Sunday, April 29, 2007

உலகக் கோப்பை பரிசளிப்பு காட்சிகள்

இறுதி ஓவரும் கொண்டாட்டங்களும்.



பரிசளிப்பு காட்சிகள்:


ஹாட்ரிக்!!!

நான் எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன். எதிர்பார்த்தது போலவே சமிந்தா வாஸுக்கும் முரளிக்கும் சுளுக்கெடுப்பு. எதிர்பார்த்தது போலவே இலங்கையிடமிருந்து ஒரு சிறிய போராட்டம். ஆக, ஆஸ்திரேலியா கடந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் தோற்கடிக்கப்படாத ஒரு அணியாக 2011-ல் களமிறங்கும்.

இலங்கை ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டுமெனில் அது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கக் கூடாது. ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக இருந்தாலொழிய ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது என நேற்று என்னுடைய நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதுபோலவே மழை குறுக்கிட்டு 38 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் மேலும் மழை குறுக்கிட்டால் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உருவான நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது எனக்கு சிறிது ஆச்சர்யம் தான். காரணம், மழை குறுக்கிடும் (ஏற்கனவே குறுக்கிட்டு) போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமான சூழல் உருவாகும். அப்படியிருக்க துணிந்து பாண்டிங் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.



அவ்வளவுதான், கில்கிறிஸ்ட் வெறி பிடித்தது போல் ஒரு ஆட்டம் ஆடினார். அவருடன் பேட் செய்து கொண்டிருந்த ஹேடன் இந்த உலகக் கோப்பையின் அதிகமான ஓட்டங்களை குவித்திருப்பவர். ஆனால், கில்கிறிஸ்ட் ஆடிய ஆட்டத்தின் முன்பு ஹேடன் ஒரு கொசு போல தோற்றமளித்தார். இலங்கை இரண்டாவது பேட் செய்வதால், எந்த சூழ்நிலையிலும் மழை குறுக்கிடலாம், அதனால் டக்வர்த்-லூயிஸ் முறையில் இலங்கை எந்த நிலையிலும் முன்னிலை பெற இயலாதவாறு ஓட்ட விகித்ததை அதிகரித்து கொண்டே சென்றனர். ஒரு கட்டத்தில் எளிதாக 300 ஐ தொடும் என நினைத்தேன். ஆனால் இறுதி சில ஓவர்களை இலங்கை அணியினர் சிறப்பாக வீசினர். 38 ஓவர்களில் 281 என்பது கடினமான இலக்கை கொடுத்தனர். துருப்புச் சீட்டுகளை சூப்பர்-8 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக ஒளித்து வைத்த இலங்கையின் தந்திரம் பலிக்கவில்லை. வாஸுக்கும் முரளிக்கும் ஈவு இரக்கமில்லாமல் அடி விழுந்தது.

இதனை சேஸ் செய்வது என்பது கடினம். ஆனால், ஒரு வேளை மழை குறுக்கிட்டு டார்கெட் மாற்றப்பட்டால்? அது மட்டுமே போட்டியை சுவராசியமாக்கியது. மற்றபடி ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலக்கை விரட்டிய போதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை இலங்கை வெல்லும் என்று. இலக்கு அப்படி. இலங்கைக்கு வாய்ப்பு உள்ளதெனில் அது மழை மூலமே மட்டுமே இருந்திருக்க முடியும். இறுதியில் நினைத்தது போலவே ஆஸ்திரேலியா வென்றது. இடையிடையே மழை குறுக்கிட்டது இலங்கைக்கு எரிச்சலை தந்திருக்கும்.






இத்தனை பெரிய போட்டியின் இறுதியான முத்தாய்ப்பான கட்டத்தில் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கியது மைதானம். ஆஸ்திரேலியாவின் கொண்டாட்டம் இருளில்தான் நடந்தது.

எது எப்படியோ ஆஸ்திரேலியா மட்டுமே இந்த கோப்பையை வெல்ல தகுதியுள்ள அணி. ஆஸ்திரேலியாவுக்கும் உலகின் மற்ற அணிகளுக்குமிடையேயான தூரம் அதிகரித்துள்ளது. இந்திய அணிக்கான சீருடை தைக்க கொடுத்து நான்காண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யச் சொல்லியிருக்கும் வாண்டுகள் கூட்டம் அடுத்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடுமா?

Player of the Final - Gilchrist
Player of the World cup - McGrath

Well deserved. Aussies are real champions. பாராட்டுக்கள்!

இடையிடையே போட்டியை பற்றி தொலைபேசியில் அலசிய (குழப்பிய) அபிஅப்பா மற்றும் சோகத்துடன் உரையாடிய தம்பிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Saturday, April 28, 2007

இன்று வந்த மின்னஞ்சல்...

இன்னும் நம்ம மக்கள்ஸ் விடுற மாதிரி இல்ல.


Year 2019 - Cricket World Cup news:


India failed to defeat Afghanistan in the world cup qualifier in the Asia -Pacific zone

Coach sehwag said that he is not worried bcoz he has backing of selectors, captain and board....and that they had won a close match against Papua new guinea just 2 yrs ago

Rahul Dravid,the coach of new zealand team said that Sachin should now consider retiring gracefully and let his son take over the captaincy

mahender singh dhoni broke ajit agarkars record of most no of conecutive ducks in twenty 20

saurav ganguly, the coach of england feels that the boys need to control their emotions on the field

the current leading man from bollywood bret lee advices ms dhoni to take upacting as well

Minnows Pakistan beat Ireland in a close match...and thus they avanged their defeat in the 2007 WC against the then minnows ireland

Inzamam ul haq, who was the captain of the losing team and now the present coach said in a press interview that
"Boys plays well...they try hard...inshallah we wins the world cup"

The police arrested 8 ppl for voilence after England and NZ match...
Investigations revealed that these ppl were members of Dravid and Ganguly fan communities on Orkut which have 623241516 and 126542 members respectively.

the Indian cricket board led by president Rahul Gandhi has called for an emergency meeting to discuss future course of action ..former players like yuvraj singh, md kaif,vvs laxman and kumble have been invited...coach sehwag and captain Tendulkar will present a report...

vvs laxman today created a new controversy by saying that he expected a written apology from Rahul gandhi for including him in the category of former players....he said that he has improved his fielding and fitness and wants to play 2023 WC in Brazil

இறுதிப் போட்டி - அசத்தப் போவது யாரு?

கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் உலகக் கோப்பை போட்டி இன்றுடன் முடிய இருக்கிறது. இன்று நடக்கயிருக்கும் இறுதிப் போட்டியில் இலங்கையும் ஆஸ்திரேலியாவும் மோத இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை முழுதும் சிறப்பாக விளையாடிய இரு அணிகள் உண்டென்றால் அது இந்த இரண்டு அணிகள்தான். அந்த வகையில் மகிழ்ச்சியே.

இந்த உலகக் கோப்பை பல அதிர்ச்சிகளுடன் தொடங்கி ஒருவாறு இறுதி நிலையை எட்டியிருக்கிறது. பாக் & இந்திய வெளியேற்றம். அதைத் தொடர்ந்து பாப் உல்மரின் கொலை. இப்படி வரிசையாக அதிர்ச்சிகளுடன் தொடங்கியது. பாப் உல்மரின் கொலையாளி பற்றி அறிவிப்பதில் உலகக் கோப்பை நடந்து வருவதால் தாமதம் காட்டினார்கள் என்றே தொன்றுகிறது. நாளையே கூட கொலையாளி யார் என்பது அதிர்ச்சி முடிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, அது பற்றி இப்போ நமக்கெதுக்கு. பிறகு பார்க்கலாம்.



கடந்த 25 போட்டிகளுக்கும் மேலாக தோல்வியே கண்டிராத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. அவர்களது அதிரடியான கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் எதிரணியினரை வதம் செய்து வருகின்றனர். அவர்களது மனதிடமே இதற்கு முதன்மையான காரணம். எளிதில் அசராத தளராத மனதிடம்.

ஆஸ்திரேலியாவின் கில்க்ரிஸ்ட் இந்த உலகக் கோப்பையில் அந்தளவிற்கு அடித்து அசத்தவில்லை என்றாலும் அவரின் பங்காளி ஹேடன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் 621 ஓட்டங்களை இதுவரை குவித்து முதலிடத்தில் உள்ளார். அதன்பின்பு வரும் பாண்டிங்கும் 502 ஓட்டங்கள் குவித்து மூன்றாமிடத்தில் உள்ளார். க்ளார்க்கும் 428 ஓட்டங்கள் குவித்து நல்ல ஃபார்மில் உள்ளார். பின்னர் வரும் ஸைமண்ட்ஸ், ஹஸ்ஸி & வாட்ஸனுக்கு இதுவரை நல்ல முறையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்தால் வெளுத்து வாங்கும் திறமையுள்ளவர்கள் இவர்கள். இப்படிப்பட்ட பேட்டிங் வரிசை ஆஸ்திரேலிய அணிக்கு பலம்.

பந்துவீச்சை பொருத்தவரை மெக்ராத் 25 விக்கெட்டுகள் இந்த உலகக் கோப்பையில் முன்னனியில் உள்ளார். இவரைப் பற்றி அதிகம் குறிப்பிட தேவையில்லை. இதுவே அவரது இறுதி சர்வதேச போட்டியாக இருக்கும். அதனால் தன்னால் முடிந்தளவு வெற்றிகரமாக Log-out செய்வதில் குறி(வெறி?)யாக இருக்கிறார். இன்று இவருக்கு இரையாகப் போவது யார் யாரோ? பின்பு, ப்ரெட் லீயின் இடத்தை நிரப்ப வந்த ஷான் டைட் தொடக்க போட்டிகளில் சிறிதி தினறினாலும் பின்னர் அற்புதமாக வீசத் தொடங்கிவிட்டார். 23 விக்கெட்டுகளுடன் முரளியுடன் இரண்டாமிடத்தை பங்கு போட்டுள்ளார். இவரும் இலங்கைக்கு மிகுந்த சவாலாக இருக்கக் கூடும். பின்னர், ப்ராக்கன், ஹாக், வாட்ஸன் மற்றும் ஸைமண்ட்ஸ், க்ளார்க்கும் பந்து வீச்சிற்கு பக்க பலமாக இருப்பார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் இன்னொரு பலம் அவர்களது மின்னல் வேக களத்தடுப்பு. ஆக, ஆஸ்திரேலியா மனபலம், திறமை மற்றும் என்னைப் போன்றோரின் ஆதரவுடன் களமிறங்க இருக்கிறது. ஆஸ்திரேலியா வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகமிருப்பதாக நான் நினைக்கிறேன்.

