனுங்க தான் கேனயனுங்க.
//

குளத்தோடு கோவிச்சுகிட்டு...

அபி அப்பா said...

// மணிகண்டன் said...
// இலங்கை கூட இந்தியா தோற்றுப்போய்விட்டால் (அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு) //

இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன் :)//

அதே அதே:-))

Anonymous said...

//இலங்கை கூட இந்தியா தோற்றுப்போய்விட்டால் (அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு) //

வாய்ப்பு எப்பிடி ஆச்சுது இப்ப??
உங்களிண்ட அளவுக்குமீறின நம்பிக்கைதான்(உங்கட ரீம் மேல) எனக்கு புரியாத புதிர்..

இனியாவது இந்திய ரீம் காரர் விளம்பரப் படம் நடிக்கிற நேரத்தை குறைச்சு கொஞ்சம் பயிற்சி எடுத்தா பரவாயில்லை..

--இலங்கை அணி ரசிகன்--

சீனு said...

//இனியாவது இந்திய ரீம் காரர் விளம்பரப் படம் நடிக்கிற நேரத்தை குறைச்சு கொஞ்சம் பயிற்சி எடுத்தா பரவாயில்லை..

--இலங்கை அணி ரசிகன்--//

யானை குழியில விழுந்தா, எறும்பு கூட எட்டிப் பாக்குமாம்...

Naufal MQ said...

//வாய்ப்பு எப்பிடி ஆச்சுது இப்ப??
உங்களிண்ட அளவுக்குமீறின நம்பிக்கைதான்(உங்கட ரீம் மேல) எனக்கு புரியாத புதிர்..

இனியாவது இந்திய ரீம் காரர் விளம்பரப் படம் நடிக்கிற நேரத்தை குறைச்சு கொஞ்சம் பயிற்சி எடுத்தா பரவாயில்லை..

--இலங்கை அணி ரசிகன்--
//
இலங்கை ரசிகரே,
வெற்றிக்கு வாழ்த்துக்கள் முதலில்.

எங்கள் அணிக்கு நாங்கள் ஆதரவளிக்காமல், நாங்கள் நம்பிக்கையூட்டாமல் வெறு நார் வந்து ஊட்டுவார்கள். எங்கள் அணி தோற்றதில் வருத்தமிருந்தாலும், எங்களுக்கு இத்துடன் உலகம் இருண்டுவிட போவதில்லை. உ.கோ எஞ்சியிருக்கும் போட்டிகளை கண்டு, நல்லதொரு போட்டிகளை காணுவோம். எளிதில் உணர்ச்சிவசப்படுவர்கள் எல்லாரும் அல்ல. எங்களில் பலர் இதை விளையாட்டாக எடுக்கத் தெரிந்தவர்கள்.

மீளுவோம் விரைவில். தங்கள் ஆதங்கத்திற்கு நன்றி.

Naufal MQ said...

//சீனு said...

@
--இலங்கை அணி ரசிகன்--

யானை குழியில விழுந்தா, எறும்பு கூட எட்டிப் பாக்குமாம்...
//

:)

சீனு said...

//எங்கள் அணி தோற்றதில் வருத்தமிருந்தாலும், எங்களுக்கு இத்துடன் உலகம் இருண்டுவிட போவதில்லை.//
//மீளுவோம் விரைவில். தங்கள் ஆதங்கத்திற்கு நன்றி.//

அதே...ஜெயிச்சா இவிங்களுக்கு நக்கல் வந்துடுது...

மிஸ்டர். ஸ்ரீலங்கன், எங்களுக்கு ஜெயிச்சா தலையில வெச்சு கொண்டாடவும் தெரியும், தோத்தா வீட்ட இடிக்கவும் தெரியும். அத நாங்க பாதுக்கிறோம்...நீங்க உங்க வேலைய பாருங்க.

Naufal MQ said...

