Wednesday, March 14, 2007

கவாஸ்கர் Vs பாண்டிங் - பாகம் 2

கவாஸ்கர்- பாண்டிங் இடையேயான சொற்போர் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தில் அடிக்கும் லூட்டி குறித்து கவாஸ்கர் சிறிது நாட்களுக்கு முன் கருத்து கூறியிருந்தார். அதற்கு பாண்டிங்கும் தன் பங்கிற்கு கவாஸ்கரையும் இந்திய அணியையும் திட்டி தீர்த்தார். அது இன்னும் ஓய்ந்தபாடில்லை. கவாஸ்கர் மீண்டும் பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக பேசிய கவாஸ்கர்:

நான் 1981-ம் ஆண்டு மைதானத்திலிருந்து வெளியேற காரணம் ஆஸ்திரேலிய வீரர்கள் தான். அவர்கள் என்னை வசைமொழிந்ததால்தான் நான் வெளியேற நேரிட்டது.

இதுபோல அவர்கள் தொடர்ந்து வசைமொழிகளை மற்ற அணி வீரர்கள் மீது பயன்படுத்தினால் ஒருநாள் இல்லை ஒருநாள் யாராவது ஒருவர் ஆஸ்திரேலிய வீரரை மைதானத்திலேயே தாக்கும் நிலை ஏற்படும். மதுபான விடுதிகளில் ஆஸ்திரேலியர்கள் இதுபோல வசைமொழிந்துவிட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட முடியுமா? இதற்கு எடுத்துக்காட்டாக மதுபான கடையில் தாக்கப்பட்டு உயிரிழந்த வீரர் டேவிட் ஹூக்ஸ்-ஐ கூறலாம்.

என்று காட்டமாக பதிலளித்துள்ளார். இருவரின் பனிப்போர் நன்றாக சூடுபிடித்துள்ளது. தற்போதய ஸ்கோர் கவாஸ்கர் 2 பாண்டிங் 1.

வேடிக்கை பார்த்துவரும் நமக்கெல்லாம் கொண்டாட்டம்தானே?

8 comments:

வினையூக்கி said...

//மதுபான விடுதிகளில் ஆஸ்திரேலியர்கள் இதுபோல வசைமொழிந்துவிட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட முடியுமா? //
ரிக்கி பாண்டிங்கே ஒரு முறை இரவு ஆட்ட விடுதியில் அடி வாங்கிவந்தவர்தான், 96-97 சீஷனில் கோல்கத்தாவில் இச்சம்பவம் நடந்தது,

முத்துகுமரன் said...

//ஒருநாள் இல்லை ஒருநாள் யாராவது ஒருவர் ஆஸ்திரேலிய வீரரை மைதானத்திலேயே தாக்கும் நிலை ஏற்படும்//
பட்ட பின்புதான் அவனுகளுக்கு புத்தி வரும். தகாத வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினால் பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்காது எதிரணியினர் புகார் கொடுக்க வேண்டும். கவாஸ்கர் சரியாக சொல்லி யிருக்கிறார்.

Naufal MQ said...

// வினையூக்கி said...
ரிக்கி பாண்டிங்கே ஒரு முறை இரவு ஆட்ட விடுதியில் அடி வாங்கிவந்தவர்தான், 96-97 சீஷனில் கோல்கத்தாவில் இச்சம்பவம் நடந்தது,
//

இங்க பாருங்க மக்களே! கொஞ்சம் கொஞ்சமா மேட்டரெல்லாம் ரிலீஸ் ஆவுது. :)

நண்பர் வினையூக்கி,

நான் கூட பாண்டிங் ஆஸியில் உள்ள ஏதோ ஒரு மதுபான விடுதியில் கலாட்டா செய்ததாக படித்திருக்கிறேன்.

அதெல்லாம் இருக்கட்டும். அவனுங்க பார்ல எப்படி நடந்துகிட்ட நமக்கென்ன? மைதானத்துல ஒழுங்கா நடந்தா சரிதான். என்ன சொல்றீங்க?

Naufal MQ said...

நண்பர் முத்துக்குமரன்,

அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு உங்கள் கனவு நனவாகுமா?

மணிகண்டன் said...

கவாஸ்கர் தேவையில்லாம சண்டைய வளர்க்கிற மாதிரி தோனுதுங்க எனக்கு. என்ன சொல்றிங்க நண்பரே?

நாகு (Nagu) said...

ICC இந்த வசைமொழி பிரச்னைக்கு ஏன் முடிவு கட்டக்கூடாது? இரண்டு டிசிப்ளினரி ஆக்ஷன் எடுத்தால் எல்லோரும் வாயை மூடிக் கொள்வார்கள்.

இவ்வளவு டெக்னாலஜி இருக்கும்போது ஏன் பிட்சில் நடக்கும் பேச்சுகளை எல்லோரும் கேட்குமாறு ஒலிப்பரப்பினாலே போதுமே...

Naufal MQ said...

//மணிகண்டன் said...
கவாஸ்கர் தேவையில்லாம சண்டைய வளர்க்கிற மாதிரி தோனுதுங்க எனக்கு. என்ன சொல்றிங்க நண்பரே?
//
சண்டையை வளர்க்கிறார் என்பது சரி. ஆனால், தேவையில்லாமல் இல்லை.. ஒரு தேவையோடுதான். :) He is using Aussies trick.

Naufal MQ said...

//Nagu said...
ICC இந்த வசைமொழி பிரச்னைக்கு ஏன் முடிவு கட்டக்கூடாது? இரண்டு டிசிப்ளினரி ஆக்ஷன் எடுத்தால் எல்லோரும் வாயை மூடிக் கொள்வார்கள்.

இவ்வளவு டெக்னாலஜி இருக்கும்போது ஏன் பிட்சில் நடக்கும் பேச்சுகளை எல்லோரும் கேட்குமாறு ஒலிப்பரப்பினாலே போதுமே...
//

நல்லா சொன்னீங்க நாகு. இதே வசைமொழி நம்ம ஆளுங்க மைதானத்துல சொன்னா மட்டும் ஐ.சி.சி-க்கு பொத்துகிட்டு வந்துடும். :(