இலங்கை அணியும் திறமையில் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. இது இந்த உலகக் கோப்பையில் நன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு வரும் போது அத்தனை வெற்றிகரமான தொடர் வெற்றிகளுடன் அவர்கள் வரவில்லை. இருந்தாலும் உலகக் கோப்பைக்கேற்ப பொங்கியெழுந்து விளையாடி வருகிறார்கள். இலங்கையின் இந்த உலகக் கோப்பையின் ஆட்டம் எனக்கு 2003 உலகக் கோப்பையின் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது. இறுதிப் போட்டிக்கு முன்பு வரை இந்தியா ஆஸ்திரெலியாவிடம் மட்டுமே தோற்றிருந்தது. இலங்கையும் அதுபோலவே ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இதுவரை தோற்றுள்ளது. 2003 இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு நேர்ந்தது இன்று இலங்கைக்கும் நேருமா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

இலங்கை அணி ஆஸ்திரேலியா போலவே ஒரு balanced அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஜெயசூர்யா போன்ற தொடக்க ஆட்டக்காரர், ஜெயவர்தனே (529 ஓட்டங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்) போன்ற க்ளாசிக் மட்டையாளர், சங்கக்கரா மற்றும் தில்ஷான் போன்ற திறமையாளர்கள், சில்வா போன்ற இளம்புயல்கள் உள்ள பேட்டிங் இலங்கை அணிக்கு பலம். ஆனால், ஆஸ்திரேலியா போன்றதொரு consistant scoring இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இலங்கை அணிக்கு மிகுந்த பலம் அவர்களது பந்து வீச்சுதான். வாஸ் & முரளி போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சளார்களின் பந்து வீச்சை சமாளிப்பது ஆஸ்திரேலிய அணியினருக்கு அத்தனை சுலபமாக இருக்காது என்பது ஆஸ்திரேலிய அணியினருக்கே தெரியும். 250+ இலக்கை எளிதாக Defend செய்யக் கூடியவர்கள் இவர்கள். பின்னர் மலிங்கா. இவர் இந்த உலகக் கோப்பை சிறப்பாக பந்து வீசி வந்தாலும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக எப்படி வீசுவார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கனும். எனக்கென்னமோ சந்தேகமாகத்தான் உள்ளது. அடுத்ததாக, மஹ்ரூஃப், தில்ஷான் & ஜெயசூர்யாவின் பந்து வீச்சும் கை கொடுக்கும்.

ஆஸ்திரேலியா போலவே இலங்கையும் ஒரு நல்ல களத்தடுப்பை கொண்டுள்ள அணி என்பதை மறுக்க இயலாது.

ஒரு அணி மற்ற அணிகளுடன் என்னதான் சிறப்பாக ஆடி வென்றாலும் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் போதுதான் ஒரு அணியின் உண்மையான திறமையை அறிய இயலும். நாம் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும் கிரிக்கெட்டின் தற்போதையா உரைகல் ஆஸ்திரேலியாதான். இது வேதனையான கசப்பான உண்மை. என்ன செய்வது அவர்களுக்கு சவால் விடும் ஒரு அணி இன்றில்லை. இலங்கை தங்கள் திறமையை இன்று ஆஸ்திரேலியாவுடன் உரசிப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா நான்காவது முறையாக கோப்பையை வெல்லுமா? ஹாட்ரிக் சாதனை படைக்குமா? இலங்கை இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா? 1996 ஆஸ்திரேலியாவுடன் மோதி வென்றதை போல மீள்வெற்றி கொள்ளுமா? இன்று தெரியும்.

எனக்கென்னமோ 2003 உலகக் கோப்பை ஞாபகம் வந்து தொலைக்கிறது. :)

அமீரகக் குறிப்பு: இன்றும் சிலருக்கு காதில் புகை வரும் என்பதே எனது கணிப்பு.

Thursday, April 26, 2007

அரை இறுதி 2 - சொதப்புவது எப்படி?

'சொதப்புவது எப்படி?'-ன்னு யாருக்காவது சந்தேகம் வந்தால் உடனே தெ.ஆப்பிரிக்கா அணியினரிடம் செல்லுங்கள். செய்முறை விளக்கத்தோடு சொல்லித் தருவார்கள்.

இந்தியாவும் தெ.ஆப்பிரிக்காவும் கிரிக்கெட் உலகின் முடிசூடா 'சொதப்பிகள்' (Chokers) என கிரிக்கெட் உலகம் நன்கறியும். இந்தியாவையாவது ஒருமுறையில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தெ.ஆப்பிரிக்கர்கள் படு கேவலம். பெரிய போட்டிகள் என்றால் போட்டி தொடங்கும் முன்பே எதிரியின் காலில் விழுந்து சரணடைந்து விடுவார்கள் போல. கை கூடி வந்த வாய்ப்பை 4 பந்துகள் மீதமிருக்க 1999-ல் கோட்டை விட்டவர்கள்தானே.

நேற்றும் அப்படித்தான் இருந்தது இவர்களின் ஆட்டம். நம்ம ஆஸ்திரேலியாவின் திட்டம் சூப்பர். இந்த உலகக் கோப்பையில் இதுவரை புதிய பந்தை வீசி வந்த ஷான் டைட்டிற்கு பதிலாக 'ஃபெர்பெஃக்ட்' மெக்ராத் கையில் புதிய பந்து கொடுக்கப்பட்டது. அதுவே தெ.ஆப்பிரிக்க அணியினருக்கு தமது திட்டத்தில் மண் விழுந்தது போலிருந்திருக்கும். அவர்கள் 'ஷான் டைட்டுதான் புதிய பந்து வீசுவான். அவனுக்கு தொடக்கத்துலேயே ரெண்டு காட்டு காட்டுனா மேட்ச் நம்ம கண்ட்ரோலுக்கு வந்துடும்' என்பது போல் திட்டங்கள் இருந்திருக்கும். ஷான் டைட் இளைஞர். பதட்டம் காரணமாக சொதப்பிவிடக் கூடும் என அறிந்த ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பை தொடக்கம் முதலே 'புதிய பந்தை எனக்குத் தா' என அழுது அடம் பிடித்த மெக்ராத்திடம் ஒப்படைத்தது. அதுவே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

தெ. ஆப்பிரிக்க அணியினர் ஆடிய விதம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. விக்கெட்டுகள் விழுந்தாலும் தடுத்து ஆடுவதை விட்டு விட்டு வருபவர்கள் எல்லாம் மட்டையை வீசினார்கள். மோசமான ஷாட் செலக்க்ஷன் மூலம் அவர்கள் விக்கெட்டை வீசியெறிந்தார்கள். இன்றாவது ஒரு நல்ல போட்டியை ஆஸ்திரேலியாவிற்கெதிராக தருவார்கள் என்ற நம்பிக்கையில் டி.வி முன்னமர்ந்தவர்கள் மீது சேறடித்து சென்றார்கள்.

ஆஸ்திரேலியாவின் இந்த ஃபார்ம் இறுதிப் போட்டியிலும் தொடரும் என்பதில் ஐயமில்லை. மற்ற அணிகளுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்தே வருவது சிறிது வேதனையே. இலங்கை அணியினர் குறைந்த பட்சம் போராடவாவது செய்வார்களா?

Wednesday, April 25, 2007

அரை இறுதி 1 - பலே ஜெயவர்தனே!

ஐந்தாவது முறையாக அரை-இறுதியிலேயே தோற்று வெளியேறியது நியூசிலாந்து அணி. ஜெயவர்த்தனேயின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு செல்கிறது.

இதில் ஜெயவர்த்தனேயின் பொறுமையான பொறுப்பான ஆட்டத்தை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். 'ஜெயசூர்யா அவுட்டானா இலங்கை அவ்ளோதான். பெரிய ஸ்கோர் ஒன்னும் வராது' அப்படின்னு நிறைய பேர் நினைச்சிருந்தாங்க. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை நேற்று. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஜெயவர்தனே இந்த ஆட்டத்தை [115* (109b 10x4 3x6)]வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தில் முதல் பவுண்டரி வந்தது 47 வது பந்தில் தான். அந்தளவிற்கு பொறுமையாக ஆடியவர் இறுதியில் கியர் மாற்றி ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். அவரது ஆட்டமே இலங்கை வெல்வதற்கு காரணம் என்றால் மிகையாகாது.



250+ எடுத்தாலே வெற்றிகரமாக எதிரணியை மடக்க கூடிய திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இலங்கையில் இருப்பதால் இலங்கை வெல்லும் என்பதில் இருவித கருத்து எனக்குள் எழவில்லை. அதுபோலவே அவர்கள் பந்து வீச்சும் இருந்தது. ஒரு கட்டத்தில் 104/2 (21 ஒவர்களில்) என்ற நிலையில் நியூசிலாந்து இருந்த போது 'சைக்கிள் ஸ்டாண்டில் ஒரு சைக்கிள் விழுந்தால் அனைத்தும் வரிசையாக சரிவது' போல நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிந்து இலங்கை வெற்றியை உறுதி செய்தன.

நியூசிலாந்து அணியின் ஆட்டம் ஒன்றும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது வருத்தமே. ஷான் பாண்ட் முதல் ஓவரை ஓரளவு கட்டுப்படுத்தி வீசியிருந்தால் அவரது அன்றைய நாளின் பந்து வீச்சு தன்மையே மாறியிருக்குமோ என்னவோ. முதல் ஓவரில் லெக்-சைடிலேயே பந்து வீசி ரன்களை வாரிக்கொடுத்தார். பின்வந்த ஓவர்கள் அவர் ரன்களை கட்டுப்படுத்தினாலும் நம்பிக்கை குறைந்தவராகவே காணப்பட்டார். ஒரு அட்டாக்கிங் இல்லை.



இந்தப் போட்டி முடிந்ததும் ஃப்ளமிங், ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியிலிருந்து தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த வெள்ளைக்கார பய புள்ளைக ரோசக்காரய்ங்க. நம்ம ஆட்களுந்தான் போனய்ங்க வந்தாய்ங்க!! ஹூம்...

இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி வாய்ந்த ஒரு அணியே. அதில் சந்தேகமேயில்லை. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. Well Balanced. All the best for the Final.

1992-முதல் தொடர்ந்து 5 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும் ஒரு துனைக்கண்ட அணி இடம் பிடிப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது.

Tuesday, April 24, 2007

யாரு ஜெயிக்கனும்?

இப்போ வெறும் நான்கு அணிகள் மட்டுமே இந்த உலகக் கோப்பைக்கான போட்டியில் எஞ்சியிருக்கின்றன. இவற்றில் தற்போது வலிமையை வைத்து பார்த்தால் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் என் மனதிற்குள் ஆஸ்திரெலியா மற்றும் இலங்கை வெல்லுவதை விட நியுசிலாந்தோ அல்லது தெ.ஆப்பிரிக்காவோ வென்றால் நன்றாக இருக்கும் என விருப்பம் இருக்கிறது. காரணம, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஏற்கனவே உலகக் கோப்பையை வென்ற அணிகள்.