//அதே...ஜெயிச்சா இவிங்களுக்கு நக்கல் வந்துடுது...

மிஸ்டர். ஸ்ரீலங்கன், எங்களுக்கு ஜெயிச்சா தலையில வெச்சு கொண்டாடவும் தெரியும், தோத்தா வீட்ட இடிக்கவும் தெரியும். அத நாங்க பாதுக்கிறோம்...நீங்க உங்க வேலைய பாருங்க.
//

அதுக்காக நீங்க யாருடைய வீட்டையும் இடிச்சுடாதீங்க.

விடுங்கள் இந்த மிஸ்டர் ஸ்ரீலங்கனை. ஏதோ தெரியாம ஆர்வக் கோளாரில் பேசிவிட்டார்.

அபி அப்பா said...

//யானை குழியில விழுந்தா, எறும்பு கூட எட்டிப் பாக்குமாம்...
//
சரி சீனு சரி!
நீங்கவேனா பாருங்க பர்முடா பங்களிய துவச்சி தொங்க போட்டு பின்ன நாங்க வந்து கப்பை தட்டிகிட்டு வந்து காட்டலை.. அப்ப இருக்குடி உனக்கு:-))

Naufal MQ said...

//சரி சீனு சரி!
நீங்கவேனா பாருங்க பர்முடா பங்களிய துவச்சி தொங்க போட்டு பின்ன நாங்க வந்து கப்பை தட்டிகிட்டு வந்து காட்டலை.. அப்ப இருக்குடி உனக்கு:-))
//
அபிஅப்பா,
உங்களுக்கே இது டூமச்சா தெரியல. :)

Anonymous said...

//ஏதோ தெரியாம ஆர்வக் கோளாரில் பேசிவிட்டார்.//
ஆர்வக்கோளாறு ஒண்டுமில்லை..

நான் ஒண்டும் உங்களைமாதிரி மணித்தியாலக்கணக்கில ரீவிக்கு முன்னால இருந்தெல்லாம் மச் பாக்கிறது கிடையாது, அதுக்கு நேரமும் இல்லை..
சும்மா news உம் highlights உம் தான்..

//ஜெயிச்சா இவிங்களுக்கு நக்கல் வந்துடுத.//

எனக்கு ஒண்டும் உங்களை நக்கலடிச்சு காலம்தள்ளுற அவசியம் இல்ல சரியோ..
நீங்கள்தான் உலகக்கோப்பைக்கு தனிய sites என்ன blogs என்ன, ஒரே அமர்க்களமா இருந்துச்சுது,
நானும் பேசாம பாத்துக்கொண்டுதான் இருந்தன்..

வாஸும் முரளியும் இல்லாத ரீமை சொந்த நாட்டில வெண்டதை எல்லாம் ஒப்பிட்டு பெரிய ஆய்வுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தியள்..
கட்டாயம் வெல்லுறதுதான் எண்டெல்லாம்..

இண்டைக்கு காலமை பாத்தா ஒரே அழுகையும் புலம்பலுமா இருந்துச்சுது.,
சரி என்னடா இவ்வளவு feel பண்ணுறாங்களே எண்டுபோட்டு சும்மா 2 பதிவை வாசிச்சிட்டு ஒரு பின்னூட்டம் போட்டா கிளம்பி வாறீங்களோ சண்டைக்கு?
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை கண்டியளோ..

இந்தியா நேற்று தோத்தது படு கேவலமா, அதுக்குள்ள இலங்கை வடிவா விளையாடேல்ல, நாங்கள்தான் பிழை விட்டம் எண்டெல்லாம் மீசையில மண்படாத கதையெல்லாம் கனபேர் கதைக்கினம்..

இனி பெர்முடா பங்களாதேசை வெண்டா எப்பிடி super 8 போகலாம் எண்டு யோசிச்சா இன்னும் ரெண்டு நாளைக்கு காலம் தள்ளலாம்..

