கிரிக்கெட் உட்பட முக்கிய விளையாட்டுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் போது டி.டி யுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டப்படி, உலகம் முழுதும் நடக்கும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை பெற்ற நிறுவனங்கள், அவற்றை டி.டி யுடன் கட்டாயமாக பகிர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.
இதன் மூலம் நாடு முழுதும் உள்ள மக்கள் விளையாட்டுப் போட்டிகளை கண்டு களிக்கலாம். கிராமங்கள் வரை கிடைக்கும் டி.டி யில் இது கிடைப்பதால் நல்ல விசயமாகவே படுகிறது. எதற்கெடுத்தாலும் காசு என்னும் வழியில் செல்லும் தனியார் சேனல்களுக்கு இது ஒரு அடியாகவே கருதுகிறேன்.
27 comments:
என்ன்யா ஜாதி சண்டை இல்லாம ஒரு பதிவு.
அதுனாலதான், பின்னூட்டமில்லாமல் ஈ ஓட்ட வேண்டியிருக்கு. :)
//அதுனாலதான், பின்னூட்டமில்லாமல் ஈ ஓட்ட வேண்டியிருக்கு. :)///
:)))))))) ரசித்தேன்.
உண்மையிலேயே இது வரவேற்க்கப்படவேண்டிய ஒன்று. காரணம், இந்த கார்ப்பரேட் கலாசாரத்தில் இலாபம் மட்டுமே முக்கிய குறியாக இருக்கிறது. பாருங்களேன், என் ஊரான சுறு டவுனில் Star Sports மற்றும் ESPN வருகிறது, ஆனால் சென்னையில் இல்லை. :(
இந்த சட்டம் சரியான சவுக்கடி.
//அதுனாலதான், பின்னூட்டமில்லாமல் ஈ ஓட்ட வேண்டியிருக்கு//
கவலைப் படாதீங்க!
நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்?
டி.டில வந்தா நல்லதுதானே!
அப்படியே எங்க ஊருலயும் ஒளிபரப்ப யாராவது ஏற்பாடு பண்ணுங்களேன்!
எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!
:(
நண்பர் சீனு,
வருகைக்கும் சும்ம 'நச்'சுன்னு சொன்னதுக்கும் நன்றி.
சீனு வந்தப்பவே நாங்களும் வந்ததால ஒரு வேளை நாங்க சீனு அனுப்பிய ஆட்களோன்னு நினைச்சிக்காதீங்க!
Ozone-ல ஓட்டை விழுந்துடுச்சு-னு சொன்னாங்க. இவ்ளோ பெரிய ஓட்டையா விழுந்துச்சு. இத்தனை ஆவிகள் பொல பொல-னு கொட்றாங்க!!
//கவலைப் படாதீங்க!
நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்?
//
அதான் கவலையே!! :)
//குட்டிச் சாத்தான்ஸ் கிளப் said...
அப்படியே எங்க ஊருலயும் ஒளிபரப்ப யாராவது ஏற்பாடு பண்ணுங்களேன்!
//
'Sky Sports' அப்போ உங்க ஊர்ல இல்லையா?
//கங்குலி said...
எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!
:(
//
யப்பா, நீ ஆளை வுடு. சாப்பலுக்கே அல்வா கொடுத்தவனாச்சே நீ.
//நான் சீனு அல்ல said...
சீனு வந்தப்பவே நாங்களும் வந்ததால ஒரு வேளை நாங்க சீனு அனுப்பிய ஆட்களோன்னு நினைச்சிக்காதீங்க!
//
சரி சரி. நம்பிட்டேன். அதுக்கென்ன இப்போ. பின்னூட்டம் வந்தா சரிதான்.
//Ozone-ல ஓட்டை விழுந்துடுச்சு-னு சொன்னாங்க. இவ்ளோ பெரிய ஓட்டையா விழுந்துச்சு. //
சுற்ருப்புற மாசுபடுதலால் வெப்பம் அதிகரித்து ஓசோன் படத்தில் ஓட்டைகள் விழுகின்றனவாம்.
சிலர் வெப்பத்திற்கு எங்கள் வாய்தான் காரணம் என்று வீண் பழி சுமத்துகிறார்கள்.