ஏற்கனவே இரண்டு முறை மயிரிழையில் அரை-இறுதியில் தோற்று வெளியேறியதால் தெ.ஆ வெல்ல எனக்கு கூடுதல் விருப்பம. இது போல் உங்களுக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அதை வலதுபுறம் உள்ள வாக்குப் பெட்டியில் தெரிவியுங்கள். பார்க்கலாம், எந்த அணிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் ஆதரவு இருக்கிறதென்று.

Saturday, April 21, 2007

திருந்தவே மாட்டானுங்களா?

இந்திய அணி பழிவாங்கும்(?) நிமித்தமாக வங்கதேசம் சுற்றுப்பயணம் (வழக்கம் போல ஊர் சுத்த மட்டும் தான்) மேற்கொள்ள இருக்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளும் (மே 10, 12, 15) இரண்டு டெஸ்ட் போட்டிகளும் விளையாட இருக்கிறார்கள் (மே 18-22 & 25-29). இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரி நானும் அணியின் நன்மையை கருத்திற்கொண்டு இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.

ODI squad: Gautam Gambhir, Robin Uthappa, Virender Sehwag, Rahul Dravid (capt), Yuvraj Singh, Mahendra Singh Dhoni (wk), Dinesh Karthik, Manoj Tiwary, Dinesh Mongia, Piyush Chawla, Sreesanth, Munaf Patel, Zaheer Khan, RP Singh.


முதலில் மேலுள்ள ஒருநாள் அணியை பார்க்கலாம். அதாவது சச்சினும் கங்குலியும் நீக்கப்படவில்லையாம். மாறாக 'ஓய்வு' கொடுக்கப்பட்டுள்ளதாம். அவர்களை நீக்க அல்லது நீக்கியதாக அறிவிக்க வக்கில்லாத ஒரு வாரியம் நமது வாரியம். இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் Cricinfo-வில் ஒரு கட்டுரையில் 'கங்குலியை நீக்குவதற்காகவே சச்சினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது' என்று ஒருவர் எழுதியிருக்கிறார். என்னமோ கங்குலி மட்டுந்தான் உலகக் கோப்பை வெளியேற்றத்திற்கு காரணம் என்பது போல். சச்சின் என்னமோ இன்னமும் வெளுத்துக் கட்டுவாருன்னு நம்பிக்கிட்டாரு இவரு. கேடு கெட்டவனுங்க. ஒரு சார்பு நிலை தொடரும் வரை இந்திய அணி உருப்படாது. இதில் கூத்து என்னவென்றால் 'ஓய்வு' அளிக்கப்பட்டுள்ளதால் இருவரும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாம்-இப்படி சொன்னது நம்ம வெங்சர்க்கார். யப்பா! உங்களை திருத்தவே முடியாதுடா சாமிங்களா!

அணி அறிவிப்பை பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி இதிலும் கைஃப் மிஸ்ஸிங். சச்சின், கங்குலி இல்லாத அணியில் கூட 15 பேரில் ஒருவராக இடம்பெறக்கூட அருகதையற்றவரா கைஃப்? சரி அவரை ஒதுக்கியதை பற்றி யாராச்சும் கருத்து சொல்லியிருக்காங்களான்னு பார்த்தா Cricinfo-ல கூட இல்லை. அப்புறம் கூகிளில் தேடினப்போ ஹர்ஷா போக்லே மட்டும் எழுதியிருக்கார். நம்மில் சிலர் அவருக்குத்தான் அடுத்த அணித்தலைவர் பதவி என நினைத்திருக்கும் போது தேர்வாளர்கள் அவரை அணியில் கூட சேர்க்க மறுக்கின்றனர். நிச்சயமாக இதில் ஏதோ அரசியல் உள்ளது என்று அடித்து கூற முடியும். சேவாக் இன்னும் ஒட்டுகிட்டு இருக்காரு. என்னத்த சொல்ல இவனுங்க தேர்வு கொள்கையை! ஏண்டா டன் கணக்குல ரன் குவிக்குற பத்ரிநாத் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?

தினேஷ் மோங்கியாவுக்கு இன்னொரு வாய்ப்பு. இந்த மாதிரி இத்தனை முறை வாய்ப்பு எனக்கு கிடைச்சிருந்தா கூட இந்நேரம் ரிக்கி பாண்டிங் மாதிரி ஆயிருப்பேன் நான். மனோஜ் திவாரி நல்ல தெரிவு ஆனால், கங்குலி இல்லாத வங்காள இடத்தை அவரை கொண்டு நிரப்பியிருப்பதாக உணர்கிறேன். Bloody Zonal System!!

நீக்கப்பட்ட மூன்று பந்து வீச்சாளர்கள்: அகார்கர், இர்ஃபான் & ஹர்பஜன். இதில் முன்னவர் நீக்கம் எப்பவோ நடந்திருக்க வேண்டியது. சரி இப்பவாச்சும் செஞ்சாய்ங்களே. அப்புறம் மே.இ தீவுகளை சுத்திப்பார்க்க மட்டும் சென்ற இர்ஃபான். இவரை நாசப்படுத்திய பெருமை முந்தய இணையான டிராவிட்/ சாப்பலையே சாரும். மற்றபடி உலகக் கோப்பையில் இவர் செய்த தவறு 0. அதாவது ஆடவேயில்லை. அப்புறம் இந்த ஹர்பஜன். இவரது நீக்கமும் சரியே. இவர் பழைய நிலைக்கு திரும்பி வந்ததுக்கப்புறம் அணிக்கு திரும்பலாம்.அதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.

ஆக மொத்தம் சூப்பர் கண்துடைப்பு. வங்கதேசத்திடம் சீரியஸ் தோற்றால் கூட இவனுங்க (தேர்வாளர்கள்) திருந்த மாட்டானுங்க.


சரி, இப்ப டெஸ்ட் அணியை பார்க்கலாம்.

Test squad: Wasim Jaffer, Dinesh Karthik, Rahul Dravid (capt), VVS Laxman, Sachin Tendulkar, Sourav Ganguly, Yuvraj Singh, Mahendra Singh Dhoni (wk), Anil Kumble, Sreesanth, Zaheer Khan, VRV Singh, Ramesh Powar, Rajesh Pawar, Munaf Patel.


இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இந்த அரசியல்வாத பெரிசுகளை அணியில் வச்சிருப்பாய்ங்கன்னு பார்க்கலாம். ரமேஷ் போவாருக்கும், ராஜேஷ் பவாருக்கும் ஆட வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல. யுவராஜுக்கே ஆடும் 11-ல் இடம் கிடைப்பது கடினம் என பேச்சு.

ஒட்டு மொத்தமாக அணியை மாற்றம் செய்யவும் முடியாது தான். அதற்காக, அணியை பிளக்கும் தீய சக்திகளை(பெரிசுகளை) இன்னும் அணியில் வைத்திருக்கவேண்டுமா? இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 'அரசியல்/பணம் அல்ல முக்கியம் கிரிக்கெட் தான் என்றால்' இவர்கள் திருந்தப் போவது எப்போ?

Wednesday, April 18, 2007

சூப்பர் 8 முடிஞ்சது

அவன் ஜெயிச்சா இவன் உள்ளே போவான். இவன் ஜெயிச்சா அவன் வெளியே என்ற Ifs and Buts கணிப்புக்கெல்லாம் வேலையில்லாம போயிடுச்சு. அவன் (தெ.ஆ) ஜெயிச்சு அவனே (தெ.ஆ) உள்ளே போயிட்டான்.

தெ.ஆ நேற்று இங்கிலாந்தை தகர்த்தெரிந்து விட்டு அரை-இறுதியில் நுழைந்தது. ஆக, அரை-இறுதிக்கு தகுதி பெற்ற நான்காவது அணி தெ.ஆ. ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் தகுதி பெற்றிருந்தது எல்லாரும் அறிந்ததே.

இலங்கை இன்று அயர்லாந்துடன் தோற்காத பட்சத்தில் அரை-இறுதி இவ்வாறு அமையும்.

முதல் அரை-இறுதி: நியூசிலாந்து Vs இலங்கை
இரண்டாம் அரை-இறுதி: ஆஸ்திரேலியா Vs தெ.ஆ

இதில் தெ.ஆ மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத அணிகளாதலால் அவர்கள் வென்றால் நன்றாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியா அதற்கெல்லாம் இரக்கப்படுவதாக இல்லை. இலங்கையும் நியூசிலாந்திற்கு பெறும் முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே தெ.ஆ Vs நியூசிலாந்து இறுதிப்போட்டி என்பது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி நடக்க இருக்கும் நான்கு சூப்பர் 8 போட்டிகளும் உப்புக்கு சப்பாணி போட்டிகளே. ஆனால், இதில் ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து போட்டிக்கு சில தனிப்பட்ட காரணங்களால் எதிர்பார்க்கப்படும். பழைய பாக்கி ஒன்று இருக்கிறது. அது தீர்ந்தாத்தான் நிம்மதி.

Monday, April 16, 2007

ஆஸி - இலங்கை மோதல்

இன்று ஆஸ்திரேலியா இலங்கையுடன் மோதவிருக்கிறது. இது ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்குமென பலரும் எதிர்பார்க்கின்றனர். உலகக் கோப்பை இறுதி போட்டியின் dress rehearsal என்றும் ஊடகங்கள் கூவி வருகின்றன.

இதுவரை ஆஸ்திரேலியா விளையாடிய எல்லா போட்டிகளும் ஒருதரப்பு போட்டிகளாகவே அமைந்திருந்தன. தெ.ஆ-வுடனான போட்டி பலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் அதுவும் ஒருதரப்பாகவே முடிந்தது. ரிக்கி பாண்டிங் சொன்னது போல் இங்கிலாந்துடனான போட்டி மட்டுமே சிறிதேனும் போட்டி என்று கூறும்படி இருந்தது. அதனால், இன்றாவது போட்டி ஒரு சவலான போட்டியாக இருக்கும் என பாண்டிங் எதிர்பார்க்கிறார்.

அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆடுகளத்தன்மை இலங்கைக்கு சாதகாமாக சுழல்பந்து வீச்சுக்கு ஏற்றது. அதனால், இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ் மென்களை சோதிப்பார்கள் என்று கருதுகின்றனர். ஆனால், எனக்கென்னவோ இதுவும் ஒரு Hype ஆகவே தோன்றுகிறது. இதுவும் ஒரு ஒருதரப்பு போட்டியாகவே ஆஸ்திரேலியாவுக்கு அமையும்.



