தமிழ்மணத்தில் 'எனக்கு பிடித்த/பிடிக்காத ஆறு' என்று அனேக வலைப்பதிவர்கள் பதிவிட்டு கலக்கி வந்ததை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். இப்போது அதே வரிசையில் இன்னொருவர் இணைந்திருக்கிறார். ஆனால் இவர் வலைப்பதிவரும் இல்லை. இவர் பதிந்திருப்பது தமிழ் வலைப்பதிவும் இல்லை.
அவர் தெ.ஆ-வின் நம்பிக்கை நாயகன் கிப்ஸ். அவர் செய்திருக்கும் சாதனை ஒரே ஓவரில் ஆறு 'ஆறு'கள். என்னதான் சொதப்பல் அணிக்கு எதிரான ஒரு சாதனை என்றாலும் கிரிக்கெட் விளையாடுபவர்களுத்தான் தெரியும் அது எத்தனை கடினமான சாதனை என்று. ஒரு சிறுபிள்ளையை பந்து வீச செய்து (அது ரப்பர் பந்தோ ப்ளாஸ்டிக் பந்தோ எதுவாயினும்) நீங்களும் தொடர்ந்து ஆறு சிக்ஸ் அடிக்க முயன்று பாருங்கள். நாக்கு வெளியே தள்ளிடும். அத்தனை கடினம் தொடர்ந்து ஆறு சிக்ஸ் அடிப்பது. டைமிங் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. என்னுடைய கண்ணோட்டத்தில் இச்சாதனை சிறிய அணிக்கு எதிரானதென்றாலும் ஒரு இமயமே. பாராட்டுக்கள் கிப்ஸ்!
உங்கள் பார்வைக்கு கிப்ஸின் ஆறு வீடியோ கீழெ:
7 comments:
//என்னதான் சொதப்பல் அணிக்கு எதிரான ஒரு சாதனை என்றாலும் கிரிக்கெட் விளையாடுபவர்களுத்தான் தெரியும் அது எத்தனை கடினமான சாதனை என்று//
சரியாக சொன்னீர்கள்.
எப்படி வீடியோக்களை பதிவினுள் embed செய்வது? சொல்லித்தர இயலுமா? :-)
என் பதிவில் லிங்க் மட்டுமே கொடுக்க முடிந்தது,
வினையூக்கி,
நிச்சயமாக சொல்லித்தருகிறேன். தங்களின் மின்னஞ்சல் முகவரியை தர இயலுமா?
நெதர்லாந்து வீசிய முதல் ஐந்து ஓவர்கள் பார்த்தீர்களா?
தென்னாபிரிக்காவை வெறும் நான்கு ஓட்டங்களே எடுக்க விட்டார்கள். ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்கள். ஓர் உதிரி ஓட்டம்கூடக் கொடுக்கவில்லை.
திறமையாகத்தான் தொடங்கினார்கள். இரண்டு மட்டையாளர்களும் நிலைபெற்றபின் சமாளிக்க முடியவில்லை. ஒரேசீரான இடைவெளியில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தால் இந்தளவுக்கு மோசமாக இருந்திருக்காது.
என்றாலும் கிப்சின் சாதனை மிகப்பெரியதே. பலவீனமான அணிக்கெதிராக அடிக்கப்பட்டதென்பதால் அதன் பெறுமதி சற்றும்குறைந்ததல்ல.
//Anonymous said...
நெதர்லாந்து வீசிய முதல் ஐந்து ஓவர்கள் பார்த்தீர்களா?
//
இல்லை நண்பரே! நான் மற்ற போட்டியை கண்டுகொண்டிருந்தேன்.
//தென்னாபிரிக்காவை வெறும் நான்கு ஓட்டங்களே எடுக்க விட்டார்கள். ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்கள். ஓர் உதிரி ஓட்டம்கூடக் கொடுக்கவில்லை.
திறமையாகத்தான் தொடங்கினார்கள். இரண்டு மட்டையாளர்களும் நிலைபெற்றபின் சமாளிக்க முடியவில்லை. ஒரேசீரான இடைவெளியில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தால் இந்தளவுக்கு மோசமாக இருந்திருக்காது.
//
அப்படியா! தகவலுக்கு நன்றி. சிறிய அணிகளிடம் உள்ள பின்னடைவே இதுதான். கிடைக்கும் தொடக்கத்தை தொடரத் தெரியாமை. :( அனுபவம் அவர்களுக்கு பாடம் கற்றுத்தரும். நம்புவோம்.
எனக்கு வீடியோ தெறியவில்லையே ஏன்?
//அபி அப்பா said...
எனக்கு வீடியோ தெறியவில்லையே ஏன்?
//
உங்க ரவுசு தாங்காமத்தான். :)
வீடியோ வை பதிவில் உள்ளிட சொல்லிக் கொடுத்தமைக்கு ஒரு பந்துக்கு ஒரு சிக்ஸ்ர் வீதம்
300 * 6 நன்றிகள்.
Post a Comment