Monday, February 26, 2007
கிரிக்கெட்டின் போக்கை மாற்றிய ஜாண்டி ரோட்ஸ்
Jonty Rhodes. இவரின் வருகைக்குப்பின் தான் கிரிக்கெட் உலகில் தடுப்பாட்டத்தின் (Fielding) இன்றியமையாமை உணரப்பட்டது. அதுவரையிலும் கிரிக்கெட் என்றாலே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டுமே நினைவுக்கு வரும். தடுப்பாட்டத்தின் போது ஏதோ 'அணிந்திருக்கும் உடை அழுக்காகி விடக் கூடாது' என்று விதி உள்ளது போல் நடந்துகொள்வார்கள் அனைத்து அணியினரும்.
1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது தான் இந்த 'மின்னல்' அறிமுகமானார். அந்த உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்று இம்ரான் கான் உலகக் கோப்பையை முத்தமிடும் காட்சி என்னதான் பல ஊடகங்களில் அச்சடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டாலும், பாகிஸ்தானுக்கெதிராக தெ.ஆ மோதிய போட்டியின் போது ஜாண்டி ரோட்ஸ் இண்ஜமாமை ரண்-அவுட்டாக்கிய காட்சி பல நாட்களுக்கு ரசிகர்கள் மனதை விட்டு அகல மறுத்தது உண்மை. நானெல்லாம் அப்போது பள்ளியில் படித்து(?)க் கொண்டிருந்த காலம். இன்னும் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது அந்த ரண்-அவுட்டை பற்றி சிலாகித்து நாங்கள் பேசி அரட்டை அடித்தவை.
நான் மட்டுமில்லை உலக அளவில் ஜாண்டி ரோட்ஸிற்கு ரசிகர்கள் உருவாகினர். முதன் முறையாக தடுப்பாட்டத்தையும் ரசித்து பார்க்க தொடங்கினர். தடுப்பாட்டத்தால் ஒரு ஆட்டத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்யலாம் என்ற நிலை முதன் முதலில் உருவானது அந்த ரண்-அவுட்டில்லிருந்துதான் என்பது மிகையில்லாத உண்மை. அந்த ரண்-அவுட்டின் வீடியோ கீழே.
அதே கால கட்டத்தில் (அதற்கு முன்பிருந்தே) இந்திய அணியில் ஒரு நட்சத்திர தடுப்பாட்ட வீரர் இருந்து வந்தார். அவர் தான் அசாருத்தீன். அசாருத்தீனின் த்ரோவை ரசிப்பதற்கே ஒரு கூட்டமிருந்தது. பந்தை இலாகவமாக பின்னோக்கி மின்னல் வேகத்தில் அவர் எறிவது ஒரு கண்கொள்ளா காட்சிதான். அப்போது இந்திய அணியில் ஜாண்டி ரோட்ஸுடன் ஒப்பிடுவதற்கு (ஜாண்டி ரோட்ஸுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்பது தான் உண்மை) ஒருவர் இருந்தார் என்றால் அது அசார் மட்டும் தான். அப்போதைய இலங்கை வீரர் ரோஸன் மகானாமவும் நல்ல தடுப்பாட்ட வீரராக இருந்தார்.
பின்பு தான் எல்லா அணிகளும் தடுப்பாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின. இந்திய அணியில் அஜய் ஜடேஜா, ப்ரவின் அம்ரே, ராபின் சிங் வந்தனர். தற்போதய அணியில் யுவ்ராஜ் சிங், முஹம்மது கைஃப், சுரெஷ் ராய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளனர். இந்திய அணியினரின் தடுப்பாட்டம் முன்னேற்றமடைந்துள்ளது என்பதற்கு சான்று கீழே உள்ள வீடியோ.