உந்த சில பேர் மாதிரி விசர்க்கூத்து எல்லாம் ஆட நான் தயாரில்லை.

Big GOOD BYE

Naufal MQ said...

ஸ்ரீலங்கன் நண்பரே,
ஒன்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு யாரும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. நீங்களும் அந்த நோக்கில் பேசாமல் இருந்திருக்கலாம். பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

//நான் ஒண்டும் உங்களைமாதிரி மணித்தியாலக்கணக்கில ரீவிக்கு முன்னால இருந்தெல்லாம் மச் பாக்கிறது கிடையாது, அதுக்கு நேரமும் இல்லை..
சும்மா news உம் highlights உம் தான்..
//
நல்ல பழக்கம்.

//எனக்கு ஒண்டும் உங்களை நக்கலடிச்சு காலம்தள்ளுற அவசியம் இல்ல சரியோ..
நீங்கள்தான் உலகக்கோப்பைக்கு தனிய sites என்ன blogs என்ன, ஒரே அமர்க்களமா இருந்துச்சுது,
//
என்னுடைய இந்த பவுன்ஸர் உ.கோ-க்காக தொடங்கப்பட்டதில்லை. ஜஸ்ட் ஃபார் கிரிக்கெட் அவ்வளவுதான். உ.கோ முடிந்தாலும் தொடரும்.

//வாஸும் முரளியும் இல்லாத ரீமை சொந்த நாட்டில வெண்டதை எல்லாம் ஒப்பிட்டு பெரிய ஆய்வுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தியள்..
கட்டாயம் வெல்லுறதுதான் எண்டெல்லாம்..
//
அய்யா, வாஸும் முரளியும் கடந்த தொடரில் மட்டும்தானே பங்கெடுக்கவில்லை. அதற்கு முன்பு இந்தியா வந்து 6-1 என்ற கணக்கில் இருவரும் வருத்தெடுக்கப்பட்டார்களே அப்போ??? விளையாட்டில் ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதவை. என்னைக் கேட்டால் இலங்கையுடனான உ.கோ போட்டியில் கூட வாஸுக்கும் முரளிக்கு நல்ல காலம் என்று சொல்லுவேன். இந்திய பேட்ஸ்மென் செய்த தவறுகள் தான் விக்கெட்டுகள் விழ காரணம். மற்றபடி தாங்கள் நினைப்பதுபோல வாஸும் முரளியும் ஒன்றும் கிளித்துவிடவில்லை. இதையெல்லாம் நீங்கள் ரீவி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். சரி விடுங்கள். நாங்கள் தோற்றுவிட்டோம். நீங்கள் உங்கள் திருவாய் மலர நாங்கள் தோற்க வேண்டியிருந்திருக்கிறது. :)

//இனி பெர்முடா பங்களாதேசை வெண்டா எப்பிடி super 8 போகலாம் எண்டு யோசிச்சா இன்னும் ரெண்டு நாளைக்கு காலம் தள்ளலாம்..

உந்த சில பேர் மாதிரி விசர்க்கூத்து எல்லாம் ஆட நான் தயாரில்லை.
//
நீங்கள் கூட உ.கோ வென்ற முதல் சுற்று கடக்க இரண்டு அணிகள் இலங்கையுடன் ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டியிருந்தது. :P

நீங்கள் விசரக்கூத்து ஒன்றும் ஆட வேண்டாம். அது எங்கள் இந்தியர்களுடன் போகட்டும்.

//Big GOOD BYE //

கிரிக்கெட்டில் ஆர்வமிருந்தால் உங்களுக்கு எப்பொழுதும் இந்த பவுன்ஸர் கதவு திறந்தே இருக்கும். நமக்குள் நடந்த விவாதங்கள் கிரிக்கெட் என்னும் ஆட்டத்தை பற்றியதாக மட்டுமே இருக்கட்டும்/ எடுத்துக்கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்கு நன்றி.