இந்த உலகக் கோப்பையில் இலங்கைக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள மலிங்கா (அதாங்க, மாங்கா அடிப்பாரே அவரேதான்) காயம் காரணமாக ஆடமாட்டார் என்றே கிசுகிசுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அவர் ஆடினாலும் ஆடாவிட்டாலும் ஒன்றுதான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது. :)

ஜெயசூர்யாவும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக தடுமாறி வந்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனக்கு இது போன்ற புள்ளிவிபரங்களின் மீது நம்பிக்கை இல்லை. இந்தியாவுக்கு கூட வங்கதேசத்திற்கான புள்ளிவிபரமாக 18-ல் இந்தியாவும் 1-ல் வங்கதேசமும் வென்றுள்ளதாக கூறி அதனால் இந்தியா வெற்றி பெறும் என்றார்கள். ஆனால், நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். அதுபோல ஜெயசூர்யா இன்று அடித்துவிட்டால்?? ஆகையால், புள்ளிவிபரங்களால் நடந்தவற்றை மட்டும் தான் கூற முடியும். அவற்றால் வருபவற்றை கணிக்க இயலாது (அடடா! என்ன தத்துவம்!).

என்னுடைய தனிப்பட்ட கருத்தாக, ஆஸ்திரேலியா எளிதில் இந்த போட்டியையும் வெல்லும். வழக்கம்போல, இன்று ஆஸ்திரேலியா மோதுவதால் துபை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

இது எப்படி இருக்கு?

இரண்டு யானைகளை அடி சறுக்க வைத்த வங்கதேசத்திற்கு ஒரு பெரிய யானையை வீழ்த்தியிருந்த அயர்லாந்து ஆப்பு வைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் அயர்லாந்து அணி வங்கதேச அணியை 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் வங்கதேசத்தின் அரை-இறுதி ஆசை தகர்ந்ததுள்ளது.




வங்கதேச அணி சூப்பர் 8-ல் தெ.ஆ அணியை வீழ்த்தியதால் அரை-இறுதிக்கு தகுதி பெறும் நான்காவது (ஆஸி, நியூ & இலங்கை - உறுதி செய்ப்பட்ட அந்த மூன்று அணிகள்) அணிக்கான இடத்தை திறந்து வைத்தது. அதற்கு தெ.ஆ, இங்கிலாந்து, வங்கதேசம் & மே.இ அணிகள் பலமாக போட்டியிட்டன. ஆனால் வங்கதேசத்தின் பயணத்திற்கு அயர்லாந்து முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் அரை-இறுதிக்கு இடம்பெறும் நான்காவது அணிக்கான போட்டியில் இப்போது தெ.ஆ-வும் இங்கிலாந்தும் & மே.இவும் மட்டுமே மிஞ்சியுள்ளன.(பதிவு முதல் பின்னூட்டத்திற்கு பிறகு திருத்தப்பட்டுள்ளது).

அதாவது, இங்கிலாந்திற்கு இரண்டு போட்டிகளும் தெ.ஆ-விற்கு ஒரு போட்டியும் மிஞ்சியுள்ளன.இங்கிலாந்து 4 புள்ளிகளுடனும் தே.ஆ 6 புள்ளிகளுடனும் உள்ளன. இதில் இங்கிலாந்து - தெ.ஆ போட்டியில் தெ.ஆ வென்றால் தெ.ஆ 8 புள்ளிகள் பெறும். அதனால் எளிதாக தெ.ஆ அரை-இறுதியில் நுழைந்து விடும். இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்தும் 6 புள்ளிகள் பெற்று தெ.ஆ அணியுடன் சமநிலை பெற்றுவிடும். ஆனால், இங்கிலாந்திற்கு மே.இ-வுடன் போட்டி ஒன்று மீதமுள்ளது. அதனால், இங்கிலாந்து அதை வென்றால் 8 புள்ளிகள் பெற்று அரை-இறுதிக்கு நுழையும். இங்கிலாந்து ஒருவேளை தெ.ஆ அணியுடனான போட்டியில் தோற்று மே.இ அணியை வென்றால் ரன் ரேட் அடிப்படையில் அரை-இறுதிக்கு செல்லும் அணி தேர்ந்தெடுக்கப்படும். மே.இ-அணியுடனான இங்கிலாந்து போட்டிதான் சூப்பர் 8-ல் இறுதி போட்டி என்பதால் இங்கிலாந்து அணிக்கு தெளிவான வாய்ப்புள்ளது (தெ.ஆ-வுடனான போட்டியை வென்றிருந்தால்).

(நான் குறிப்பிட மறந்த மற்றொரு நிலை முதல் பின்னூட்டத்தில் அனானி குறிப்பிட்டுள்ளார். அதை படிக்கவும். நன்றி அனானி.)

ஆஸ்திரேலியாவிற்கு சவால் விடப்போகும் அணியாக ஜம்பம் விடப்பட்ட தெ.ஆ-வின் இன்றைய நிலை அரை-இறுதிக்கு நுழைவதற்கே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

Saturday, April 14, 2007

அரை-இறுதியில் தோல்வி!!!

இது சர்வதேச போட்டிக்கான பதிவல்ல. சொந்தக் கதை. :)

இந்த ஆண்டுக்கான எங்கள் நிறுவனத்தின் கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்து விட்டன. இதில் நான் இடம்பெற்றிருந்த கூல் மேட்ஸ் (Cool Mates) அரை-இறுதி வரை முன்னேறியது. அரை-இறுதியில் போராடி தோற்று வெளியேறினோம். இருந்தாலும் எங்கள் அணியினரின் டீம் ஸ்ப்ரிட், கடின உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு வீரர்களும் தங்களால் முடிந்தளவு அணியின் வெற்றிக்கு பாடுபட்டனர். நான் உட்பட. :) என்னுடைய பங்களிப்பு விபரம் பற்றி கேட்கிறீங்களா? மன்னிக்கவும் எனக்கு தன்னடக்கம் அதிகம். மேலும், ஆஸ்திரேலிய அணி போல் அணிக்கே முன்னுரிமை. இதோ எங்கள் படை. ஆஸ்திரேலிய அணியின் மஞ்சள் உடைதான் தேடி அலைந்தோம் கிடைக்கவில்லை. அதனால், இந்த பளிச் (மிரட்டும்) வண்ணத்தை தேர்ந்தெடுத்தோம். அருகில் ஆடு/மாடுகள் இருந்தால் ஸ்கீரினை ஆஃப் செய்து விடவும் இல்லை ஆடு மாடுகளை விரட்டி விட்டு படத்தை பார்க்கவும்.

இதுக்கெல்லாம் ஒரு பதிவா?

'இதுக்கெல்லாம் ஒரு பதிவு போடனுமா?' அப்படன்னு நான் நினைச்சாலும், நம்ம பசங்க (அதாங்க Aussies) அயர்லாந்தை வென்றதை பார்த்தா மத்த டீம் மாதிரி சொதப்பாம வென்றது நினைவுக்கு வந்து தொலைத்தது. அதனால் இந்தப் பதிவு.
அயர்லாந்து மற்ற அணிகளை சிறிது திணறடித்தது என்றே கூறலாம். கீழுள்ள போட்டி முடிவுகள் அதையே கூறுகின்றன. யாரும் அயர்லாந்தை அத்தனை Convincing-காக ஜெயிச்சதில்லை. ஆனால் ஆஸி ஆஸிதான். நேற்று நடந்த போட்டியில் சட்டு புட்டுனு ஆடி முடிச்சுட்டு போயிட்டாங்க. அதான் ஆஸ்திரேலியா!

5th Match, Group D: Ireland v Zimbabwe at Kingston - Mar 15, 2007
Match tied. Ireland 221/9 (50 ov); Zimbabwe 221 (50 ov)

9th Match, Group D: Ireland v Pakistan at Kingston - Mar 17, 2007
Ireland won by 3 wickets (with 32 balls remaining) (D/L method). Pakistan 132 (45.4 ov); Ireland 133/7 (41.4/47 ov)

21st Match, Group D: West Indies v Ireland at Kingston - Mar 23, 2007
West Indies won by 8 wickets (with 59 balls remaining) (D/L method). Ireland 183/8 (48/48 ov); West Indies 190/2 (38.1/48 ov)

28th Match, Super Eights: England v Ireland at Providence - Mar 30, 2007
England won by 48 runs. England 266/7 (50 ov); Ireland 218 (48.1 ov)

32nd Match, Super Eights: Ireland v South Africa at Providence - Apr 3, 2007
South Africa won by 7 wickets (with 21 balls remaining) (D/L method). Ireland 152/8 (35/35 ov); South Africa 165/3 (31.3/35 ov)

36th Match, Super Eights: Ireland v New Zealand at Providence - Apr 9, 2007
New Zealand won by 129 runs. New Zealand 263/8 (50 ov); Ireland 134 (37.4 ov)

40th Match, Super Eights: Australia v Ireland at Bridgetown - Apr 13, 2007
Australia won by 9 wickets (with 226 balls remaining). Ireland 91 (30 ov); Australia 92/1 (12.2 ov)

Thursday, April 12, 2007

லாரா ஓய்வு பெருகிறார்

உலகக் கோப்பைக்குப் பின் லாரா ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.


நடந்து வரும் உலகக் கோப்பையில் மே.இ தீவு அணி தோல்விக்கு மேல் தோல்விகளை சந்தித்து வருகிறது. இருந்தாலும் அரை-இறுதிக்கு தகுதி பெறாது என்று உறுதியாக கூற இயலாத நிலை. ஆனால், அதற்குள் மே.இ தீவு அணிக்கு பலமான நெருக்கடி தொடங்கி விட்டது. லாரா பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



லாராவுக்கும் அணித்தேர்வாளர்களுக்கும் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இருந்தாலும், தனக்கு வயதாகி விட்டதால் ஒருநாள் போட்டிகளிலிருந்து இந்த உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெற போவதாக திட்டமிட்டுள்ளார். இவர் ஆடும் ஐந்தாவது உலகக் கோப்பையாகும். இதுவரை 297 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த உலகக் கொப்பையில் சூப்பர் 8-ல் மே.இ அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகளே உள்ளன. மே.இ அணி அரை-இறுதிக்கு தகுதி பெறவில்லையெனில்லை லாராவின் ஒருநாள் போட்டிகள் வாழ்க்கை 299-ல் முடிய வேண்டியிருக்கும்.

நமது மூத்த வீரர்கள் கவனிக்கவும். :)

ஏன்டா அம்புட்டு நல்லவனாடா நீயி?

இந்த உலகக் கோப்பையில் வங்கதேசம் நம் தேசத்தை விரட்டியடித்த அன்று போட்டி முடிந்த பிறகு நடந்த நிகழ்ச்சி இது.

இந்தியாவின் அந்த அவமான தோல்வியால் நாடே கொந்தளிச்சு போயிருந்த நேரம். நம் வீரர்கள் போட்டி முடிந்த பிறகு தங்கள் ஹோட்டலுக்கு திரும்பினர். வங்கதேச வீரர்களும். தமீம் இக்பால் அறையின் இண்டர்காம் ஒலித்தது. எதிர்முனையில் ரணகளப்பட்டு போன எதிர் அணியின் கேப்டன். டிராவிட் தமீம் இக்பாலிடம் சிறிது நேரத்திற்கு தனது அறைக்கு வந்து போகுமாறு கேட்டுள்ளார்.

