இரண்டு நாட்களுக்கு முன் சுனில் கவாஸ்கர் ஒரு நாளேட்டிற்கு அளித்த பேட்டியில்:
கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியவை மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் உள்ளது. இதுதான் அவர்கள் கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறப்பதற்கு காரணமாக உள்ளது. ஆனால், அதே வேளையில் அவர்கள் களத்தில் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களிடையே வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாக உள்ளது. இந்த நடத்தை விசயத்தில் ஐ.சி.சி யும் ஒருசார்பு நிலையை கடைபிடித்து வருவது வருத்தமளிக்கத்தக்கது.
என்று அந்த பேட்டியில் போரை தொடங்கி வைத்தார்.
அதற்கு 'தி ஆஸ்திரேலியன்' நாளேட்டிற்கு பதிலளிக்கும் விதமாக பாண்டிங் பேட்டியளித்தது தான் பனி-போரின் உச்சகட்டம்.
கவாஸ்கர் தனது காலத்தில் கிரிக்கெட்டை எவ்வாறு விளையாடினார் என்பது பற்றி எல்லாருக்கும் தெரியும். அது நமக்கு தெரியாதா என்ன?
1980-81-ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, மெல்பர்னில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் டென்னிஸ் லில்லியின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனதாக நடுவர் தெரிவித்தார். ஆனால், அது முறையற்றது என்று கவாஸ்கர் வாதாடியதோடு தன்னுடன் பேட்டிங் செய்த சவுகானையும் வெளியே அழைத்துச் சென்றார். இவ்வாறு நடந்து கொண்ட கவாஸ்கர் எங்களை விமர்சிக்க தகுதியற்றவர்.
கடந்த 12 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்த காலகட்டங்களில் கவாஸ்கர் இந்திய
அணியில் முக்கிய அங்கம் வகித்தவர். எனவே இந்த தோல்விகளில் அவருக்கும் பொறுப்புள்ளது. எனவே, இந்திய அணியினரின் ஆட்டம் பற்றி மட்டும் கவாஸ்கர் கவலைப்பட்டாலே போதும். நாங்கள் விளையாடிய 10 டெஸ்டிலும் வென்றுள்ளோம். எனவே, எங்களை
பற்றிய கவனம் அவருக்கு தேவையற்றது.
ஆக, உலகக் கோப்பை துவங்கிய கையோடு இருவருக்கும் இடையே பனிப்போரும் துவங்கியுள்ளது. இது இருவருக்கிடைப்பட்டதாயினும் இரு நாடுகளையும் வம்புக்கு இழுத்துள்ளனர் இருவரும்.
பாண்டிங் கூறுவது போல் கவாஸ்கர் இந்திய அணியின் வெற்றிக்கு பாடுபடட்டும் முதலில். எல்லாரும் இணைந்து நல்ல வலிமைமிக்க இந்திய அணியை உருவாக்கி எல்லாரையும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திக் காட்டுங்கள். பின்பு கவாஸ்கர் இது போன்று நாக்கு மேல் பல் போட்டு பேசலாம். அதுவரை கவாஸ்கர் முதலில் தமது ................................
25 comments:
யோவ் வெண்ணெய்
என்னவே பாண்டிங்குக்கு வக்காலத்து வாங்குதீரு? கவாஸ்கர் உள்ளதத்தானே சொன்னாரு.
ஸ்லிப்ல நின்னுகிட்டு "இவன் இங்க பேட் பண்ணிக்கிட்டு இருக்கான். அங்க அவன் பெண்டாட்டி யாரு கூட ஆடிக்கிட்டு இருக்காளோ?'ன்னு கேக்குற விவஸ்தை கெட்ட பசங்கதான் ஆஸி கிரிக்கெட்ல இருக்குறவனுங்க.
நீரு பேட்டை புடிக்கும்போது ஸ்லிப்ல நின்னுகிட்டு எவனாவது இப்படி பேசினா நீரு எதைப் பொத்துவீரு?
