அப்பாடா! பல பேரின் பலநாள் ஏக்கத்திற்கு இன்று நிறைவேறப்போகிறது. ஒன்பதாவது உலகக் கோப்பையின் முதல் போட்டி இன்று ஜமைக்காவில் சபீனா பார்க் மைதானத்தில் பாகிஸ்தான் - வெ.இ அணிகளுக்கிடையே நடக்க இருக்கிறது. முதல் போட்டியே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விறுவிறுப்பை எதிர்பார்ப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. இதுவரை இவ்விரு அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று விறுவிறுப்பான போட்டிகளைத் தந்துள்ளது. இரு அணியினரும் ஆடியுள்ள 7 உலகக் கோப்பை போட்டிகளில் 5-2 என்ற கணக்கில் வெ.இ -பாக் அணிகளின் வெற்றி எண்ணிக்கை உள்ளது. இவை பெரும்பாலும் 70 - 80 களின் அசைக்க முடியாத வெ.இ அணியால் கிடைத்த வெற்றிகளாகும். சமீபத்திய 10 போட்டிகளை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் 8-2 என்ற கணக்கில் வெ.இ அணியை வீழ்த்தியுள்ளது.
தற்போதய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் மூலதனமான வேகப்பந்து வீச்சு கேள்விக்குள்ளாகியுள்ளது. அக்தர் மற்றும் ஆஸிஃப் பங்குபெறாத இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை காண உலகமே காத்திருக்கிறது. முஹம்மது சமி - உமர் குல் - அசார் - ரானா ஆகியோர் எப்படி பந்துவீசப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், நிலையான ஒரு மிடில்-ஆர்டர் மட்டையாளர்கள் தான் இந்த பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள். யூனுஸ், யூசுஃப் & இண்ஜமாம் ஆகியோரை உள்ளடக்கிய பேட்டிங் வரிசை ஷொகைப் மாலிக் மற்றும் அஃப்ரிடியால் மேலும் வலுப்பெறும். தொடக்க ஆட்டக்காரர்களின் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைக்க இயலும் என்பதை உறுதியாக கூற இயலாத நிலை. பயிற்சி போட்டிகளின் வெற்றி நிச்சயம் பாகிஸ்தானுக்கு நம்பிக்கை அளித்திருக்கும். குறிப்பாக தெ.ஆ அணிக்கெதிரான வெற்றி. கிரிக்கெட்டின் கணிக்க இயலாத அணி ஒன்று உண்டென்றால் அது பாகிஸ்தான் தான்.
வெ.இ அணியைப் பொறுத்தவரை 50-50 வாய்ப்புள்ள ஒரு அணியாகும். கரீபியன் தீவுகளின் தென்னைமரங்களை உலுக்கினால் விழுவது வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் என்று கிரிக்கெட்டில் சொல்லிக் கொள்வார்கள். அந்தளவிற்கு வேகப்பந்து வீச்சிற்கு புகழ்பெற்ற இடம். ஆனால், தற்போத அணியில் சொல்லிக் கொள்ளும்படியான புகழ்பெற்ற ஒரு வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை. பெரும்பாலும் இளைய வேகப் பந்து வீச்சாளர்கள். பேட்டிங்கை பொறுத்தவரை கெய்ல் - லாராவின் ஆட்டத்தை பொருத்தே அமையும். சந்திரபால் & சர்வான் இருந்தாலும் கெய்ல் மட்டும் ஒரு 15 ஓவர்கள் பேட்டிங் செய்தால் ஆட்டத்தின் போக்கில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. லாராவின் தலைமையின் கீழ் ஒற்றுமையாக ஆடத்துவங்கியுள்ளனர் இந்த 9 நாடுகளின் கூட்டமைப்பு வீரர்கள். ஒற்றுமைக்கு பலன் கிட்டுமா? வெ.இ இன்றைய வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.
ரசிகர்கள் தவறாமல் இந்த போட்டியை கண்டுகழியுங்கள். இரு அணிகளும் ஏறக்குறைய ஒரே அளவான திறமையுடன் இருப்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.
என் கணிப்பு: பாகிஸ்தான் வெற்றி பெறும்.