:(
//Ozone-ல ஓட்டை விழுந்துடுச்சு-னு சொன்னாங்க. இவ்ளோ பெரிய ஓட்டையா விழுந்துச்சு. இத்தனை ஆவிகள் பொல பொல-னு கொட்றாங்க!! //
ஹஹஹா!
இந்தப் பின்னூட்டத்தை நான் மிகவும் ரசித்தேன்!
ஆனாலும் ஏதும் பத்த வெக்கிற மாதிரி மேட்டர் இல்லையே?
:(
//கொள்ளிவாய்ப்பிசாசு said...
//Ozone-ல ஓட்டை விழுந்துடுச்சு-னு சொன்னாங்க. இவ்ளோ பெரிய ஓட்டையா விழுந்துச்சு. //
சுற்ருப்புற மாசுபடுதலால் வெப்பம் அதிகரித்து ஓசோன் படத்தில் ஓட்டைகள் விழுகின்றனவாம்.
சிலர் வெப்பத்திற்கு எங்கள் வாய்தான் காரணம் என்று வீண் பழி சுமத்துகிறார்கள்.
:(
//
சே சே. சான்ஸே இல்லை. அது யாரு இப்படி வீண் பழி சுமத்தியது. சாப்பலோட சதியா இருக்குமோ?
//சாப்பலுக்கே அல்வா கொடுத்தவனாச்சே //
ஆமாப்பா! அவன் சுடச் சுடக் கிண்டி கொடுத்ததுல என் வாய் வெந்து போச்சு!
//இந்தப் பின்னூட்டத்தை நான் மிகவும் ரசித்தேன்!//
எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டது தான்.
//ஆவி அம்மணி said...
ஆனாலும் ஏதும் பத்த வெக்கிற மாதிரி மேட்டர் இல்லையே?
:(
//
ஏன் இந்த கொலை வெறி?
வேண்டுமெனில், 'இந்திய அணியில் இட ஒதுக்கீடு தேவையா' என பதிவு போடலாமா? சும்மா தமிழ்மனமே பத்திகிட்டு எரியும்.
நான் ஈ ஓட்டுறத பத்திதான் பேசிக்கிட்டு இருந்தேன். இப்ப ஆவி ஓட்டனும் போலிருக்கே.
//கிரேக் சாப்பல் said...
//சாப்பலுக்கே அல்வா கொடுத்தவனாச்சே //
ஆமாப்பா! அவன் சுடச் சுடக் கிண்டி கொடுத்ததுல என் வாய் வெந்து போச்சு!
//
அப்போ அவர் 'வெந்த வாய்' பிசாசா?
//நான் ஈ ஓட்டுறத பத்திதான் பேசிக்கிட்டு இருந்தேன். இப்ப ஆவி ஓட்டனும் போலிருக்கே.
//
நம்மகிட்ட தாயத்து இருக்கு! வேணுமா?
அட பாவிகளா! என்னக்ய வெச்சு காமெடி பன்னுராங்களே!!!
2 பின்னூட்டம் தானே இருந்துச்சேன்னு நான் ஒரு பின்னூட்டம் போட்டு பாக்குறதுகுள்ளார, 23-ஆஆஆஆஆ...
//நாமக்கல் சிபி said...
//நான் ஈ ஓட்டுறத பத்திதான் பேசிக்கிட்டு இருந்தேன். இப்ப ஆவி ஓட்டனும் போலிருக்கே.
//
நம்மகிட்ட தாயத்து இருக்கு! வேணுமா?
//
வாங்க சிபி, உங்களைத்தான் ஆவிங்கெல்லாம் தேடுறதா கேள்விப் பட்டேன். எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க.
//சீனு said...
அட பாவிகளா! என்னக்ய வெச்சு காமெடி பன்னுராங்களே!!!
2 பின்னூட்டம் தானே இருந்துச்சேன்னு நான் ஒரு பின்னூட்டம் போட்டு பாக்குறதுகுள்ளார, 23-ஆஆஆஆஆ...
//
அது சீ.மு (சீனுக்கு முன்). இது சீ.பி.
Post a Comment