சாத்தான்குளத்தான்
வாங்க அண்ணாச்சி,
ஆஸ்திரேலியக்காரங்க ஸ்லெட்ஜிங் செய்வார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நான் கேள்விப்பட்டதுவரை அவர்கள் குடும்ப/சொந்த பிரச்சனைகளை வைத்து கேளி செய்ததில்லை. நிறத்தை வைத்து செய்துள்ளார்கள்.
நீங்கள் சொன்னது மாதிரி ஒன்றும் அவர்கள் செயலை ஆதரிக்க முன்வரவில்லை. ஆனால், கவாஸ்கர் அதைச் செய்ததுதான் எனக்கு பிடிக்கவில்லை. நமது அணி நாறிக் கொண்டிருக்கும் போது இது தேவையா? என்பதே எனது கேள்வி.
சரி சரி. அண்ணாச்சி ரொம்ப கொதிச்சு போயி இருக்குற மாதிரி தெரியுது. கூலா ஒரு சாயா கொடுங்கப்பா.
//நல்ல வலிமைமிக்க இந்திய அணியை உருவாக்கி எல்லாரையும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திக் காட்டுங்கள். பின்பு கவாஸ்கர் இது போன்று நாக்கு மேல் பல் போட்டு பேசலாம்.
//
அண்ணாச்சி,
மேலே தடித்த எழுத்திலுள்ளவற்றை கவனிக்கவும். :)
நிறத்தை வைத்து கேலி செய்வது பரவாயில்லையா!!!???
ஆனால் கவாஸ்கருக்கு நன்றாக வேண்டும். அவர் கிரிக்கெட் ஆடியதைவிட அரசியல் ஆடியதுதான் அதிகம். ஜெயித்துக் காட்டிவிட்டு பேசட்டும் என்பது நல்ல அடி. ஸ்லெட்ஜிங் மோசமானது என்றாலும் ஒரு போட்டி மனப்பான்மைக்கும், கொலை செய்யவேண்டும் என்ற வெறிக்கும்(அதாங்க கில்லர் இன்ஸ்டிங்ட் :-)) உதவும். இருந்திருந்தால் இவ்வளவு நாள் ஜெயிக்கவேண்டிய பல போட்டிகளில் ஜெயித்திருப்போம். கேப்டனுக்கு திமிர் வேண்டியதுதான். எப்போதெல்லாம் திமிர் பிடித்த கேப்டன் இருந்தாரோ, அப்போதெல்லாம் வெற்றி கண்டிருக்கிறோம்.
வாருங்கள் நாகு,
நிறத்தை வைத்து கேலி செய்வது ஆதரிக்க முடியாத ஒன்றுதான். நான் எங்கும் அதை ஆதரிக்கவில்லையே நண்பரே.
//ஆனால் கவாஸ்கருக்கு நன்றாக வேண்டும். அவர் கிரிக்கெட் ஆடியதைவிட அரசியல் ஆடியதுதான் அதிகம். ஜெயித்துக் காட்டிவிட்டு பேசட்டும் என்பது நல்ல அடி. ஸ்லெட்ஜிங் மோசமானது என்றாலும் ஒரு போட்டி மனப்பான்மைக்கும், கொலை செய்யவேண்டும் என்ற வெறிக்கும்(அதாங்க கில்லர் இன்ஸ்டிங்ட் :-)) உதவும். இருந்திருந்தால் இவ்வளவு நாள் ஜெயிக்கவேண்டிய பல போட்டிகளில் ஜெயித்திருப்போம். கேப்டனுக்கு திமிர் வேண்டியதுதான். எப்போதெல்லாம் திமிர் பிடித்த கேப்டன் இருந்தாரோ, அப்போதெல்லாம் வெற்றி கண்டிருக்கிறோம்.
//
நீங்கள் சொன்னது 100% சரி.
Fast Bowler,
முன்னாள் வீரர் என்ற முறையில் பல பேர் பல அணிகளைப் பற்றி கருத்து கூறுகின்றனர். அதுபோல் கவாஸ்கர் கூறியிருப்பது போல்தான் ஐசிசியும் ஆஸ்திரேலியாவும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஏராளமான நிகழ்வுகள் உள்ளன். இதை யாரும் மறுக்க முடியாது..