15 comments:
viruviruppu - periya 'ra' varum.
//விருவிருப்பான//
விறுவிறுப்பான
அப்பாடா! ஸ்டேடியத்துக்குள்ள வந்த மாதிரி ஒரு ஃபீலிங்க்!
இன்னிக்கு பாக்கிஸ்தான் வெற்றி பெறும் என்பது ஆவியுலக கணிப்பு!
நீங்க என்ன சொல்றீங்க?
நக்கீரா, அனானி ஆகியோருக்கு மிகவும் நன்றி என் தவறை சுட்டிக்காட்டியமைக்கு.
//ஆன்லைன் ஆவிகள் said...
அப்பாடா! ஸ்டேடியத்துக்குள்ள வந்த மாதிரி ஒரு ஃபீலிங்க்!
இன்னிக்கு பாக்கிஸ்தான் வெற்றி பெறும் என்பது ஆவியுலக கணிப்பு!
நீங்க என்ன சொல்றீங்க?
//
வெல்கம் டு சபீனா பார்க ஆவிகளே!
ஆமா, ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து. லொடுக்கு அண்ணாத்த கூட உங்களை தேடிக்கிட்டு இருக்காரே.
உங்கள் கணிப்பே என் கணிப்பும். :)
//விருவிருப்பை(periya ru) எதிர்பார்ப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. இதுவரை இவ்விறு(chinna ru) அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று விருவிருப்பான(periya ru) போட்டிகளைத் தந்துள்ளது. இரு அணியினரும் ஆடியுள்ள 7 உலகக் கோப்பை போட்டிகளில் 5-2 என்ற கணக்கில் //
en votom Pak-kku
ஆன்லைன் ஆவிகளுக்கு டிக்கெட் உண்டா?
லொடுக்கு இப்போ மே.இ.தீவுகள் போய்விட்டார் என்பது புது தகவல்!
//அபி அப்பா said...
ஆன்லைன் ஆவிகளுக்கு டிக்கெட் உண்டா?
//
ஆவிகளுக்கு எதுக்கு டிக்கெட்டு? அவுங்கதான் ஏற்கனவே டிக்கெட் எடுத்ததனாலதான் ஆவியானாங்க. :)
//லொடுக்கு இப்போ மே.இ.தீவுகள் போய்விட்டார் என்பது புது தகவல்!
//
அப்படியா? பாவி மனுஷன் சொல்லாம கொல்லாம போயிட்டாரே! வரட்டும்...
//ஆவிகளுக்கு எதுக்கு டிக்கெட்டு?//
ஹிஹி...!
//ஆவிகளுக்கு எதுக்கு டிக்கெட்டு?//
ஆவிகளே டிக்கெட்டுதான்!
ஹி.ஹி...!
எங்க கிளப்பையெல்லாம் கிரிக்கெட் விளையாட கூப்பிட மாட்டேங்குறாங்களே!
ஆவிகளின் மீள்வருகைக்கு நன்றி.
டிக்கெட் எடுத்தவங்களுக்கே அபிஅப்பா டிக்கெட் விக்கிறாருப்பா. :)
//குட்டிச் சாத்தான்ஸ் கிளப் said...
எங்க கிளப்பையெல்லாம் கிரிக்கெட் விளையாட கூப்பிட மாட்டேங்குறாங்களே!
//
கல்கத்தாகாரங்ககிட்ட ஐடியா கேளுங்க கொடுப்பாங்க.
எனது கணிப்பை பொய்ப்பித்த பாகிஸ்தான் மட்டையாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துகொள்கிறேன்.
நல்ல பதிவுங்க பவுலர். நேத்து இத பார்க்க மறந்திட்டேன்.
//கரீபியன் தீவுகளின் தென்னைமரங்களை உலுக்கினால் விழுவது வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் என்று கிரிக்கெட்டில் சொல்லிக் கொள்வார்கள். //
கலக்கல் உவமைங்க. இதுவரைக்கும் நான் கேட்டதில்லை. கற்பனை பண்ணி பார்த்தோன சிரிப்பு வந்திடிச்சி!
Post a Comment