தமீம் இக்பாலுக்கு பயம் கலந்த ஒரு அதிர்ச்சி. 'என்னடா இது? இன்னிக்கு நாம அடிச்சு ஜெயிக்க வச்சதுக்கு திட்டப்போறானா? இந்தியாவுல வேற எரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு திட்டி பழி வாங்கப்போறானா?' என்ற கலக்கத்துடன் டிராவிட்டின் அறைக் கதவை தட்டினார்.

டிராவிட் சிரித்த முகத்துடன் தமீம் இக்பாலை வரவேற்று இருக்கையில் அமரச்செய்து அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். மிக நேர்த்தியாகவும் துனிச்சலுடன் ஆடியதாக பாராட்டியதோடு எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தமீமிற்கு நம்ப முடியவில்லை. மேலும் அதிர்ச்சியாக டிராவிட் தன் கையொப்பமிட்ட பேட் ஒன்றை தமீமிற்கு பரிசாக அளித்துள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளும்முன்பு மீண்டும் ஒரு பேட்டை கொடுத்து அதை விக்கட் கீப்பர் முஷ்ஃபிக்குர் ரஹீமிற்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம்.

இதை தன் வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டாக தமீம் இக்பால் கூறுகிறார். தமது அணியினருக்கு டிராவிட்டின் மீது அளவு கடந்த மரியாதை இருப்பதாக தெரிவித்துள்ளார். 2004-ல் இந்தியா வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்த போது அங்குள்ள இளம் வீரர்களுக்கு டிராவிட் பல ஆலோசனைகள் வழங்கினாராம். டிராவிட்டிற்கு கிரிக்கெட் மீது மிகுந்த பற்றுள்ளதை இந்நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன என தமீம் தெரிவித்துள்ளார்.

அடடா! இது டிராவிட்டின் Sportsmanship பன்பை அழகாக எடுத்துக்காட்டுகிறது. உயர்ந்து நிற்கிறார் டிராவிட். இதை நான் ஒரு நாளிதழில் வாசித்தபோது நெகிழ்ந்துதான் போனேன்.

பருத்திவீரனின் சித்தப்பு (டிராவிடை பார்த்து): ஏன்டா அம்புட்டு நல்லவனாடா நீயி?

Tuesday, April 10, 2007

உழைப்பிற்கேற்ற ஊதியம்!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த முறையை வாரியம் விலக்கியது அனைவரும் அறிந்ததே. இனிமேல், வீரர்களுக்கு வெற்றி தோல்விக்கேற்ப ஊதியம் வழங்கப்போவதாக வாரியம் அறிவித்துள்ளது. ஊதிய விபரங்கள் கீழே:

ஒருநாள் போட்டிக்கான அடிப்படை ஊதியம்: 1,00,000 ரூபாய்

டெஸ்ட் போட்டிக்கான அடிப்படை ஊதியம்: 2,00,000 ரூபாய்

இவை தவிர, வெற்றி தோல்வி அடிப்படையில்:

ஒருநாள் போட்டிகளில் ஒரு வெற்றிக்கு உள்நாடு/வெளிநாடு ஒவ்வொருவருக்கும்(முதல் 11 பேர்):- 3,00,000 ரூபாய்

ஒருநாள் போட்டிகளில் ஒரு வெற்றிக்கு உள்நாடு/வெளிநாடு சப்ஸ்டிடியூட் வீரர்கள்:-1,50,000 ரூபாய்


உள்நாட்டில் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு முதல் 11 பேருக்கு:- 5,00,000 ரூபாய்
உள்நாட்டில் டெஸ்ட் போட்டி சமநிலை (டிரா) முதல் 11 பேருக்கு:- 3,00,000 ரூபாய்.
வெளிநாட்டில் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு முதல் 11 பேருக்கு:- 6,00,000 ரூபாய்
வெளிநாட்டில் டெஸ்ட் போட்டி சமநிலை (டிரா) முதல் 11 பேருக்கு:- 4,00,000 ரூபாய்.
சப்ஸ்டிடியூட் வீரர்களுக்கு மேலுள்ள தொகையில் பாதியளவு (50%) கிடைக்கும்.

பின்பு, போனஸாக:
உள்நாட்டு ஒருநாள் போட்டி தொடர் வெற்றிக்கு அணிக்கு:- 50,00,000 ரூபாய்
வெளிநாட்டு ஒருநாள் போட்டி தொடர் வெற்றிக்கு அணிக்கு:- 75,00,000 ரூபாய்
டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அணிக்கு:- 1,50,00,000

ஆக, வென்றால் பணம். இது கூட நல்லாத்தான் இருக்கு.

கேப்டன் பதவி வேண்டாம்

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும்புயல் வீசி அடங்கியிருக்கிறது. பயிற்சியாளர் மறைவு, அணித்தலைவரின் பதவி விலகலால் இந்த இரண்டு இடங்களும் தற்போது வெற்றிடமாக உள்ளது. இதனால், பயிற்சியாளரையும் அணித்தலைவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக உள்ளது.

இதில், தற்போது அணியில் ஆடி வரும் மூத்த வீரரான யூனிஸ் கான் அணித்தலைவராக்கப் படுவார் என்று செய்திகள் கசிந்தன. யூனிஸ் கானுக்கு முன்னாள் வீரர்களான பல 'கான்'களிடமிருந்து பலத்த ஆதரவு உள்ளது. இம்ரான் கான் இதை வெளிப்படையாவகே பலமுறை தெரிவித்துள்ளார்.

இச்சூழ்நிலையில், யூனிஸ் கானுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து 'யூனிஸ் கான் அப்பதவியை தற்போதய சூழலில் விரும்பவில்லை' என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அணி தற்போதிருக்கும் சூழ்நிலையில் தலைமை பொறுப்ப ஏற்க அவருக்கு தயக்கம் இருப்பதாக தெரிகிறது. மேலும், அவருக்கு அணியிலுள்ள பல வீரர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது என்றும் அவர் பயப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், பாகிஸ்தான் அணி புதிய கேப்டனை தேர்ந்தெடுப்பதில் திணறி வருகிறது. யாரை நியமிக்கப்பட்டாலும் ஒரு ஆண்டிற்காவது அணியை சீர் செய்ய படாத பாடு பட வேண்டியிருக்கும்.

Monday, April 9, 2007

பி.சி.சி.ஐ - போஸ்ட் மார்டம்

நாம் என்னதான் வலையுலகத்திலும் மெயிலுலகத்திலும் இந்திய அணியின் உ.கோ தோல்வியை அறுத்து கிழித்தாலும், அதற்கு பொறுப்பாளரான பி.சி.சி.ஐ Official Postmortem செய்ய வேண்டும் அல்லவா? அதற்கான கூட்டத்தை கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அறிக்கையும் தந்துள்ளனர்.

அறிக்கைகளை நோண்டி பார்க்கும் முன் சரத் பவாரின் சாமர்த்தியத்தை பாராட்டவேண்டும்(?). அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை மிகத் திறமையாக இந்த விடயத்தை கையாண்டிருப்பது மூலம் நிரூபித்திருக்கிறார். இந்த கூட்டம் கூடும் முன்பு பலமுனைகளிலிருந்து தொடர்ந்து நெருக்கடிகள் வாரியத்திற்கு வந்தவாறு இருந்தன. பயிற்சியாளர், முன்னார் வீரர்கள், ஊடகம், பொதுமக்கள் மற்றும் இன்னாள் மூத்த வீரர்கள். இப்படி எல்லா தரப்பினரையும் அடக்க வேண்டும் என்பது வாரியத்தின் முதல் சவாலாக இருந்தது. அதை திறம்பட (??) செய்தார் சரத் பவார்.

அதாவது, வாரியம் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்ப்பார்கள்/ விமர்சிப்பார்கள் என கருத்தப்பட்ட முன்னாள் வீரர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அவர்களையும் இந்த கூட்டத்தில் பங்கெடுக்க செய்ததன் மூலம். இதன் மூலம் தாங்கள் பங்குபெற்று முடுவெடுக்கும் ஒரு கூட்டத்தை பற்றி அவர்கள் விமர்சிக்க முடியாது. அவர்களும் பொறுப்பாளர்களாகிறார்கள்.

பின்னர், மூத்த வீரர்கள் மேல் தொடர்ந்து குற்றம் சுமத்தியும் சில நேரங்களில் வாரியத்தின் செயல்பாடுகளையும் சாடி வந்த பயிற்சியாளர் சாப்பலையும் (அவர் நீங்கிய பின்னும்) தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு 'தேசிய கிரிக்கெட் அகாடமி'க்கு கெஸ்ட் பயிற்சியாளராக நியமித்தனர். இதனால், அவர் இந்திய கிரிக்கெட்டின் செயற்பாட்டை யோசித்தே இனி விமர்சனம் செய்ய வேண்டி வரும். மேலும், இத்தனை காலங்களில் இந்திய அணியில் என்னவெல்லாம் நடந்தது என தெரிவிக்க அவருக்கு ஒரு தயக்கம் இருக்கும்.

தற்போதுள்ள மூத்தவீரர்கள் சாப்பலின் கருத்து குறித்து பேட்டியளித்த போது, அவர்களின் பிரச்சனையை வாரியம் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது என எச்சரித்தனர். சச்சினுக்கும் யுவராஜுக்கும் எச்சரிக்கை நோட்டிஸும் கிடைத்தது.

இந்நிலையில், வாரியத்தின் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பெரும்பாலும் வரவேற்க தக்கவையே. ஆடுகளங்களின் தன்மை, உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்புகளில் மாற்றம், இளம்வீரர்களின் பயிற்சிகளில் மாற்றம் இப்படி பல. ஆனால், இவையெல்லாம் செயற்பாட்டிற்கு வருமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

திறமைக்கேற்ற- ரிசல்ட் ஓரியண்டட் சம்பளம் எனக்கு பிடித்திருந்தது. ஆனால், இவற்றால் லாபமடையும் வாரியத்தை (பணத்திற்கு மேல் பணம் குவிக்கும்) யார் அடக்குவது? அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப் போவது யார்? அரசா? ஐ.சி.சி யா? இல்லை. யாருமில்லை என்பது தான் சோகம். அவர்கள் வைத்ததே சட்டம். அவர்கள் தங்களது பலத்தை இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்கு பயன்படுத்தினால் நல்லது. எனது தனிப்பட்ட மற்றொரு கருத்து: வீரர்கள் விளம்பர படங்களில் நடிப்பதால் அவர்களுடைய திறமை/கவனம் குறையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால், அது குறித்தான வாரியத்தின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடில்லை.