இன்றய கால கட்டத்தில் அனைத்து அணியினருமே பெரும்பாலும் சிறந்த தடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணியாகவே தங்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். இதற்காக தனியாக பயிற்சியாளர்களை கூட அமைத்து வருகின்றனர். இப்போதைய கிரிக்கெட் தாரக மந்திரம் என்னவென்றால் 'Catches win matches' என்பது தான். உங்கள் பார்வைக்காக சில Stunning Catches.
பின் குறிப்பு: ஒரு வருத்தமளிக்கக் கூடிய உண்மை என்னவென்றால் 'மின்னல்' ரோட்ஸிற்கு வலிப்பு நோய் உள்ளதென்பது தான். கொடுமையல்லவா இது?
Labels:
ரோட்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
நம்ம ஹீரோ சார் அவரு....அற்புதமான களத்தடுப்பாளார்
நல்ல தொகுப்பு பாஸ்ட் பவுலர். எனக்கு மிகவும் பிடித்த ஜாண்டி ரோட்ஸின் ரன் அவுட் இந்திய தென் ஆப்பிரிக்க அணீகளுக்கு இடையேயான போட்டியில் ராபின் சிங்கை அவுட்டாக்கியதுதான்(உலக கோப்பை போட்டியா என்று நினைவில்லை)டவுன்த டிராக் வந்து ஆப் சைடில் ராபின் சிங் அடிப்பார். அடித்து திருப்பிப் பார்க்கும் முன் அவரை ரோட்ஸ் ரன் அவுட் ஆக்கியிருப்பார். அந்த காட்சி இருந்தால் போடுங்களேன். நேயர் விருப்பமாக.
//சோமி said...
நம்ம ஹீரோ சார் அவரு....அற்புதமான களத்தடுப்பாளார்
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சோமி ஐயா. எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். துடிப்பானவர்.
//முத்துகுமரன் said...
நல்ல தொகுப்பு பாஸ்ட் பவுலர். எனக்கு மிகவும் பிடித்த ஜாண்டி ரோட்ஸின் ரன் அவுட் இந்திய தென் ஆப்பிரிக்க அணீகளுக்கு இடையேயான போட்டியில் ராபின் சிங்கை அவுட்டாக்கியதுதான்(உலக கோப்பை போட்டியா என்று நினைவில்லை)டவுன்த டிராக் வந்து ஆப் சைடில் ராபின் சிங் அடிப்பார். அடித்து திருப்பிப் பார்க்கும் முன் அவரை ரோட்ஸ் ரன் அவுட் ஆக்கியிருப்பார். அந்த காட்சி இருந்தால் போடுங்களேன். நேயர் விருப்பமாக.
//
ஆம் நண்பரே. நீங்கள் குறிப்பிடும் ரன் - அவுட் எனக்கும் ஞாபகம் உள்ளது. தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்.
நல்ல மீள்பார்வை ஃபாஸ்ட் பவுலர்.
one of the best post from u
u can add pointing 's recent catch also
keep goin
நன்றி மணிகண்டன். :)
//கார்த்திக் பிரபு said...
one of the best post from u
u can add pointing 's recent catch also
keep goin
//
நன்றி கார்த்திக் பிரபு. தற்போது தடுப்பாட்டத்திற்கும் உடல்தகுதிக்கும் (ஃபிட்னஸ்) கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கு காரணமானவர் ரோட்ஸ் தான். அது தான் இப்பதிவை எழுத தூண்டியது.
உலக கிரிக்கெட் அரங்கில் கடும் பயிர்ச்சியால் தனிமுத்திரை பதித்த அருமையான ஒரு ஆட்ட நாயகன் பற்றிய நல்ல படைப்பு.
//நன்மனம் said...
உலக கிரிக்கெட் அரங்கில் கடும் பயிர்ச்சியால் தனிமுத்திரை பதித்த அருமையான ஒரு ஆட்ட நாயகன் பற்றிய நல்ல படைப்பு.
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.
ரொட்ஸ் களத்தில இருந்த அதுக்காக match பாக்கிறானான் ஐயா.
batsman எல்லாரும் அவர் பக்கம் மட்டைய திருப்ப பயப்பிடுவார்கள்.
