Sunday, March 18, 2007

தோனியின் வீடு தாக்கப்பட்டது.

நேற்றைய கேவல தோல்விக்குப் பின் இந்தியாவில் கலவரங்களும் போராட்டங்களும் நடக்கும் என்பது எல்லாரும் எதிர்பார்த்தது. அது இப்போது நடந்து வருகின்றது என்ற செய்தி கேட்டதும் வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கிறது.

ஆம், நாட்டில் பல பகுதிகளிலும் இப்போது போராட்டங்களும், தீயெரிப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதோ செய்தி.

இதில் உச்சமாக தோனியின் வீடு தாக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டின் சுற்றுச்சுவர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு கேவலமான சம்பவம். விளையாட்டை இத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டு பொதுச் சொத்துக்களுக்கும் வீரர்களின் உடமைகளுக்கு தீங்கு விளைவித்தல் எவ்விதத்தில் நியாயம்? :(

17 comments:

அபி அப்பா said...

இது தப்பு. கண்டிக்கப்பட வேண்டியது:((

Naufal MQ said...

அடிச்சாத்தான் புத்திவரும்னா அதுக்காக இப்படியா? பாவம்ல அவனுங்க குடும்பம். :(

முத்துகுமரன் said...

அருவருப்பாக இருக்கிறது ரசிகர்களின் இந்த செயல்கள். வென்றால் தலையில் வைத்து ஆடுவதும் தோற்றால் கீழே போட்டு மிதிப்பதும் மூளை வளர்ச்சியற்றவர்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள். வெற்றி தோல்விகள் விளையாட்டின் தவிர்க்க முடியாத பக்கங்கள். எப்போது உடனிருக்க வேண்டுமோ நம்பிக்கை அளிக்க வேண்டுமோ அப்போது வெந்நீரை வீசுவது வாடிக்கையாகிவிட்டது. இவர்கள் கிரிக்கெட்டை விபச்சாரப்படுத்துகிறார்கள்.

Naufal MQ said...

நண்பரே,

உங்களின் எண்ணம்தான் எனதெண்ணமும். என்று திருந்தும் நம் மக்கள்!!!

Naufal MQ said...

கிரிக்கெட்டிற்காக கிட்னி விற்க ஆயத்தமா இருக்கும் சமூகம் நம் சமூகம். :(

Anonymous said...

விளையாட்டை விளையட்டாக எடுப்பதில்லை. விளையாட்டு ஆதரவளர்களை
அடி முட்டாள்களாகவும், தீவிர வெறியர்களாகவும் உருவாக்கியவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றார்கள். ஆதரவாளர்களை தீவிர வெறியர்களாக்கி குளிர் காய்ந்தவர்கள் ஒரு தடவை பலனை அனுபவிக்க வேண்டாமா? குடும்பம் பட்டினியாக கிடக்க 1000 ரூபாக்கு டிக்கட் வாங்கும்
ஒரு முட்டாள் கூட்டம் இதையும் செய்யும் என உணர இது ஒரு நல்ல வாய்ப்பு. விளையாட்டு அவசியம் வேண்டும். அதற்காக டிக்கட் விலையை யானை விலை குதிரை விலை என் ஏற்றி சொகுசு வாழ்க்கை அனுபவிப்பவர்களுக்கு இது நல்ல பாடம்.‌

புள்ளிராஜா

MUST ATTACK.

மணிகண்டன் said...

தோத்தா கல்லெறியறதும், அடுத்த நாளே ஜெயிச்சா மாலை போடறது இவங்களுக்கு பழக்கமாயிடுச்சு. எப்போ தான் திருந்துவாங்களோ?

lollu-sabha said...

கிரிக்கெட்டில் வெற்றி பெற ரசிகர்கள் யாகம் வளர்க்கிறார்கள். தோல்வி அடைந்தால் வீரர்களின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்கிறார்கள். இரண்டுமே தவறு தான். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Naufal MQ said...

புள்ளிராஜா,
கருத்துக்கு நன்றி.

Naufal MQ said...

//Anonymous said...
MUST ATTACK.
//
இல்லங்க அது தப்பு

Naufal MQ said...

//மணிகண்டன் said...
தோத்தா கல்லெறியறதும், அடுத்த நாளே ஜெயிச்சா மாலை போடறது இவங்களுக்கு பழக்கமாயிடுச்சு. எப்போ தான் திருந்துவாங்களோ?
//
மணிகண்டன், என்ன செய்ய நம் மக்கள் ரொம்ப எமொஷனல். எல்லாத்துலயும் டீ மச் தான்...

Naufal MQ said...

//lollu-sabha said...
கிரிக்கெட்டில் வெற்றி பெற ரசிகர்கள் யாகம் வளர்க்கிறார்கள். தோல்வி அடைந்தால் வீரர்களின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்கிறார்கள். இரண்டுமே தவறு தான். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
//
கருத்துக்கு நன்றி லொல்லுசபா.

Anonymous said...

Not surprising in a country where cricket is a religion and players are God's.
People should realize its just a game at the end of the day reminds me of Bernard shah's saying "11 fools playing and 11000 fools watching"

ofcourse I still support our team even if they mostly wont make it to super8. "Every dog has its day", our day will come :)

Naufal MQ said...

//ofcourse I still support our team even if they mostly wont make it to super8. "Every dog has its day", our day will come :)
//

This is real sprit.

Anonymous said...

check this.. very good article

http://content-usa.cricinfo.com/ci/content/current/story/286676.html