ஆனால், இந்திய அணியின் தோல்விக்கு நான் முக்கியமான காரணமாக கருதும் ஒரு விடயத்தை பற்றி வாரியம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அதாவது, சாப்பல் கூறியிருந்தது போல மூத்தவீரர்களுக்கிடையில் பிணக்கம். ஒத்துழையாமை. ஒற்றுமையின்மை. இதைப்பற்றி ஏன் வாரியம் கண்டுகொள்ளவில்லை? மூத்த வீரர்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைப்பற்றி தொடர்புடைய வீரர்களிடம் விசாரிக்க கூட இல்லை. அவர்கள் ஐவரும் (சச்சின், ட்ராவிட், கங்குலி, சேவாக் மற்றும் ஹர்பஜம்) இருக்கும் வரை குழு மனப்பான்மையும் ஒத்துழையாமையும் இல்லாமலா போய்விடும்? மற்றவற்றை காட்டிலும் இந்திய அணி 'டீம் ஸ்பிரிட்'டுடன் ஆடியிருந்தாலே உலகக் கோப்பையில் இன்னும் ஆடிக்கொண்டிருக்கும். அதை சரிசெய்யாத வரையில் நாம் ஆஸ்திரேலியாவாக முடியாது. ஜிம்பாப்வேயாக மட்டுமே இருக்க முடியும்.

'ட்'ரிக்கி பாண்டிங்

அரை-இறுதிக்கான மூன்று இடங்களை ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்காக கடுமையான போட்டி உருவாகியுள்ளது. தெ.ஆ அணிக்கெதிரான வங்கதேசத்தின் வெற்றி நான்காவது இடத்தை திறந்து வைத்துள்ளது என கூறலாம். தெ.ஆ, மே.இ, இங்கிலாந்து & வ.தேசம் அணிகள் இவற்றில் எந்த அணியும் நுழையலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

சூழல் இவ்வாறிருக்க நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் களமிறங்கின. இங்கிலாந்தை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றுவோம் என்ற சபதத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அது போலவே ஆஸ்திரேலியா வெற்றியும் பெற்றது.

அதற்காக, இந்த போட்டியின் முடிவை வைத்து இங்கிலாந்து வெளியேறிவிட்டதாக கருதமுடியாது. ஆனால், கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இங்கிலாந்திற்கு மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இதில் இங்கிலாந்து குறைந்தது இரண்டிலாவது வெல்ல வேண்டும். வ.தே, தெ.ஆ & மே.இ அணிகளுடன் மோத வேண்டும். இந்த மூன்று அணிகளுக்கும் அதே அளவிலான வாய்ப்புகள் உள்ளதால் ஆட்டம் இனி சூடு பிடிக்கும். இந்த நான்கு அணிகள் பங்கு பெறும் போட்டிகளில் அனல் பறக்கும்.



சரி, நேற்றைய போட்டிக்கு வருவோம். கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக துவங்கிய ருத்ர-தாண்டவத்தை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறார் ரிக்கி பாண்டிங். எனக்கு விபரம் தெரிய இந்த நான்கு ஆண்டுகளாக ஓட்டங்கள் குவித்து வருபவர் அவர் ஒருவர் மட்டுமே. அவருக்கு அவுட் ஆஃப் ஃபார்ம் என்பதே இல்லையா? உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் லாராவாம் சிலருக்கு சச்சினாம் சிலருக்கு. சிரிப்புத்தான் வருகிறது. எனக்கெதுக்கு வம்பு? நான் சிரிச்சா சிலருக்கு காதில் புகை வரும். :)

ஆஸ்திரேலியாவின் நேற்றைய ஸ்கோர் போர்டை பாருங்கள். டாப்-ஆர்டர் ஆட்டத்தை பாருங்கள். 27, 41,86,55,28. யார் ஃபார்மில் இல்லை என்பதை பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும். இந்நிலை தொடருமாயின் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை கொண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது.

Sunday, April 8, 2007

துபையில் இன்றிரவு மழை?

உலகக் கோப்பையில் இன்று அஞ்சா நெஞ்சர்களாகிய மஞ்சள் படை இங்கிலாந்திற்கு எதிராக களமிறங்குகிறது. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா இறுதியாக தோற்றது 1999 -ல் பாகிஸ்தானுடன் முதல் சுற்றுப் போட்டியில் தான். அதற்குப் பின் அவர்கள் இதுவரை தோற்றதில்லை.



இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு அரை-குறை அணியாக (காயங்கள் & ஓய்வுகள் காரணமாக) விளையாடிய ஆஸ்திரேலியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தும் வென்றவுடன் ஆஸ்திரேலியாவின் சரிவு தொடங்கிவிட்டது போன்ற மாயை ஏற்படுத்திவிட்டனர். சிலர் பதிவிட்டு கொண்டாடினர். அப்போதே, நான் எச்சரித்தேன் 'தப்பு கணக்கு போட வேண்டாம்' என்று. கேட்டார்களா? சண்டைக்கு வந்தார்கள். ஆனால், இதுவரை நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் ஆஸ்திரேலியா யாரிடமும் தினறியது போல கூட தெரியவில்லை. நம்பர் 1 அணி என்று தலையில் வைத்து கொண்டாடும் தெ.ஆ அணியை நாம் பெர்முடாவை துவைத்து காயப் போட்டது போல் போட்டார்கள். நமக்கு பெர்முடா என்றால் ஆஸ்திரேலியாவிற்கு தெ.ஆ. :)

என்னுடைய கணிப்பில் இந்த உலகக் கோப்பையும் ஆஸ்திரேலியாவிற்கே. இன்றைய போட்டி முத்தரப்பு தொடரை வென்று எக்காளமிட்ட இங்கிலாந்திற்கு பாடம் புகட்டும் ஒரு போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதைப் பார்த்து துபையில் சிலருக்கு காதில் புகை வரும் என்பதிலும் துளியும் ஐயமில்லை.

அதனால், அறிவிப்பதென்னவென்றால் இன்றிரவு துபை வானம் முகில் கூட்டத்துடன் காணப்படும். மழை பெய்தால் நாம் செய்த புண்ணியம். அண்ணாச்சிக்கும் நண்பர் முத்துகுமரனுக்கும் நன்றி சொல்லிக்கொள்ளுங்கள்.

அரை-இறுதிக்கு வங்கதேசம்?

மீண்டும் அது நடந்துள்ளது. ஆமாம், வங்கதேசம் இந்த உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக ஒரு பெரிய அணியை வீழ்த்தியுள்ளது. முதலில் பயிற்சி போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து எல்லாரையும் அதிர்ச்சியுறச் செய்தது. அப்போது கிரிக்கெட் வல்லுனர்கள் பயிற்சி போட்டிதானே என்ற மெத்தனத்தில் நியூசிலாந்து ஆடியதால் வங்கதேசம் வென்றிருக்கலாம் என்றனர்.

சரி, அது போகட்டும். அதற்குப் பின் நடந்ததுதான் உலகமகா ஆப்பு. ஒரு பில்லியன் நீலக் கனவு தகர்ந்தது. நேற்று வரை அதற்கு விடைகாணப்படவில்லை. அப்போது கூட இந்தியாவின் மோசமான அனுகுமுறையால் தான் வங்கதேசம் வென்றது என்று நினைத்திருந்தேன். அதை உறுதிப்படுத்துவது போலவே வங்கதேசத்தின் முதலிரண்டு போட்டிகள் சூப்பர் 8-ல். இந்த அணியிடமா தோற்று வெளியேறினோம் என புலம்பித்திரிந்தேன்.

ஆனால், இந்த வங்கப்புலிகள் அதையும் பொய்யாக்கி விட்டனர் நேற்று. இந்த முறை அவர்கள் உலகின் நம்பர் 1 அணிக்கு ஆப்பு வைத்தனர். அதுவும் 67 ஓட்டங்களில் மிகப்பெறும் வெற்றி. ஒருவேளை இந்தியாவைப் போல் தெ.ஆ அணியும் Chokers என்பார்களே அது தான் காரணமா? இல்லை வங்கதேசம் உண்மையில் நன்றாக ஆடியுள்ளதா? எனக்கென்னவோ வங்கதேசம் வெற்றிகளை மெல்ல சுவைக்கத் தொடங்கியுள்ளது போல் தான் தெரிகிறது. வங்கதேசம் இலங்கை அணி 95-96-ல் பெற்ற ஒரு வளர்ச்சியை பெறத் துவங்கியுள்ளது. ஒரு நல்ல வழிகாட்டியும், ஒற்றுமையுடன் போராடும் குணமும் இவ்வணிக்கு தொடருமாயின் துனைக்கண்டத்தில் இன்னொரு வலிமையான உருவாகும் அணி வெகு தொலைவில் இல்லை. பணம் புரண்டதால் தடம் புரண்டுள்ள பெரியண்ணன்கள் (இந்தியா & பாக்) கிரிக்கெட்டில் காணாமல் போனாலும் தம்பிகள் (இலங்கை & வ.தேசம்) கிரிக்கெட்டில் ஜொலிக்கட்டும். நம்பிக்கை இருக்கிறது.

ஏன் வெகு தொலைவிற்கு போக வேண்டும். இந்த உலகக் கோப்பையிலேயே வங்கதேசம் அரை-இறுதிக்கு தகுதி பெற நல்ல வாய்ப்புள்ளது. இன்னும் அவர்களுக்கு அயர்லாந்து, இங்கிலாந்து மற்று மே.இ அணிகளுடனான மூன்று போட்டிகள் மீதமுள்ளன. அதில் அயர்லாந்துடன் வெற்றி ஏறக்குறைய உறுதி. இங்கிலாந்து மற்றும் மே.இ அணிகளுடனான போட்டிகளில் ஏதேனும் ஒன்றை வென்றால் கூட அரை-இறுதிக்கான கதவு திறக்க வாய்ப்புள்ளது. இதில், இங்கிலாந்து & மே.இ ஆடி வரும் மோசமான கிரிக்கெட்டை கணக்கில் கொண்டால் அது சாத்தியமே என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

வாழ்த்துக்கள் வங்கதேசம்!

நாட்டாமை தீர்ப்பு - முழுவிபரம்

இந்திய அணியின் அவமான தோல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க பி.சி.சி.ஐ 6 மற்றும் 7-ந்தேதிகளில் மும்பையில் கூடியது எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். பல அதிர்ச்சி முடிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்க பட்டது. இதோ பி.சி.சி.ஐ முழு அறிக்கை விவரங்கள் ஆங்கிலத்திலேயே(மொழிபெயர்த்து அது தவறாய்ப் போய்- எனக்கெதுக்கு வம்பு): நன்றி Cricinfo.

BCCI Working Committee meeting

BCCI's statement in full

April 7, 2007

Full text of the press release issued by the BCCI following its Working Committee meeting

Mr. Niranjan Shah, Honorary Secretary, BCCI, has announced decisions taken at the Working Committee meeting of the BCCI held on April 7, 2007.

1. With a view to strengthening domestic cricket, efforts will be made to ensure that all Test / ODI Cricketers play Irani, Duleep, Challenger and some Ranji Trophy Matches.

