Monday, February 26, 2007

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே மிகக் கூடுதலாக கிரிக்கெட் விளையாடப்படுவதை சர்வதேச வீரர்கள் சங்கத் தலைவர் டிம் மே (Tim May) வன்மையாக கண்டித்துள்ளார். இது அனைவருக்கும் போட்டிகளின் மீது ஒரு வித சலிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பைக்குப் பின் இந்த ஆண்டு மட்டும் 21 போட்டிகளில் (டெஸ்ட் & ஒருநாள்) ஆட இருப்பதாக அட்டவனை உருவாக்கப்பட்டுள்ளது. இது மிக கூடுதலாகும் என கவலை தெரிவித்துள்ளார். இதனால் வீரர்களும் சோர்வடையும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

மேலும் தெரிவிக்கையில், சில நாடுகள் அளவிற்கதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்றார். இது குறித்த வாதங்கள் சர்வதேச
வீரர்கள் சங்கத்திற்கும் ஐ.சி.சி இடையில் தொடர்ந்து நடை பெற்று வருவதாகவும் கூறினார்.

இதற்கு அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் அமைப்பினரும், ஐ.சி.சி
மற்றும் ஒலி/ஒளிபரப்பு ஊடகங்களின் பண மோகமே காரணம் என்று சாடினார் அவர். கூடுதலான போட்டிகளால் வீரர்களின் உடல் தகுதி பற்றியோ, கிரிக்கெட் மீது சலிப்பு வரும் என்பதை பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.



2000-ம் ஆண்டிலிருந்து இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிகள் கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதே இதற்கு அடிகோல். இரு அணிகளும் 2000- 2005 ஆண்டுகளில் மோதியுள்ள மூன்று டெஸ்ட் தொடர்களும் மிக விருவிருப்பானதாக அமைந்திருந்தது. அதில் இரு அணிகளும் தலா ஒரு தொடர் வெற்றியும், ஒரு தொடர் சமநிலையானது நினைவிருக்கலாம். இதனால் இரு அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கிறது.

எனக்கும் டிம் மே கூறுவது சரி என்றே படுகிறது. அளவிற்கு மிஞ்சினால் கிரிக்கெட்டும் நஞ்சு தானே.

4 comments:

Anonymous said...

hi
yarukku world cup solunga parkkalalm?
nan first?

Anonymous said...

padithu viten. mithiyai nalai vanthu anupukiren

மணிகண்டன் said...

கரெக்டுதாங்க..அவர் சொல்றமாதிரி ஒரே அணிகள் தங்களுக்குள் இவ்வளவு போட்டிகள்ள விளையாடினா, மத்த அணிகளோட விளையாடி த்ங்களின் திறமையை மெருகேற்றிக்கொள்ளும் வாய்ப்பு போயிடும்.

Naufal MQ said...

//மணிகண்டன் said...
கரெக்டுதாங்க..அவர் சொல்றமாதிரி ஒரே அணிகள் தங்களுக்குள் இவ்வளவு போட்டிகள்ள விளையாடினா, மத்த அணிகளோட விளையாடி த்ங்களின் திறமையை மெருகேற்றிக்கொள்ளும் வாய்ப்பு போயிடும்.
//
அது மட்டுமில்லாமல், நமக்கும் ஆஸி-இந்தியா போட்டிகள் என்றாலே ஒரு வித சலிப்பு வந்துவிடும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியா-பாக் மோதல். தற்போதெல்லாம் அவர்கள் அடிக்கடி மோதுவதால் பழைய த்ரில் இல்லை.