Saturday, February 17, 2007

தப்புக் கணக்கு வேண்டாம்!

'ஆஸ்திரேலியாவுக்கு சரிவு காலம் தொடங்கிடுச்சுடோய்' அப்படின்னு என்னுடைய நண்பர்கள் சிலர் சிலாகித்து வருகின்றனர். நேற்று நியூசிலாந்து அணியுடன் நடந்த போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியா தோற்றதை வைத்து தான் இப்படி பேசிக்கிறானுங்க. உண்மையில் நடந்தது என்னன்னா, முதுகுவலி காரணமாக ஓய்வெடுத்து வரும் பாண்டிங், ஓய்விலிருக்கும் கில்கிரிஸ்ட், தோள்பட்டை காரணமாக சைமண்ட்ஸ், இடுப்பு காயம் காரணமாக மைக்கேல் க்ளார்க் மற்றும் காயம் காரணமாக ஆடாத ப்ரெட் லீ இவர்களெல்லாம் இல்லாத ஒரு இரண்டாம் தர ஆஸ்திரேலிய அணிதான் நேற்று தோற்றுள்ளது. இதை வச்சுகிட்டு ஆஸ்திரேலியா இனிமேல் அம்பேல் தான் அப்படின்னெல்லாம் சொல்ல முடியாது.

ஆஸ்திரேலியா கொட்டம் நிரந்தரமாக அடக்கப்படுமானால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், தற்போது ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் சந்தித்து வருவது சிறு தற்காலிக தடுமாற்றமே.

ஆகையால், வலையுல கிரிக்கெட் மக்களுக்கு அறிவிப்பதென்னவென்றால். மக்களே! அவசரப்பட்டு ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியை கொண்டாட வேண்டாம்.

நேற்றைய போட்டியின் ஸ்கோர் இங்கே.

8 comments:

முத்துகுமரன் said...

தப்பு கணக்கு இல்லை பாஸ்ட் பவுலர். ஆஸ்திரேலியாவின் பிடி தளரத் தொடங்கியிருப்பது என்பது உண்மையே. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு அணியுலும் காயமடைந்த முக்கிய வீரர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். தொடர்ச்சியான தோல்விகள் அவர்கள் மனவலிமையை அசைத்துப் பார்த்திருக்கிறது என்பது உண்மையே. எத்தனை திறமை வாய்ந்த அணி என்றாலும் அன்றைய தினம் சிறப்பாக விளையாடும் அணிக்கே வெற்றீயும் கோப்பையும்.
உலகக் கோப்பை போட்டிகளில் தடுமாற்றத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்கினால் மற்ற அணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியே.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Fast Bowler said...

இல்லை நண்பரே!
ஒரே நேரத்தில் 6 முன்னனி வீரர்கள் ஆடவில்லை என்றால் எப்படி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக இந்திய அணியில் ஒரு போட்டியில் சச்சின், ட்ராவிட், கங்குலி, யுவராஜ், ஜாகிர் மற்றும் தோணி ஆடவில்லை என்றால் எப்படி இருக்கும்? அதுபோல் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு உள்ள நிலமை. அடிபட்டுள்ளார்கள். நிச்சயமாக பாய்வார்கள் உலகக் கோப்பையில். மன வலிமை மிக்கவர்கள் அவர்கள்.

முத்துகுமரன் said...

Australia tour of New Zealand
2nd ODI: New Zealand v Australia at Auckland, Feb 18, 2007

Australia 336/4 (50 ov)
New Zealand 337/5 (48.4 ov)

Match over

Fast Bowler said...

வாருங்கள் நண்பரே!
தற்போது தங்களை பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். :)

முந்தைய பின்னூட்டம் தான் தற்போதும் என்னுடைய நிலை. உங்கள் காட்டில் அடை மழை. என்ஜாய்!

ஆனாலும், நியூசிலாந்து அணி சேஸிங் சூப்பர்ப்!!

முத்துகுமரன் said...

ஆஸ்திரேலியாவுக்கு எப்போதுமே நியுஸிலாந்து வேப்பங்காய்தான். ஆஸ்திரேலிய அணியை கண்டு அஞ்சாது விளையாடுபவர்களில் நியுஸிலாந்துக்குத்தான் முதல் இடம். ஆஸ்திர்லேயாவை வெல்ல திறமையோடு கொஞ்சம் மனவலிமை இருந்தால் போதும். ஆஸ்திரேலியாவின் வெற்றி மந்திரமே எதிரணியினரை மனதளவில் தாக்குவதே. மத்தவங்களுக்கு குடுத்துகிட்டு இருந்த அல்வா இப்ப முந்திரி பருப்போடு திரும்பி வருகிறது. அவ்வளவுதான். தொடங்கி வைத்த தென்னாப்பிரிக்காவிற்கு வாழ்த்துகள். :-)

Fast Bowler said...

நீங்கள் சொல்வது சரிதான். சிறிது நாட்களுக்கு முன் கில்கிரிஸ்ட் சொன்னது: "Between us and the world cup there is only Newzealand".

அல்வா கொடுப்பது தொடருமானால் மகிழ்ச்சியே.

நாமக்கல் சிபி said...

//தற்காளிக//

தற்காலிக என்று இருக்க வேண்டும்!

//அவசரப்பட்டு ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியை கொண்டாட வேண்டாம்//

அதே போல் இந்திய அணியின் வெற்றியும் அல்லவா?

(இந்த கமெண்ட் பாப் அப் விண்டோ தேவையா?)

Fast Bowler said...

வருகைக்கும் தவறை சுட்டியமைக்கும் நன்றி நண்பர் சிபி. தவறை திருத்திவிட்டேன்.

//அதே போல் இந்திய அணியின் வெற்றியும் அல்லவா?
//
அது வழக்கமா தெரிஞ்சது தானே! :)

//(இந்த கமெண்ட் பாப் அப் விண்டோ தேவையா?)
//
பரீசிலிக்கிறேன் நண்பரே.