2. Every Association will be directed to prepare fast and lively wickets for domestic tournaments.

3. The BCCI will do away with home and away rotation and allot venues for Irani Trophy, Duleep Trophy, Deodhar Trophy, Ranji Trophy semi-finals and finals and one-day all-India knockout.

4. It was decided that all affiliated units should start their own state academies by April 2009. These academies would be linked to the National Cricket Academy for the purpose of uniformity in coaching.

5. It was decided to scrap the present zonal representation in the senior and junior selection committees. BCCI will appoint selectors on a full time basis based upon the eligibility criteria which would include stature as a player, selection experience etc. They will be remunerated suitably and appointed for a two-year term. The BCCI will take steps to propose necessary amendments to the Constitution to give effect to the above decision.

6. Regular and frequent Under-19 and India A tours to Australia / England / New Zealand / South Africa / West Indies will be undertaken.

7. The Working Committee has directed the Selection Committee to send a young team to Bangladesh under an experienced captain. The selection committee, after discussions has appointed Rahul Dravid as captain for India's tour to Bangladesh, Ireland and England.

8. BCCI will appoint a permanent manager for the Indian team for a two-year term. The Board will also appoint a permanent Media Manager for a two- year term.

9. Notice will be issued to Sachin Tendulkar and Yuvraj Singh under Rule 38 of the Memorandum and the Rules and Regulations of the Board asking for an explanation for their comments made to the media.

10. Working Committee approved the Performance-based Payment to the players and decided to do away with the present gradation for Retainership. Apart from the payment, the following points would form a part of the contract.


# A player will endorse not more than 3 sponsors / products
# No Sponsor can contract more than 2 players.
# The players will not be allowed to do any sponsor-related events 15 days before the tour and also during the tour.
# Before every tour, all the contracted players have to undergo a fitness test and only those who fulfill the benchmarks will be considered for selection.
# No player shall have exclusive contracts with electronic or print media. Only the captain can write a column or talk to the media but not exclusively.
# The players shall take prior approval of the Board before signing any endorsement contract and will submit a copy of the agreement to the Board. All the players shall submit a copy of the existing contracts with sponsors to the Board.
# All the players will have to play a stipulated number of domestic matches when not playing for India.
# In the event of injury to the player, the Board will compensate him the match fees that he would have earned for a maximum period of six months.

11. The Working Committee decided to form a Cricket Advisory committee consisting of the following ex - captains: Kapil Dev, Sunil Gavaskar, MAK Pataudi, Chandu Borde, Ravi Shastri, Krish Srikkanth and S Venkataraghavan under the Chairmanship of President [Sharad Pawar] and will include all the Office Bearers.

12. The working committee appointed Ravi Shastri as Cricket Manager for the India's tour to Bangladesh. It was further decided that Venkatesh Prasad will be the bowling coach and Robin Singh, the fielding coach for the tour.

© Cricinfo



இது பற்றி எனது கருத்துக்களை வரும் பதிவுகளில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

Wednesday, April 4, 2007

சாப்பல் பதவி துறந்தார்

ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்.
வெட்டி ஒட்டியது.

Greg Chappell resigns

Cricinfo staff

April 4, 2007

Greg Chappell, India's coach, will not be seeking an extension of his contract, which expired at the end of the World Cup. Chappell informed the board president of his decision on Wednesday, citing "family and personal reasons."

In a release to the media Chappell, said, "I am grateful to the players with whom I have worked in this time for the challenges that they presented me with and which I tried to meet in a professional, methodical and interesting way in the interests of the team and the individual."

He went on to thank the support staff who worked with him for their efforts. "I would like to make special mention of my support staff without whom I would not have survived the rigours of the past 22 months," he said. "Ian Frazer and Greg King deserve special mention for their efforts as do John Gloster, S Ramakrishnan and Ramesh Mane. I am particularly grateful for the wonderful support of my family, especially my wife Judy, who has enjoyed the experience as much as I."


Chappell also had a word for the people of India who followed cricket so passionately. "The people of India deserve a special mention as they are the ones whose attention, enthusiasm and love and support drive the great game, and business, of cricket in this country, and around the world," he said. "I thank them all, especially those who have written to me and the thousands who have gone out of their way to come up to me with well wishes."

"I am also grateful for the opportunity to extend my knowledge and awareness of this region and for the wonderful friends that I have made here," Chappell wrote in his release. "I look forward to continuing my contact with India in the coming years and I wish Indian cricket and all those involved with it much joy and success in the future."

Chappell also thanked the media for the support he had received from them in the course of his tenure. "To the media, my thanks also for constantly forcing me to question myself, my thinking and the way I went about my job of guiding the team through the many tests that we faced."

More to follow

© Cricinfo


நன்றி கிரிகின்ஃபோ

Tuesday, April 3, 2007

அதிரடி மாற்றங்கள் தேவை

நாம் என்னதான் இந்தியா வெளியேறியதை மறக்க முயன்றாலும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடக்கும் வரை அது இயலாத ஒன்றாகவே இருக்கும்.

சரி. நடந்தது நடந்து விட்டது. இருபது ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த அவமான வெளியேற்றம். அதற்காக, நாம் எல்லாரும் நேசிக்கும் ஒரு விளையாட்டை அப்படியே விட்டுவிட முடியுமா? நமது அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எல்லாருக்கும் அறிய ஆவல் இருக்கும். எனக்கும் இருக்கிறது.

வரும் 7-ந்தேதி பி.சி.சி.ஐ மும்பையில் கூடி இந்திய அணியின் தோல்வி பற்றியும் அதற்கான தீர்வுகளையும் ஆராய இருப்பதாக தெரிகிறது. இதில் பயிற்சியாளர் சாப்பலின் அறிக்கையும் உ.கோ அணிக்கு மேலாளராக சென்ற ஜக்தலே என்பவரின் அறிக்கையும் கணக்கில் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும்.

ஏற்கனவே சாப்பல் பல புயல்களை கிளப்பியிருக்கிறார். மே.இ புறப்படும் முன்பு மூத்த வீரர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார். அது இப்போதுதான்(நான்கு நாட்களுக்கு முன்) சாப்பலின் நண்பர்/பத்திரிக்கையாளர் பாலு என்பவர் மூலமாக வெளியாகியுள்ளது. அதாவது, என்னுடைய கணிப்பில் சாப்பல் சேவாக் மற்றும் ஹர்பஜன் இருவரையும் தேர்வு செய்ய வேண்டாம் எனக் கூறியிருக்க வேண்டும். அதற்கு டிராவிட் மறுப்புத் தெரிவித்து அணியில் சேர்த்திருக்க வேண்டும். இதைத்தான் சாப்பல், 'மூத்த வீரர்கள் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு பதில் மூத்த வீரர்களையே ஆதரிக்கின்றனர்' என குறுஞ்செய்தி அனுப்பியிருக்க வேண்டும்.

இந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி ஒற்றுமையுடன் விளையாடியதாக எங்கேயும் துளிகூட காணக்கிடைக்கவில்லை. எல்லாருக்குள்ளும் ஒரு பிரச்சனை இருப்பது போலவே தோன்றியது. மூத்த வீரர்கள் தங்களுக்குள் குழு மனப்பான்மையுடன் செயல்பட்டதாகவே தெரிகிறது. அவரவர் தங்களின் இடங்களை தக்க வைப்பதிலேயே கவனமாக செயல்பட்டதாக தெரிகிறது (அதில கூட கங்குலிக்கு மட்டுமே வெற்றி).

இது மாதிரியான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனில், இந்திய அணியில் துனிச்சலான சில முடிவுகளை வாரியம் எடுக்க முன்வர வேண்டும் (எடுக்குமா என்பது எனது கேள்வி). இதுபோன்ற குழுக்கள் வளராமல் இருக்க இப்போதுள்ள பயிற்சியாளர், அணித் தலைவர் மற்றும் மூத்த வீரர்களை வீட்டுக்கனுப்ப வேண்டும். நான் ஒரு தீவிர கங்குலி ரசிகன் தான். இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நம் அணியை விட கங்குலி பெரிதல்ல எனக்கு. சச்சின், சேவாக், ஹர்பஜன், கங்குலி & டிராவிட் இல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும். யுவராஜ் அல்லது கைஃப் யாராவது ஒருவரை அணித்தலைவராக்க வேண்டும். இந்த இளம் அணி தொடக்கம் முதலே வெற்றிகளை குவிக்க இயலாது தான். ஆனால், ஒன்றிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக உலகின் முதன்மை அணியாக வரும் வாய்ப்புள்ளது.

மூத்த வீரர்கள் மற்றும் குழு மனப்பான்மையை நீக்கிவிட்டால் மட்டும் போதுமா என்று எல்லாரும் கேட்பீர்கள். அது மட்டும் போதாது தான். நமது ஆடுகளங்களின் தரம் மற்றும் உள்ளூர் போட்டிகளின் தரத்தையும் அதிகரிக்க வேண்டும் (இந்தப் பதிவில் இராம.கி அய்யா அழகாக விளக்கியிருக்கிறார்). முழங்காலுக்கு மேல் பந்து எழும்பும்படியான ஆடுகளங்களை அமைக்க வேண்டும். அப்போதுதான் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளை நாம் வெல்ல முடியும். பெரும்பாலும் ஒருநாள் போட்டிகளின் ஆடுகளங்கள் இப்போதெல்லாம் பேட்டிங் - சாதகமானவையே. டெஸ்ட் போட்டிகளை வெல்ல இதுபோன்ற பயிற்சிகள் நமக்கு அவசியமாகிறது.

சரி. ஆடுகளங்களை மாற்றியமைத்தால் போதுமா என்று கேட்காதீர்கள். உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம், வெறும் பணத்திற்காக மட்டுமே அலைகிறது. இப்போதும் கூட இவர்களுக்கு அக்கரை வந்து மேற்கண்ட துனிச்சலான முடிவுகளை எடுப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. காரணம், வணிக முதலைகளும் அரசியல் வியாதிகளும் நடத்தும் ஒரு நிறுவனம் கிரிக்கெட் எக்கேடு கெட்டால் என்ன பணம் வந்தால் சரிதான் என்று சிந்திக்குமா? அல்லது நாட்டின் முதன்மையான விளையாட்டை சீர் செய்ய முயற்சிக்குமா? ஆக, மேற்சொன்ன முடிவுகள் எடுக்கப்பட்டு இந்திய அணி ஆட்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நோயிலிருந்து மீளவேண்டுமெனில் பி.சி.சி.ஐ-யின் அதிகார வர்க்கமே மாற வேண்டும். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அதிலும் நம் நாட்டு கிரிக்கெட்டிற்கு உணமையிலேயே தொண்டாற்ற துடிக்கும் முன்னாள் வீரர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வரவேண்டும். இப்படியே நிலமை தொடருமாயின், இந்திய அணி ஒருபோதும் விளங்கப் போவதில்லை.

