Tuesday, February 20, 2007

ஹய்யோ! ஹய்யோ!!

மூன்றாவது போட்டியிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது. மீண்டும் நியுசிலாந்து அணி 300+ ஓட்டங்களை எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. 3-0 என்ற கணக்கில் தொடரை தோற்றுள்ளது. எனக்கு விபரம் தெரிந்த ஆஸ்திரேலியா ஒரு தொடரில் முதன் முறையாக ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது.

என்ன கெட்ட காலமோ தெரியல ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கு மேல் அடி விழுந்து வருகிறது. இதற்கு அவர்களும் ஒருவகையில் காரணமே. சிலர் காயம் காரணமாக விளையாடவிட்டாலும். சிலர் ஓய்வெடுக்கட்டும் என்றே நியுசிலாந்திற்கு அனுப்பப்படவில்லை. ஒரு தோற்கும் போது ஏற்படும் நெருக்கடி மிகக் கொடுமையானது. அது இன்று ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஊடகங்கள் அந்த அணியின் தோல்வியை கிழித்து வருகிறது. தேவையில்லாத நெருக்கடியில் ஆஸ்திரேலியா தவித்து வருகிறது.

இதனால், இரண்டு வகையான போக்குகளை ஆஸ்திரேலியாவிடம் இருந்து உலகக் கோப்பையில் எதிர்பார்க்கலாம். ஒன்று, அவர்கள் மனவலிமை மிக்கவர்களாதலால், கடுமையான குணத்துடன் எதிரிகளை தகர்த்தெரிவார்கள். இல்லையேல், தளர்ந்து போய் தள்ளாடுவார்கள். நான் எதிர்பார்ப்பது முதலாவதை. நீங்கள்?

9 comments:

கார்த்திக் பிரபு said...

idhula ennaya doubtu kandippa they ll bounce back

Naufal MQ said...

கார்த்திக் பிரபு,
என்னைப் போலவே எண்ணியுள்ளீர்கள். பார்க்கலாம்!

They are very Professional. Isn't?

முத்துகுமரன் said...

46வது ஓவரிலிருந்து உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் தாமதாம வந்துட்டீங்க.

நம்பிக்கைதானே வாழ்க்கை. ஆஸ்திரேலியா மீண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆஸ்திரேலியா வீழ்த்த முடியாத அணி ஒன்றும் அல்ல என்ற நம்பிக்கையும் மற்ற எல்லா அணிகளுக்கும் இப்போது வந்திருக்கும். அது ஆஸ்திரேலிய அணியுடனான மோதல்களின் போது ஏற்படும் நெருக்கடியைக் குறைக்கும். ஊருல சொல்லுவாங்கலே பழமொழி, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அதுதான் இது.

1983 வரை மேற்கிந்திய தீவுகளும் இதே வலிமையுடன் தான் இருந்தது. அதன் பின் நடந்தவைகள் வரலாறு. லீக் போட்டியில் ஒரு தோல்வியைச் ஆஸ்திரேலியா சந்திக்குமானால் அது அவர்களின் வீழ்ச்சி அத்தியாத்தின் முக்கிய பக்கங்களாக மாறிவிடும்.

பொறுத்திருந்து பார்ப்போம். :-)

கார்த்திக் பிரபு said...

we indian team have many professional palyers ..but lack of confidence and fear abt the aussies are main reason to loosee matches


neenga partheenganna last one day nama aussie kuda mini world cup la audinom..adhil sachin batting and sachin out ana vidham neenga parkanum ..avvlo mosama irukum

inadha payam than karanam ..iyalpaa aadanum ..illlaina nama world cup i adikalam ..ovvoru world cupilum pakistaniyum ..nz layum jeyikira nammla ean ausis a jeyikka mudiyadhu sollunga ..eanna nz landhum pakum easy a niraya match la aussiya mannai kavva vachiruku ...

keep goin frend

Naufal MQ said...

//முத்துகுமரன் said...
46வது ஓவரிலிருந்து உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் தாமதாம வந்துட்டீங்க.
//

நியூசிலாந்து ஆஸி-யை விரட்டுதோ இல்லையோ நீங்க என்னை விடமாட்டீங்க போலிருக்கு. :)

//நம்பிக்கைதானே வாழ்க்கை. ஆஸ்திரேலியா மீண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆஸ்திரேலியா வீழ்த்த முடியாத அணி ஒன்றும் அல்ல என்ற நம்பிக்கையும் மற்ற எல்லா அணிகளுக்கும் இப்போது வந்திருக்கும். அது ஆஸ்திரேலிய அணியுடனான மோதல்களின் போது ஏற்படும் நெருக்கடியைக் குறைக்கும். ஊருல சொல்லுவாங்கலே பழமொழி, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அதுதான் இது.
//
ஆம்! மற்ற அணிகளுக்கு ஆஸியுடனான பயம் நீங்கியிருக்கும்.

//1983 வரை மேற்கிந்திய தீவுகளும் இதே வலிமையுடன் தான் இருந்தது. அதன் பின் நடந்தவைகள் வரலாறு. லீக் போட்டியில் ஒரு தோல்வியைச் ஆஸ்திரேலியா சந்திக்குமானால் அது அவர்களின் வீழ்ச்சி அத்தியாத்தின் முக்கிய பக்கங்களாக மாறிவிடும்.
//
அது நடந்தால் உங்களுக்குத்தான் முதல் ட்ரீட் :)

Naufal MQ said...

ஆம் கார்த்திக்,
இந்திய அணி மட்டுமல்ல உலகில் மற்ற எல்லா அணிகளுக்கும் மனரீதியான பயமே ஆஸியின் இத்தனை நாள் வெற்றிகளுக்கு காரணம். அது நீங்கிவிடின் நன்மை. இப்போ எல்லாரும் களத்தில் இறங்க ஆயத்தமா இருப்பாங்க.

பாரதிய நவீன இளவரசன் said...

Australia has lost 6 of the last 7 matches, and today's defeat is their fourth in terms of losing to the opponent after scoring 300+. Whereas England has won 5 of its last 6 matches after terribly being bowled out for two low scores (around 110 & 120) by Aus and NZ.

In One-day Cricket, anything can happen!

Naufal MQ said...

//Bharateeyamodernprince said...

In One-day Cricket, anything can happen!
//

But it was not happening to Aus so often like this before. Thats the concern here.

ஆனால், நிச்சயம் பதிலடி வரும் ஆஸ்திரேலியாவிடம் இருந்து. அவர்களுடைய மனநிலை, உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு அப்படி. திறமைக்கு பஞ்சமில்லாதவர்கள்.

Naufal MQ said...

//Bharateeyamodernprince said...

In One-day Cricket, anything can happen!
//

But it was not happening to Aus so often like this before. Thats the concern here.

ஆனால், நிச்சயம் பதிலடி வரும் ஆஸ்திரேலியாவிடம் இருந்து. அவர்களுடைய மனநிலை, உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு அப்படி. திறமைக்கு பஞ்சமில்லாதவர்கள்.