"catches win matches"
//Thillakan said...
ரொட்ஸ் களத்தில இருந்த அதுக்காக match பாக்கிறானான் ஐயா.
batsman எல்லாரும் அவர் பக்கம் மட்டைய திருப்ப பயப்பிடுவார்கள்.
"catches win matches"
//
முற்றிலும் உண்மை நண்பரே.
உண்மையில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு அவ்வளவு விரைவில் ரோட்ஸை மறக்கமுடியாது.
தினேஷ் கார்த்திக்கையும் அதற்குள் லிஸ்டில் சேர்த்துவிட்டீர்களே!
//கார்மேகராஜா said...
உண்மையில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு அவ்வளவு விரைவில் ரோட்ஸை மறக்கமுடியாது.
//
உண்மை நண்பரே. உலக வரைபட எல்லைகளை கடந்தது அவரது ரசிகர் கூட்டம்.
//தினேஷ் கார்த்திக்கையும் அதற்குள் லிஸ்டில் சேர்த்துவிட்டீர்களே!//
நான் பார்த்த ஓரிரண்டு போட்டிகளிலேயெ கணித்து விட்டேன்.
நல்ல தொகுப்பு!
96 உலககோப்பை நடக்கும்போதுதான் முதல் முதலா கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சேன். எனக்கு மிகவும் பிடித்த பீல்டர் ரோட்சை விட அசார்தான், அசாரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி ஒரு ஸ்டைல் இருக்கும்.
:))
//எனக்கு மிகவும் பிடித்த பீல்டர் ரோட்சை விட அசார்தான், அசாரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி ஒரு ஸ்டைல் இருக்கும்.
//
வாங்க தம்பி,
ஒருவேளை அசார் இந்தியராக இருப்பதாலும், நீங்கள் சொல்வது போல் அட்டகாசமான ஸ்டைல் இருப்பதாலும் இருக்கும். ஆனாலும் 'மின்னல்' ரோட்ஸின் ஸ்பீடு ஸ்பீடுதான். இணையில்லாதது.
நல்ல பகிர்வு , வாசித்ததன் பின்,
96ல் இலங்கை கிண்ணம் வெல்ல முக்கிய காரணம் அவர்களது களத்தடுப்பு,
திலகன்,
சரியாகச் சொன்னீர்கள். இப்போது கூட இலங்கையின் தடுப்பாட்டம் அத்தனை மோசம் ஒன்றுமில்லை.
ஹா!! மறக்க முடியுமா ஜாண்டிய??அவர் epilepticன்னு எங்கேயோ படிச்ச நியாபகம்.நீங்க சொல்லி இருக்கர மாதிரி he was a pioneer in bringing the importance to fielding......வீடியோ ச்ளிப்பிங்ஸ்க்கு நன்றி.
//Radha Sriram said...
ஹா!! மறக்க முடியுமா ஜாண்டிய??அவர் epilepticன்னு எங்கேயோ படிச்ச நியாபகம்.நீங்க சொல்லி இருக்கர மாதிரி he was a pioneer in bringing the importance to fielding......வீடியோ ச்ளிப்பிங்ஸ்க்கு நன்றி.
//
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி மேடம்.
உங்க பின் குறிப்ப படிக்காம எழுதிட்டேன் fast bowler.....மன்னிக்க!!
//Radha Sriram said...
உங்க பின் குறிப்ப படிக்காம எழுதிட்டேன் fast bowler.....மன்னிக்க!!
//
அதனாலென்ன, ஒன்றும் குறைந்து விட போவதில்லை. எனக்கும் ஒரு புதிய ஆங்கிலச் சொல் படித்தது போலாயிற்று. இதுவரை வலிப்பு நோயிற்கு Fits என்று மட்டும் தான் எனக்குத் தெரியும். இன்றுதான் இப்படியும் சொல்லலாம் என்று தெரிந்து கொண்டேன். நன்றி.
Post a Comment