Monday, February 12, 2007

இங்கிலாந்துக்கு ஒரு 'ஓ'



யாராவது நினைத்திருப்பார்களா இந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை அடிச்சு விரட்டும்னு. ஆஷஸ்ல படுதோல்வி. மைக்கேல் வாக்ன் மீண்டும் காயத்தால் விலகல். ஒரு நாள் போட்டி தொடர்லேயும் தோல்வித் துவக்கம். தட்டு தடுமாறி ஃபைனல்ஸ் வந்தது. இப்படி அடிக்கு அடி சறுக்கி இறுதியில் உலகத்தை வியப்படையச் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து ரெண்டு ஃபைனலில் ஜெயிச்சு கோப்பையை தட்டிகிட்டு போயிருக்கு.


ஆஸ்திரேலியாவை மற்ற டீமெல்லாம் ஜெயிக்கிறதே கஷ்டம். அதுவும் பெஸ்ட் ஆஃப் த்ரீ ஃபைனல்ஸ் என்றால் கேக்கவே வேணாம். நம்ம ஒன்னுல ஜெயிச்சாலும் மத்த ரெண்டையும் ஜெயிச்சுடுவானுங்க ஆஸ்திரேலியக் காரனுங்க. அதுனாலதான் அவனுங்க நாட்டுல நடக்குற தொடர்ல மட்டும் 3 ஃபைனல்ஸ். அந்த மாதிரி சூழ்நிலையில தகர்ந்து போயிருந்த இங்கிலாந்து டீம் ஜெயிச்சுருக்குனா சூப்பர் இல்லையா. அதான், நேத்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.


அந்த மகிழ்ச்சியில மண்ணை அள்ளி போட்டுட்டானுங்க நம்ம நாட்டு தடிப் பசங்க. ஜெயிக்குற மாதிரி விளையாடி கடைசியில தோற்பது நம்ம பசங்களுக்கு கை வந்த கலை. இந்த கலை தொடர்ந்தா உலகக் கோப்பைக் கனவுகளுக்கு அல்வாதான். கங்குலியும், சச்சினும் நல்லா ஆடி ஒரு வழியா தேத்தி கொண்டுவந்தானுங்க. கடைசில பாத்தா 'அதிரடி' தோணி அதிரடியே அடிக்காம கவுத்திடாரு. பாத்து விளையாடுப்பா விக்கெட்டை பறிகொடுத்துடாதே யாராச்சும் தோணி பேட் பண்ண வரும் போது சொல்லியிருப்பாங்க போல அதான் மனுஷன் வெறும் சிங்கில்ஸ்லேயெ வாழ்க்கையை ஓட்டிட்டாரு. டீமும் தோத்துப் போச்சு. அவர் அடிச்ச 48 ரன்ஸ்ல ஒரெ ஒரு 4 தான். அதுவும் அவுட்டாகுறதுக்கு முந்துன பந்துல. வெளங்குமா.


அப்படியே அந்த பக்கம் ஆப்பிரிக்காவுக்கு தெற்கே போனால், பாகிஸ்தானை வருத்து எடுத்துட்டானுங்க. இண்ஜமாம் மட்டும் போராடியிருக்காரு. இருந்தாலும் பயனில்லை. அப்ரிடிக்கு வேற 4 மேட்ச் தடை போட்டிருக்கு ஐ.சி.சி. இதையெல்லாம் கடந்து பாக் அணி மீலுமா? அதைப் பத்தி நிறைய பேச வேணாம். நம்ம பொழப்பே நாறிக் கெடக்கு. அடுத்த வீட்டு கதை நமக்கெதுக்கு.


இன்னிக்கு நம்ம நாட்டு உலகக் கோப்பை டீம் அறிவிக்க போறாங்களாம். பாக்கலாம் யார் யார் ஆயுதம் ஏந்த போறதுன்னு.

2 comments:

மணிகண்டன் said...

ஒரு 'ஓ' போட்டச்சுங்க. போன வாரந்தான் கங்காருவுக்கு மணி கட்டப்போவது யார்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதுக்குள்ள கட்டிட்டாங்க.

Naufal MQ said...

ஆமா, மணிகண்டன் எத்தனை காலத்துக்கு கங்காரு தொல்லையை தாங்குறது. எல்லா தொடக்கமும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகனும். ஆனால் இப்பக்கூட ஆஸ்திரேலியா தான் உலகக் கோப்பையை வெல்ல கூடுதல் வாய்ப்புள்ள அணி என்று எனக்கு தோன்றுகிறது.