ஆஸ்தேரிலியாவில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் அந்த நாட்டு வர்ணனையாளர்கள் கூறும்போது
மெக்ராத் பவுலிங் பார்த்து Aggressive என்றார்கள்..
அதே Srinath பவுலிங் பார்த்து Frustration என்றார்கள்..
உடன் அமர்ந்த கவாஸ்கர் இதை அப்போதே தட்டி கேட்டார்.. அதற்கு பதில் ஏதும் இல்லை..
இப்படிதான் அவர்கள்.. ம்ம்ம்ம்
//கேப்டனுக்கு திமிர் வேண்டியதுதான். எப்போதெல்லாம் திமிர் பிடித்த கேப்டன் இருந்தாரோ, அப்போதெல்லாம் வெற்றி கண்டிருக்கிறோம்.
//
கேப்டனுக்கு திமிரும்,கொலை வெறியும் வேண்டியது தான். ஆனால் அது மைதானத்திற்கு உள்ளே மட்டும் தான். இது போன்ற பேட்டிகளில் அல்ல. கவாஸ்கர் சொன்னதில் பெரிய குற்றம் இருப்பதாக எனக்கு தெரியலைங்க. சொன்ன நேரம் வேணா தப்பா இருக்கலாம். அவர் ஆஸ்திரேலியாவை பாரட்டியும் தான சொல்லியிருகிறாரு. இவ்வளவு திற்மையிருந்தும் மைதானத்துல நடந்துக்கற விதத்தால வெறுப்பு வருதுனு நல்லவிதமா சொன்னமாதிரி தான் தோனுது. ஒரு பண்பட்ட கேப்டன், இந்த மாதிரி திருப்பி தாக்க மாட்டாரு. அப்படியே தாக்கறதா இருந்தாலும் கவாஸ்கரை பத்தி பேசலாமே தவிர இந்திய அணிய எதுக்கு வம்புக்கு இழுக்கனும்?
வெற்றிகள் அடக்கத்த தான் தரனுமே தவிர இதுபோன்ற மமதை தரக்கூடாது. ஆஸ்திரேலியா என்ன கிரிக்கெட் ஆரம்பிச்ச காலத்தில இருந்து ஜெயிச்சுகிட்டேவா இருக்கு. எல்லா நாட்டுக்கும் ஒரு டைம் இருக்குங்க. 1970,1980ல மேற்கிந்தியத்தீவுகள் டாமினேட் பண்ண மாதிரி. அது நிரந்தரமில்லை. இந்த உலகக்கோப்பைல வாங்கப்போற மரண அடியாவது ஆஸ்திரேலியாவுக்கு, குறிப்பாக பாண்டிங்குக்கு புத்தியை கொடுக்கட்டும்.
//ஆஸ்திரேலியக்காரங்க ஸ்லெட்ஜிங் செய்வார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நான் கேள்விப்பட்டதுவரை அவர்கள் குடும்ப/சொந்த பிரச்சனைகளை வைத்து கேளி செய்ததில்லை. நிறத்தை வைத்து செய்துள்ளார்கள்.
//
அனைத்து வகையான ஸ்லெட்ஜிங்குக்கு மொத்த குத்தகை எடுத்து இருக்கவங்க ஆஸ்திரேலியா தான். ஆடுபவரின் மனைவி, குடும்ப பெண்களை கேலி பண்ரது ஆஸ்திரேலியாவுக்கு கைவந்த கலை. உதாரணத்துக்கு
Rod Marsh and Ian Botham
When Botham took guard in a Ashes match, Marsh welcomed him to the wicket with the immortal words: "So how's your wife and my kids?"
Botham Replied "My wife is fine, kids are mentaly retarded"
திறமையான் அணிங்கறதால செய்யறது எல்லம் நியாயம் ஆகிடாது.இது ஆஸ்திரேலியா மற்றும் பாண்டிங்க்குகு எதிரான எனது கருத்துகள் மட்டுமே. யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்த அல்ல.
//சிவபாலன் said...
