Thursday, February 22, 2007

Men In Blue

நம்மில் பலருக்கும் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் அணியப்படும் உடைகளில் விருப்பம் இருக்கும். முதன் முதலாக ஆஸ்திரேலியாவில் தான் பல வண்ணங்களினாலான உடை உடுத்தி ஒருநாள் போட்டிகள் நடந்தன. ஆஸ்திரேலியாதான் கிரிக்கெட்டில் பல புதிய விசயங்களை புகுத்தி கிரிக்கெட்டில் புரட்சி செய்து வந்துள்ளது. அவர்கள் தான் ஒருநாள் கிரிக்கெட்டை கொண்டுவந்தனர். முதன் முதலில் பகலிரவு ஆட்டங்களை நடத்தினர். வண்ண உடைகளை கொண்டுவந்தனர். இப்படி பல...

1980-கள் முதல் இந்தியா நீல நிற உடையை தேர்வு செய்து அணிந்து வருகிறது. அதில் அவ்வப்போது சிற்சில மாற்றங்களுடன் உடை வடிவமைக்கப்படும். வடிவமைக்கப்படும். உலகக் கோப்பைக்கான உடைகள் தனித்தன்மையுடன் காட்சியளிக்கும்படி வடிவமைக்கப்படும். அதாவது உலகக் கோப்பைக்கு வடிவமைக்கப்படும் உடை மற்ற எந்த தொடரிலும் பயன்படுத்தப்பட மாட்டாது.

முதன் முதலில் உலகக் கோப்பையில் 1992-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த போதுதான் வண்ண உடை பயன்படுத்தப்பட்டது. அதில் இந்தியா வழக்கத்திற்கு மாறாக வெளிர் நீலத்திற்கு பதில் கருநீலம் அணிந்தது.



1996-ல் இந்திய துனைக் கண்டத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா வழக்கம்போல் நீலத்திற்கு மாறியது.




1992 &1996 -ல் நடைபெற்ற உலக் கோப்பை போட்டிகளில் எல்லா அணியினருக்கும் டிஸைன் ஒரே போல் இருக்கும். வண்னங்கள் மட்டும் மாறுபட்டிறுந்தது. ஆனால், 1999 இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியிலிருந்து டிஸைன்களும் அணிக்கணி வேறுபட்டது. வண்ணங்கள் மட்டும் அவர்கள் தெரிவு (பெரும்பாலும் அதே வண்ணங்களுடன்). இந்தியாவிற்கு மீண்டும் நீலம். எனக்கு மிகவும் பிடித்த டிஸைன் 1999 உலகக் கோப்பை டிஸைன் தான்.




2003 உலகக் கோப்பையில் கீழுள்ளது போல வடிவமைப்புடன் இந்திய அணியின் உடை வடிவமைக்கப்பட்டது.




வரும் உலகக் கோப்பைக்கான உடை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் நீல நிறம் கொஞ்சம் வெளுத்துள்ளது. இந்திய தேசிய கொடியின் நிறங்களும் இடம் பெற்றுள்ளன. உலகப் புகழ் பெற்ற Nike நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. கீழே நமது அணியினர் அந்த உடையுடன் காட்சி தருகின்றனர் பாருங்கள்.





இதெல்லாம் சரி. உலகக் கோப்பையை வென்று தருமா இந்த உடை? (இப்படை தோற்கின் எப்படை வெல்லும்)

10 comments:

கார்த்திக் பிரபு said...

aanal indha udai than confirm a nu innum kulappam irupadhai tv news lam solranga ...wait panni parpom!!


sari oru questions azaurudin mattum ean white color helmet anindhu vilayadinaar ??

Naufal MQ said...

//கார்த்திக் பிரபு said...
aanal indha udai than confirm a nu innum kulappam irupadhai tv news lam solranga ...wait panni parpom!!

//
ஓ அதுவா. அதாவது உடை டிஸைன் மற்றும் வண்ணம் எல்லாம் இதே தான் அணிவார்கள். ஆனால், Logo மட்டும் எவை எவை எங்கு இடம்பெறவேண்டும் என்பதை ஐ.சி.சி முடிவு செய்யுமாம். வேறொன்றுமில்லை நண்பரே.

//sari oru questions azaurudin mattum ean white color helmet anindhu vilayadinaar ??//

தெரியவில்லை நண்பரே. நானும் கவனித்ததுண்டு. ஏன்?

கார்த்திக் பிரபு said...

enakum theriyyala pa ..romba nal doubt adhu ..yaravadhu padhil sonna nalla irukum

Naufal MQ said...

//கார்த்திக் பிரபு said...
enakum theriyyala pa ..romba nal doubt adhu ..yaravadhu padhil sonna nalla irukum

//
எதாவது அறிவியல் ரீதியான காரணமா இருக்கும். வெயில்-வெள்ளை. அந்த மாதிரி எதாவது?

A Simple Man said...

அசாருதீன் மட்டுமல்ல மஞ்ச்ரேக்கர் கூட வெள்ளை ஹெல்மெட் அணிந்து ஆடியுள்ளார்.. ஏனென்றுதான் தெரியவில்லை ..

ஒரு வேளை வெள்ளை ஹெல்மெட் அணிந்தால் டக் அவுட் (வாத்து) ஆகாமாட்டார்கள் என்று யாராவது ஜோஸியம் சொல்லியிருப்பார்களோ :-))

வடுவூர் குமார் said...

ஜெயிச்ச பிறகு அந்த சட்டையை கிரிக்கெட் போர்ட்டுக்கு திருப்பி கொடுக்கனுமா?
நடிகர்கள் பலர் சீன் முடிந்தவுடன் அப்படியே ஜூட் விடுகிறார்களாம்.:-))

மணிகண்டன் said...

//இப்படை தோற்கின் எப்படை வெல்லும்//

வெற்றி நிச்சயம்!!!

Naufal MQ said...

//Abul said...
அசாருதீன் மட்டுமல்ல மஞ்ச்ரேக்கர் கூட வெள்ளை ஹெல்மெட் அணிந்து ஆடியுள்ளார்.. ஏனென்றுதான் தெரியவில்லை ..
//

அட ஆமாங்க, மஞ்ச்ரேக்கர் கூட அப்படித்தாங்க. :)

//ஒரு வேளை வெள்ளை ஹெல்மெட் அணிந்தால் டக் அவுட் (வாத்து) ஆகாமாட்டார்கள் என்று யாராவது ஜோஸியம் சொல்லியிருப்பார்களோ :-))
//
இருக்கும் இருக்கும்!!

Naufal MQ said...

//வடுவூர் குமார் said...
ஜெயிச்ச பிறகு அந்த சட்டையை கிரிக்கெட் போர்ட்டுக்கு திருப்பி கொடுக்கனுமா?
நடிகர்கள் பலர் சீன் முடிந்தவுடன் அப்படியே ஜூட் விடுகிறார்களாம்.:-))
//

கொடுக்கத்தேவையில்லைங்க. :)
இவனுங்க வியர்வை நாத்தம் யாருக்கு வேணும்.

Naufal MQ said...

மணிகண்டன்,
ஆசை பலிக்கட்டும்.