(நிறைய எழுத நினைத்தேன் மனதிற்குள். விடுப்பட்டிருக்கிறது சிலவை. பின்னூட்டங்களில் சொல்ல வாய்ப்பு கிடைத்தால் சொல்கிறேன்)

புலம்ப விட்டுட்டாய்ங்களே!

நெனச்சு நெனச்சு ஆறமாட்டுதுங்க. அதான், அந்த மனக்குமுறலை கொட்டத்தான் இந்த பதிவு.

பின்ன என்னங்க, நம்ம கூட மோதி பங்காலிங்க ஜெயிச்சாலும் ஜெயிச்சானுங்க நம்ம எல்லாருக்கும் (பெ)பங்காலி(ளி)ங்க நல்லா ஆடுறாய்ங்க. நல்ல திறமையான டீம்னு நினைப்பு வந்துச்சு. அந்தப் பையன் தமீம் ஆடுன ஆட்டத்தை பார்த்தா நான் கூட 'வருங்கால ஜெய்சூர்யா இவன் தான்டான்னு' நினைச்சேன்.

ஆனால், அதுக்கப்புறம் நடக்குறதைப் பார்த்தத்தான் தெரியுது. நம்ம நாதாரி நாய்ங்கதான் அந்த பங்காலி டீமை 'பெரிய' டீமா நமக்கு zoom செஞ்சு காட்டியிருக்காய்ங்க. ஒரு சாதாரன டீம்தாங்க வங்கதேசம். இலங்கை, ஆஸி, நியூசிலாந்து எல்லாரும் கும்மி எடுக்குறாய்ங்க பங்காலிங்களை. கொஞ்சமாவது ஈடு கொடுத்து ஆடுற டீமா தெரியல. அந்தப் பையன் தமீம் கூட நமக்கெதிரா அடிச்சதுக்கப்புறம் சுத்தமா அடிக்கவே இல்லை.

நம்ம நாதாரிங்களுக்கே உள்ள ஸ்பெஷல் குணம் இது. ஒரு சிறுபுல்லைக் கூட மூங்கில் ரேஞ்சுக்கு zoom செஞ்சு காமிச்சுருவாய்ங்க. அப்பத் தானே நாமலும் நம்புவோம். அதாவது, 'அடடா! வங்கதேசம் நல்லா ஆடுனாய்ங்கப்பா, அதான் தோத்துட்டோம்' அப்படின்னு சொல்லி நம்ம நாதாரிங்களை மன்னிச்சுடுவோம்ல. இப்படித்தானே முன்னாடியிருந்தே ஜிம்பாப்வே போன்ற அணிகளை வளர்த்தோம்.

இந்த வங்கதேச அணிக்கு அயர்லாந்து பரவாயில்லையோன்னு தோனுது. நம்ம டீம் இருக்க வேண்டிய இடத்துல வங்கதேசம் இருப்பது இன்னும் நெருடலாத்தான் இருக்கு. நல்லா வேணும் நமக்கு. :(

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே???

Monday, April 2, 2007

2006-2007-க்கான ஐ.சி.சி தரவரிசை

சென்ற ஐ.சி.சி ஆண்டுக்கான (ஐ.சி.சி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை) தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் சாம்பியனாக தெ.ஆ அணியும், டெஸ்ட் சாம்பியனாக ஆஸ்திரேலியா அணியும் இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஐந்து தோல்விகள் தெ.ஆ அணிக்கு முதலிடம் பிடிக்க உதவியது. ஆனாலும், 31 மார்ச் அன்றைய நிலவரப்படி இருவரும் ஒரே புள்ளிகள் பெற்றிருந்தாலும் குறைந்த போட்டிகளில் ஆடியதற்காக தெ.ஆ அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. இதனால் தெ.ஆ அணி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை வென்றுள்ளது.

இதற்காக, தெ.ஆ அணிக்கு $175,000 ஐ.சி.சி வழங்கும். இரண்டாவது அணியான ஆஸ்திரேலியாவிற்கு $75,000 கிடைக்கும். அக்-2002 தொடங்கிய இந்த தரவரிசை பட்டியலில் முதன்முறையாக ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால், டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வார்னே, மெக்ராத் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா இந்த முதலிடத்தையும் தக்க வைக்க போராட வேண்டியிருக்கும்.

உ.கோ நடத்துபவர்களுக்கு அடுத்த ஆப்பு

ஆம். இந்த முறை உலகக் கோப்பை நடத்தும் நாடுகளான மே.இந்திய தீவுகளுக்கு பொருளாதார சிக்கல் மேலும் வலுவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியின் முடிவே இதற்கு காரணம்.

மே.இ அணி நேற்று இலங்கையுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்தது மூலம் கிட்டத்தட்ட அரை-இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கிறது. மே.இ அணி இனி அரை-இறுதிக்கு தகுதி பெற வேண்டுமெனில், தெ.ஆ, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். தற்போதய மே.இ அணியின் ஃபார்மை பார்த்தால் தெ.ஆ அணியை வெல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். மற்ற இரண்டு போட்டிகளை வென்று விடும் என கருதினாலும்.



(வேகப்பந்து வீச்சாளர் வாஸின் பந்தில் லாரா ஸ்டம்பிங் செய்யப்பட்டார்)


ஆனால், இப்பொழுதே மே.இ அணி வெளியேறிவிட்டதாக அவர்கள் நாட்டு மக்களும், ஊடகங்களும் முடிவுக்கே வந்துவிட்டார்கள். அவர்கள் அணியின் மீது எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். தமது அணி மீது நம்பிக்கை வைப்பதில் நமக்கு ஈடு இணை யாருமில்லை என்று நினைக்கிறேன். பெர்முடா வங்கதேசத்தை தோற்கடிக்கும், அதன் மூலம் இந்தியா சூப்பர் 8-க்குள் நுழையும் என்று நம்பிய நாம் எங்கே. மூன்று போட்டிகளையும் வென்றால் அரை-இறுதிக்கு போகலாம் என்ற நிலையிலும் தமது அணியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் மே.இ தீவு மக்கள் எங்கே. :)

இத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டு அணியும் வெளியேறிவிட்டதாக கருதப்படும் இச்சூழ்நிலையில் போட்டி ஒருங்கினைப்பாளர்களுக்கு இக்கட்டான நிலை. அதிகளவில் ரசிகர்கள் கொண்ட அணிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெளியேறிய போதே சுற்றுலாத் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தவர்களுக்கு மேலும் விழுந்துள்ள அடி இது. ஏற்கனவே ஈ விரட்டிக்கொண்டிருந்த மைதானங்கள் மேலும் வறட்சியுடன் காணப்படும். மே.இ மக்கள் கூட போட்டிகளை காண ஆர்வமிழப்பார்கள். டிக்கெட்டுகளின் விலை மிகக் கூடுதல் என ஏற்கனவே புலம்பிக்கொண்டிருந்தார்கள். மைதானங்களில் நாற்காலிகள் மட்டுமே போட்டிகளைக் காணும் நிலை ஏற்படும். இது இந்த உலகக் கோப்பையில் பெருத்த பின்னடைவாக இருக்கும்.

(ஆஸியுடன் இந்தியா மோத வேண்டிய போட்டியில் வங்கதேசம்- வெறுமையுடன் ஒரு ரசிகை)


இந்தியா, பாகிஸ்தான் வெளியேறியதால் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. இவர்களை நம்பி முதலீடு செய்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திலுள்ளனர். இந்தியாவின் தேசியக் கொடிகளும், இந்திய அணியின் சீருடைகளும் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வீணாகப்போகும் நிலை. அனைத்து ஹோட்டல்களும் இப்போது Tour-package-களை மலிந்த விலைக்கு தர முன்வந்துள்ளார்களாம். தள்ளுபடியாம்.

(நேற்றைய போட்டியில் மே.இ ரசிகர்களின் தாராள மனப்பான்மை)

நேற்றைய போட்டியில் மே.இ அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளனர். லாராவை உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேற்று போட்டியின் இறுதியில் வெருப்பில் மைதானத்திற்குள் கையில் கிடைத்தவற்றை எறிந்தனர்.

இந்த சூப்பர் 8 போட்டிகள் செல்லும் விதத்தை பார்த்தால், ஆஸ்திரேலியா, இலங்கை, தெ,ஆ மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை-இறுதிக்கு வரும்.

ஆக, மற்றொரு இந்தியாவும் அவுட். (இந்தியாவுக்கு இன்ஷியல் வச்சா கூட விரட்டியடிக்கிறாங்கப்பா)

Sunday, April 1, 2007

சபாஷ் கும்ப்ளே!

அப்பாடா! ஒரு வழியா ஒரு பெருசு முன்னாடியே அறிவிச்சது மாதிரி ஒதுங்கிடுச்சு ஒருநாள் போட்டிகளிலிருந்து.



எனக்குத் தெரிந்து, கும்ப்ளே ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெற வச்சது (Match winning performance) ஒரே ஒரு போட்டிலதான். அது ஹீரோ கோப்பை 1993 இறுதிப் போட்டியில். மே.இ தீவு அணிக்கெதிராக 6 விக்கெட்டுகள் 12 ஓட்டங்களுக்கு. மத்தபடி, அவருடைய திறமை ஒருநாள் போட்டிகளில் ஜொலித்ததில்லை. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் தலைகீழ். அவரில்லாத ஒரு டெஸ்ட் அணியை இன்றும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடந்த 17 வருடங்களாக இந்தியா டெஸ்ட் போட்டிகளையோ/தொடரையோ வென்றிருக்குமாயின் பந்துவீச்சில் கும்ப்ளேயும் பேட்டிங்கில் ட்ராவிடும் கலக்கியிருக்கவேண்டும். இவர்கள் இருவரும் தான் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இன்றுவரை மேட்ச் வின்னர்ஸ்.

அதனால், கும்ப்ளே ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகியது எனக்கு மகிழ்ச்சியே. சபாஷ் கும்ப்ளே! அவருடை தொண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இந்தியா இன்னொரு (ப்யுஸ் சாவ்லா?) நல்ல ஸ்பின்னரை கண்டுபிடுக்கும் வரை தேவை. அது இன்னும் இரண்டாண்டுகளுக்குள் இருக்க வேண்டும். கும்ப்ளேயின் இந்த பெருந்தன்மை மற்ற வீரர்களான ட்ராவிட், சச்சின் & கங்குலிக்கும் இருந்தால் நாட்டிற்கு நல்லது. தங்களை சுமையாக ஒரு நாடே நினைக்கும் முன்பு இம்மாதிரி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு விளையாட்டு வீரனுக்கும் தான் நேசிக்கும்/வாழும் ஒரு விளையாட்டினை விட்டு விலக அவ்வளவு விரைவில் மனம் வராது. ஆனால், ரியாலிட்டியை அவர்கள் கணக்கில் கொள்ளவேண்டும். இம்மூவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகி, இனி ஒரிரு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி ஓய்வு பெற முடிவெடுக்க வேண்டும். முன்வருவார்களா மும்மூர்த்திகள்?