ஆஸ்தேரிலியாவில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் அந்த நாட்டு வர்ணனையாளர்கள் கூறும்போது
மெக்ராத் பவுலிங் பார்த்து Aggressive என்றார்கள்..
அதே Srinath பவுலிங் பார்த்து Frustration என்றார்கள்..
//
சிவபாலன்,
இதுபோல வர்ணனை பல நேரங்களில் நானும் கேட்டுள்ளேன். கொடுமை.
என்னுடைய வருத்தமெல்லாம், கவாஸ்கர் போன்ற மூத்த வீரர்கள் இதுபோன்ற தேவையற்ற செய்திகளில் அடிபடாமல் இந்திய அணியின் வெற்றிக்கு தன்னால் இயன்றவற்றை பங்களிக்கலாமே. அப்போ பூனைக்கு யார் மணி கட்டுவதென்று கேட்கிறீர்களா? நண்பரே, கிரிக்கெட் பந்தயங்கள் ஜெண்டில் மென்'ஸ் கேம்-னு சொன்னதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம், கென்யா அணியினர் கூட ஒரு வெறியுடன் ஆடி வருகின்றனர். இந்திய அணி கூட ஸ்லெட்ஜிங் செய்ய தொடங்கிவிட்டது. ஞாபகம் உள்ளதா ஸ்டீவ் வாகின் கடைசி போட்டியில் நம்ம பார்தீவ் படேல் செய்த ஸ்லெட்ஜிங்? எந்த ஒரு அணியும் ஸ்லெட்ஜிங்/டீசிங் இல்லாமல் இப்போதெல்லாம் கிரிக்கெட் ஆடுவதில்லை. காலத்தின் கட்டாயமோ என்னவோ. அதனால், மூத்த வீரர்கள் இதில் தங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்பதே எனதெண்ணம்.
ஆனால், எல்லா அணியினரும் ஸ்லெட்ஜிங் செய்து வரும் போது துனை-கண்ட அணிகள் மீது மட்டும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் ஐ.சி.சி-யின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
//மணிகண்டன் said...
திறமையான் அணிங்கறதால செய்யறது எல்லம் நியாயம் ஆகிடாது.இது ஆஸ்திரேலியா மற்றும் பாண்டிங்க்குகு எதிரான எனது கருத்துகள் மட்டுமே. யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்த அல்ல.
//
நிச்சயமாக நியாயம் என்பது எல்லாருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும். நான் எங்கேயும் என் பதிவில் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கையை ஆதரிக்கவில்லை நண்பரே.
மற்றபடி, நண்பர் சிவபாலனுக்கு கூறியுள்ள எனது பதிலையும் வாசிக்கவும்.
//நான் எங்கேயும் என் பதிவில் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கையை ஆதரிக்கவில்லை நண்பரே.
//
நீங்க ஆஸ்திரேலியாவை ஆதரிக்கறதா நான் சொல்லலை நண்பா. பாண்டிங் மீதான கோபத்தை தான் சொன்னேன்.
நீங்க சொன்ன மாதிரி கவாஸ்கரும் தேவையில்லாம மூக்கை நுழைக்காம், எதாவது உருப்படியான யோசனை சொல்லியிருக்கலாம்!
மணிகண்டன்,
தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
//நீங்க சொன்ன மாதிரி கவாஸ்கரும் தேவையில்லாம மூக்கை நுழைக்காம், எதாவது உருப்படியான யோசனை சொல்லியிருக்கலாம்!
//
அதே அதே!!
I fully agree with Gavaskar's views. Even though Australia have excelled in all the fields & won most of the matches, they have failed to win the hearts of the people unlike late 70 - early 80's WI team.
Gavaskar also explained this in the programme "Taking Guard" in ESPN.
Australia is not the most popular team by any chance. I am not telling this in an Indian's perspective. I have met so many foreigners and all have the same view. Whenever Australia loses to any team, people tend to celebrate it. Is'nt it the truth?
Please think from the heart and agree to the truth & majority of the people.
//கும்மாங்கோ said...
I fully agree with Gavaskar's views. Even though Australia have excelled in all the fields & won most of the matches, they have failed to win the hearts of the people unlike late 70 - early 80's WI team.
