ராகுல் டிராவிட். இவர் இந்தியாவுக்காக ஆடத்துவங்கிய போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் இவர் 300 ஒருநாள் போட்டிகளில் ஆடுவாரென்றோ அல்லது 10000 ரன்கள் எடுப்பாரென்றோ.
ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இவர் ஒருநாள் போட்டிகளில் இடையிடையே புறக்கணிக்கப்பட்டு வந்தார். இவருடைய தெளிவான, காபி-புக் ஸ்டைல் ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்றனர். இவரால் அதிரடியாக ஆடி ரன் குவிக்க இயலாது என்றனர். இவருடைய ஸ்ட்ரைக்-ரேட் வெகு குறைவாக இருந்த காலம் அது.
2000- 2001 ஆண்டில் இவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் தான் இந்தியாவின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர்களாக கருதப்பட்ட அசாருத்தீன், ஜடேஜா மற்றும் ராபின்சிங் ஆகியோர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த கால கட்டத்தில் அணித்தலைவர் கங்குலி ட்ராவிட்டையே விக்கெட் கீப்பராக்கி அவருக்கு வாய்ப்பளித்து ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை வைத்து விளையாடும் முடிவுக்கு வந்தார். ட்ராவிட்டின் விக்கெட் கீப்பிங்கும் அத்தனை மோசமானதாக இருந்ததில்லை. அதற்கு பின்பு தான் அவர் தன்னுடைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தார் ஒருநாள் போட்டிகளில். அவருடைய ஸ்ட்ரைக்-ரேட் ஆவரேஜ் வெகுவாக கூடியது இந்த கால கட்டங்களில் தான். இந்தியாவும் அதிகமாக வெற்றிகளை குவித்ததும் இந்த கால கட்டங்களில் தான்.
பின்பு தனக்கென ஒரு இடத்தை ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் தக்க வைத்துக் கொண்டார். இப்போது உள்ள நிலையில் ட்ராவிட் இல்லாத மிடில் ஆர்டர் (ஒருநாள் அணியில்) நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. தற்போது அவர் 300க்கும் மேலானா போட்டிகளில் ஆடி விட்டார். 10000 ரன்களையும் அவர் குவித்து விட்டார். சபாஷ் ட்ராவிட். பத்தாயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்தியர். ஆறாவது வீரர் உலகளவில். வாழ்த்துக்கள் காப்டன்!
கீழே பத்தாயிரம் ரன்களை குவித்த வீரர்கள் பட்டியல் அவர்கள் பத்தாயிரம் ரன்கள எடுக்க எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதில் சச்சின் வெகு குறைவான இன்னிங்ஸ்களை மட்டும் எடுத்துள்ளார் பத்தாயிரம் அடிக்க. அடுத்து நம்ம தல கங்குலி வருகிறார்.
சச்சின் - 259 இன்னிங்ஸ்: 10,105 ரன்கள்: 42.63 சராசரி
கங்குலி - 263 இன்னிங்ஸ்: 10,018 ரன்கள்: 41.22 சராசரி
லாரா - 278 இன்னிங்ஸ்: 10,019 ரன்கள்: 40.56 சராசரி
ட்ராவிட்- 287 இன்னிங்ஸ்: 10,044 ரன்கள்: 39.08 சராசரி
இண்ஜமாம் - 299 இன்னிங்ஸ்: 10,018 ரன்கள்: 38.98 சராசரி
ஜெயசூர்யா - 328 இன்னிங்ஸ்: 10,057 ரன்கள்: 32.13 சராசரி
இம்மும்மூர்த்திகளும் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தருவார்களா?
1 comment:
//இம்மும்மூர்த்திகளும் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தருவார்களா?//
நிச்சயமாக.சச்சின் இந்த உலகக்கோப்பையில் 15,000 ரன்களை கடந்து சாதனை புரிய வேண்டுவோம்.
Post a Comment