Saturday, March 24, 2007

நன்றி! நன்றி!! நன்றி!!!

நேற்றைய ஆட்ட முடிவுக்குப் பின் பல ரசிகர்கள் மனமுடைந்து வெறுத்துப் போனாலும், பல்வேறு தரப்புகளிலிருந்து இந்த உதவாக்கரை இந்திய அணிக்கு நன்றிகள் குவிந்தவாறு உள்ளது. அவர்களை மேலும் இன்னலுற செய்யாதிருந்தமைக்காக இந்த உதவாக்கரை அணியை பாராட்டியும் உள்ளனர். அந்த பல்வேறு தரப்புகள்.

* உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள். இவர்கள், ஒருதரப்பு (One sided) போட்டிகளை விரும்பாதவர்கள். சூப்பர் 8-லும் இந்தியா நுழைந்து இந்தியாவிற்கெதிரான ஒருதரப்பு போட்டிகளை காண விரும்பாதவர்கள். இனியாவது நல்ல போட்டிகள் காண (சூதாட்ட புகார்கள் இல்லாத போட்டிகள்) வழிசெய்ததற்காக இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

* தூக்க விரும்பிகள். கிரிக்கெட்டும் பிடிக்கும் தூக்கமும் பிடிக்கும். இவர்களுக்கு இந்தியா பங்குபெறும் போட்டிகள் என்றால் உயிர். தூக்கம் துறந்து கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற இக்கட்டிலிருந்து விடுதலை வாங்கி தந்த இந்திய அணிக்கு நன்றி கூறுகின்றனர் இவர்கள்.

* நிறுவனங்களின் முதலாளிகள். இவர்களின் நிறுவனங்களில் உ.கோப்பை நடைபெறும் நாட்களில் (பெரும்பாலும் இந்திய போட்டிகள்) இவர்களின் உற்பத்தி திறன்(productivity) பாதிக்கப்படுவதாக புலம்பித்திரிந்தவர்கள் இப்போது மகிழ்ச்சியில் உள்ளனர். அலுவலகத்தில் தூங்குபவர்கள்/கிரிக்கெட் பேசியே நேரம் கடத்துபவர்கள் இனி குறைவார்கள் என்பதனால்.

* மனைவிமார்கள். தங்களின் கனவன்மார்கள் உ.கோ தொடங்கியதிலிருந்து 'மந்திரிச்சி விட்ட கோழி' மாதிரி நடமாடுவதாக புகார் செய்தவர்கள். குடும்பத்தில் கனவன் -மனைவி உறவுக்கே இந்த கிரிக்கெட் ஆப்பு வைக்கிறதே என்று அங்கலாய்த்தவர்கள். அவர்களும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்ததோடு பாராட்டியுள்ளனர். பாராட்டு, கனவர்மார்களுக்கு பெரிய ஆப்பு வைத்ததால்.

* மாணவர்கள். இறுதித்தேர்வு நேரத்தில் உ.கோ வருகிறதே என்று கவலைப்பட்டவர்கள். இறுதியில் கிரிக்கெட்டிற்கே முக்கியத்துவம் தந்து இராப்பகலாக படிக்காமல் கிரிக்கெட் பார்த்தே படிப்பை கோட்டை விட இருந்தவர்கள். நல்ல வேளை தமது எதிர்கால வாழ்க்கையை கடைசி நேரத்திலாவது காப்பாற்றிய இந்திய அணியை காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆக, இத்தனை பேரின் வாழ்வில் சுடர் ஏத்திய அணிக்கு எல்லாரும் ஜோரா ஒரு 'ஓ' போடுங்க. மேலும் வேறு யாரேனும் இந்திய அணிக்கு நன்றி கூற வேண்டுமாயின் தயக்கமின்றி இங்கே தெரிவிக்கலாம்.

11 comments:

வல்லிசிம்ஹன் said...

இதையும் சொல்லுங்க.
இவன் அடிப்பானா, அவன் அடிப்பானா.
இந்தப் பந்தை இப்படி ஹாண்டில் பண்ணது தப்பு.
சச்சினுக்கு வந்த சோதனையைப் பாருப்பா.

உண்டு கொழுத்து, பணம் சம்பாதித்துப்
பின்னால் ஆட வந்தால் இப்படித்தான் ஆகும்னு புலம்பறது.
இத்தனையும் கேட்க வேண்டிய கொடுமை.தோல்வியே தார மந்திரம்னு சொல்லாமல் சொல்லும்(விளையாடிய) முகங்கள்.
199.99$ கொடுத்துக் கிரிக்கட் (இதுமாதிரி) பாக்கணுமானு இந்த ஊர்க்காரங்களோட வருத்தம்.

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.ஆறுதலா இருக்கு.

Naufal MQ said...

விடுங்கள் வல்லிசிம்ஹன். இன்று நல்ல போட்டிகள் வர இருக்கின்றன. Lets enjoy the game of Cricket.

நாகை சிவா said...

நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

நன்றிகள் பல கோடி!!!

வெண்பா said...

அப்பாடா, இனி கிரிக்கெட்டை ரசிக்கலாம்.

நாகை சிவா said...

பாஸ்ட், இதையும் வந்து பாரும்!

http://tsivaram.blogspot.com/2007/03/2011.html

நாகை சிவா said...

//199.99$ கொடுத்துக் கிரிக்கட் (இதுமாதிரி) பாக்கணுமானு இந்த ஊர்க்காரங்களோட வருத்தம்.//

வல்லி, 250 $ இங்க :-(((((((

// Lets enjoy the game of Cricket.
//

இது நூத்துக்கு 100 சரி

அபி அப்பா said...

நன்னி நன்னி நன்னி நன்னி நன்னி நன்னி அட போங்கப்பா:-(((

Naufal MQ said...

//நாகை சிவா said...
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

நன்றிகள் பல கோடி!!!
//
நூறு கோடி நன்றி?

Naufal MQ said...

//veebee said...
அப்பாடா, இனி கிரிக்கெட்டை ரசிக்கலாம்.
//
மிகச் சரி.

Naufal MQ said...

//நாகை சிவா said...

வல்லி, 250 $ இங்க :-(((((((

//

சிவா,
பரவாயில்லை பிச்சைபோட்டதா நினைச்சு விட்ருங்க.

Naufal MQ said...

// அபி அப்பா said...
நன்னி நன்னி நன்னி நன்னி நன்னி நன்னி அட போங்கப்பா:-(((
//

அபிஅப்பா கூல்டவுன்.