//
It's true. I never disagree this. :)
But what about the comments on Gavaskar by Ponting that "Gavaskar dis-obey the upmire's decision during his playing days & protest on ground"? Is Mr. Gavaskar the right person to comment on Aussies's such behaviour? In Sledging point of view, nowadays almost all the teams are doing but little lesser than the Aussies. Isn't?
என்னைப் பொறுத்த வரை, போன்டிங் சொன்னவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. மீண்டுமொரு முறை சறுக்கி இருக்கிறார் அவர்.
கவாஸ்கர் சொன்ன கருத்துக்கள் என்னைப் பொறுத்த வரை சரியே. ஆனால் அதை சரத் பவார் விஷயம் நடந்த போதோ அல்லது முன்பே சொல்லி இருந்தால் மட்டுமே நன்றாக இருந்திருக்கும்.
உண்மையிலேயே போன்டிங் இதற்கு என்ன சொல்லி இருக்க வேண்டும். ஒன்று 'நாங்கள் அப்படிப் பட்டவர்கள் இல்லை' என்று விளக்கம் சொல்லி இருக்க வேண்டும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டும் அல்லது 'உலகக் கோப்பை தொடங்க சில நாட்களே உள்ள இந்த வேளையில் முடிந்து போன விஷயங்களைப் பற்றி தேவை இல்லாமல் பேசி எங்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டாம்' என்று சொல்லி இருக்கலாம்.
இவையே, இவை மட்டுமே அதற்கு சரியான பதிலாக இருந்திருக்க முடியும். கவாஸ்கரின் கருத்துக்கு அவர் இந்திய அணியை ஏன் குறை கூற வேண்டும்?
ஓ கவாஸ்கர் இந்தியாவை சேர்ந்தவர் என்கிறீர்களா? அப்படியானால் இன்றிலிருந்து ஜெஃப்ரி பாய்காட், டோனி க்ரெய்க், விவ் ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான், அக்ரம், மியாண்தத், டி சில்வா, டீன் ஜோன்ஸ், பாரி ரிச்சர்ட்ஸ் உட்பட எவரும் எந்த நாட்டு அணியிணரையும் எதுவும் சொல்ல கூடாது. முக்கியமாக இந்திய அணியை ஒரு வார்த்தை சொல்ல கூடாது.
இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிகள் மட்டுமல்ல எல்லா அணியினரும் விமர்சனத்திற்குட்பட்டவர்கள் தான். ஒரு சின்ன விமர்சனத்தை கூட அவர்கள் மீது வைக்கக் கூடாத அளவுக்கு அவர்கள் என்ன கடவுளா? நான் ஒன்றும் கவாஸ்கர் சொன்னது சரி என்று சொல்ல வில்லை. ஆனால் உலகக் கோப்பை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ஒரு அணி தலைவர், ஏறக்குறைய அதே அளவு வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் மற்றொரு அணியை "தேவை இல்லாமல்" விமர்சனம் செய்ததால் எனக்குள் ஏற்பட்ட கோபமே இது.
இதுவே ஸ்டீவ் வாக் இந்திய அணியைப் பற்றி கமெண்ட் செய்து அதற்கு திராவிட் பதிலடியாக, தொடர்ச்சியாக இரண்டு தொடர்களை இழந்த ஆஸ்திரேலியா அணி சூப்பர் எய்ட்டிலேயே வெளியேறி விடும் என்ற ரீதியில் ஏதாவது கூறி இருந்தால், எல்லோரும் சேர்ந்து (இந்தியர்கள் உட்பட) திராவிட் "நாகரீகமாக பேச கற்று கொள்ள வேண்டும்", "முன்னாள் வீரர்களுக்கு மரியாதை தர கற்று கொள்ள வேண்டும்", "விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும்"என்ற ரீதியில் குதறி எடுத்திருப்பார்கள்.
என்னைப் பொறுத்த வரை நாட் வெஸ்ட் சீரிஸின் போது, தன் மீது வைக்கப் பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு, பதிலடியாக கோப்பையை வென்றவுடன், தனது சர்ட்டை கழற்றி சுற்றி தனது எதிர்ப்பை காண்பித்தாரே, கங்குலி அதுதான் ரியல் aggressiveness. Real Heroism. அன்று அவர் கைஃபை ஓடி வந்து கட்டிப் பிடித்ததை பார்ப்பவர்கள் சொல்வார்கள் அவர் எவ்வளவு வெறியில் இருந்தார் என்று.
என்னைப் பொறுத்த வரை முன்னாள் வீரர்களை மதிக்கத் தெரியாதவர் சிறந்த கேப்டனாகி விட முடியாது.
நண்பர் நந்தா,
வருகைக்கும் அழகான/தெளிவான கருத்திற்கும் முதலில் நன்றி.
முன்பெல்லாம் (இப்போதும் கூட) ஒரு தொடர் தொடங்கும் முன் எதிரணி குறித்தும் அதன் அணித்தலைவர் குறித்தும் ஆஸ்திரேலியாவின் முன்னாள்/இன்னாள் வீரர்கள் தாக்கியும்/ நம்பிக்கையை குலைக்கும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம். இன்றைய கால கட்டத்தில் அதை மற்ற எல்லா நாட்டினரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக திருப்பி அடிக்க கற்றுக் கொண்டார்கள் என்பது மட்டும் உண்மை.
//உண்மையிலேயே போன்டிங் இதற்கு என்ன சொல்லி இருக்க வேண்டும். ஒன்று 'நாங்கள் அப்படிப் பட்டவர்கள் இல்லை' என்று விளக்கம் சொல்லி இருக்க வேண்டும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டும் அல்லது 'உலகக் கோப்பை தொடங்க சில நாட்களே உள்ள இந்த வேளையில் முடிந்து போன விஷயங்களைப் பற்றி தேவை இல்லாமல் பேசி எங்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டாம்' என்று சொல்லி இருக்கலாம்.
//
பண்பான கேப்டன் இவ்வாறுதான் செய்திருப்பார்.
நிச்சயாமாக பாண்டிங்கின் பேச்சிலும் நல்ல பண்பு வெளிப்படவில்லை. விளையாடாத ஒருவர் (எ.கா: வார்னே) இந்த மாதிரி பதிலளித்திருக்கலாம். ஒரு அணியின் தற்போதைய தலைவராக இருந்து கொண்டு பாண்டிங் பேசியிருக்கக் கூடாது.
//என்னைப் பொறுத்த வரை முன்னாள் வீரர்களை மதிக்கத் தெரியாதவர் சிறந்த கேப்டனாகி விட முடியாது.
//
உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
ஆனால், ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளில் களத்தில் கலகம் செய்தவரான கவாஸ்கர் On-Field Decipline பற்றி பேசலாமா என்பதே எனக்குள் எழுந்த கேள்வி.
பேச கூடாது. பேச தேவை இல்லை என்பதே எனது பதிலும். நம்ம ஆளுங்க அவங்க மூக்கை உடைக்கணும். பார்க்கலாம்.
//Nandha said...
பேச கூடாது. பேச தேவை இல்லை என்பதே எனது பதிலும். நம்ம ஆளுங்க அவங்க மூக்கை உடைக்கணும். பார்க்கலாம்.
//
இந்திய அணி கோப்பையை வெல்லட்டும். வென்ற பின் கவாஸ்கர் தனது சட்டையை அவிழ்த்து கங்குலி போல் சுற்றட்டும். :)
good post dude ..eall coments iyum rasichu padithane ..keep posting posts like this
நன்றி கார்த்திக்,
கருத்துக்களை நல்ல விதத்தில் பகிர்ந்துகொள்வதில் கிடைக்கும் சுகமே அலாதிதான். அதுவும் கிரிக்கெட்ட்டில் என்றால் இன்னும்... இல்லையா?
//இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிகள் மட்டுமல்ல எல்லா அணியினரும் விமர்சனத்திற்குட்பட்டவர்கள் தான். ஒரு சின்ன விமர்சனத்தை கூட அவர்கள் மீது வைக்கக் கூடாத அளவுக்கு அவர்கள் என்ன கடவுளா? //
மூக்கை உடைக்கிறது என்ன, அவனுங்க கோவணத்தை உருவிவிட்டு அனுப்பனும். பாண்டிங்கின் பேட்டி ஒன்றை உணர்த்துகிறது. அது அவர்களின் பதட்டம். வழக்கமா அவனுங்க ஆரமிப்பானுங்கா, இந்த தடவ கவாஸ்கர் முந்திட்டார். என்னை பொறுத்தவரை ஐசிசி பலநேரம் ஆஸ்திரேலியாவிற்கு வைப்பாட்டியாகத்தான் இருந்திருக்கிறது.
//முத்துகுமரன் said...
மூக்கை உடைக்கிறது என்ன, அவனுங்க கோவணத்தை உருவிவிட்டு அனுப்பனும். பாண்டிங்கின் பேட்டி ஒன்றை உணர்த்துகிறது. அது அவர்களின் பதட்டம். வழக்கமா அவனுங்க ஆரமிப்பானுங்கா, இந்த தடவ கவாஸ்கர் முந்திட்டார். என்னை பொறுத்தவரை ஐசிசி பலநேரம் ஆஸ்திரேலியாவிற்கு வைப்பாட்டியாகத்தான் இருந்திருக்கிறது.
//
அதானே பார்த்தேன். என்னடா இன்னும் நம்ம நண்பர் வரலயேன்னு. வாங்க நண்பரே.
மிகச்சரியாக ஆஸ்திரேலியாவின் பதற்றத்தை படம் பிடித்து காட்டினீர்கள். ஆனாலும் நினைவில் கொள்ளுங்கள். அவர்களை வெல்வது எளிதானதாக இருக்காது. :)
ஐ.சி.சி பற்றிய உங்கள் கூற்று மிகச் சரியானதே. நமக்கு ஒரு சட்டம். வெள்ளைத்தோலுக்கொரு சட்டம். :(
கங்காருங்களுக்கு லீக் சுற்றிலே இருக்கும் பாருங்க அதிர்வேட்டு :-)
//முத்துகுமரன் said...
கங்காருங்களுக்கு லீக் சுற்றிலே இருக்கும் பாருங்க அதிர்வேட்டு :-)
//
You mean 'Operation Scottish'?
ஸ்லெட்ஜிங் ஒரு பக்கம் இருக்கட்டும் சமீபத்தில் ஐசிசி நாக் அவுட் போட்டியில் வென்றுவிட்டு அமைச்சர் சரத்பவாரிடம் நடந்துக் கொண்ட முறை சரியா?
வெற்றிப் பெற்றால் கூடவே திமிரும் ஒட்டிக் கொள்ளும் அதுதான் ஆஸ்திரேலியா அணிக்கும் இப்போது கூடவே இருக்கு அதே வைக்கப்போகிறது இந்த தொடரில் வேட்டு பொறுத்திருந்துப் பார்ப்போம்.
//ப்ரியன் said...
ஸ்லெட்ஜிங் ஒரு பக்கம் இருக்கட்டும் சமீபத்தில் ஐசிசி நாக் அவுட் போட்டியில் வென்றுவிட்டு அமைச்சர் சரத்பவாரிடம் நடந்துக் கொண்ட முறை சரியா?
//
அன்று அவர்கள் நடந்து கொண்ட விதத்தை டி.வியில் நேரடியாக பார்த்தேன். காட்டுமிராண்டித்தனம். :(
//வெற்றிப் பெற்றால் கூடவே திமிரும் ஒட்டிக் கொள்ளும் அதுதான் ஆஸ்திரேலியா அணிக்கும் இப்போது கூடவே இருக்கு அதே வைக்கப்போகிறது இந்த தொடரில் வேட்டு பொறுத்திருந்துப் பார்ப்போம்
//
ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைக்கனும்னு சொன்னா லாரி லாரியா ஆள் வந்து இறங்குதுப்பா. எலேய் பாண்டிங்! உனக்கும் உன்னோட பசங்களுக்கும் நேரம் சரியில்லைடோய்.
Post a Comment