Thursday, February 8, 2007

ஓவர் டு ஏடன் கார்டன

நேற்றைய இரவு மழையுடன், இப்போதும் மேகமூட்டத்துடன் இருக்கும் ஏடன் கார்டனில் இந்தியாவும் இலங்கையும் 4 போட்டிகளை கொண்ட தொடரை தொடங்க இருக்கின்றன. இந்திய நேரம் 2.30 துவங்கும் இது ஒரு பகல்-இரவு போட்டியாகும். இதுதான், முதன் முறையாக பனி பொழியும் பிப்ரவரியில் ஏடனில் பகல்-இரவு போட்டி நடக்கிறதாம். இதனால் மாலையில் மைதானப் புற்களில் ஈரப்பதம் காணப்படும் என கூறப்படுகிறது. இதனால் பந்து வீச்சு சிறிது கடினமாக இருக்கும்.

டாஸ் போடப்பட்டு விட்டது. இந்திய அணித் தலைவர் ராகுல் ட்ராவிட் வென்றுள்ளார். இந்திய அணி முதலில் பந்து வீசும் என முடிவெடுத்துள்ளார். (Dew Factor?).

இந்த சுற்றுப்பயணத்திற்கு முரளிதரனும், சமிந்தா வாஸும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவமில்லாத பந்து வீச்சுடன் இலங்கை களமிறங்குகிறது. இந்திய அணியில் பத்தான் தோள்பட்டை காரணமாகவும், யுவராஜ் முதுகு வலி காரணமாகவும் மற்றும் அகார்கர் காய்ச்சல் காரணமாகவும் இன்று போட்டியில் விளையாடமாட்டர்கள்.

மைதானத்தில் கூடியிருக்கும் 1,00,000 ரசிகர்களும் தங்கள் 'தாதா' கலக்குவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றன. கடந்த முறை ஏடனில் நடந்த போட்டியில் மைதானம் முழுதும் இந்திய அணிக்கு எதிராக கூவியது நினைவிருக்கலாம். காலம் மாறிவிட்டது. தாதா மீண்டும் அணியில். இந்த முறை 1 லட்சம் பேரும் இந்திய அணிக்காக (தாதாவுக்கு) ஆதரவளிப்பார்கள்.

அணிகள் விபரம்:
India: 1 Robin Uthappa, 2 Sourav Ganguly, 3 Virender Sehwag, 4 Sachin Tendulkar, 5 Rahul Dravid (capt), 6 Dinesh Karthik, 7 Mahendra Singh Dhoni (wk), 8 Harbhajan Singh, 9 S Sreesanth, 10 Zaheer Khan, 11 Munaf Patel.

Sri Lanka: 1 Sanath Jayasuriya, 2 Upul Tharanga, 3 Mahela Jayawardene (capt) 4 Kumar Sangakkara (wk), 5 Marvan Atapattu, 6 Tillakaratne Dilshan, 7 Russel Arnold, , 8 Farveez Maharoof, 9 Lasith Malinga, 10 Malinga Bandara, 11 Nuwan Zoysa.

2 comments:

Naufal MQ said...

5.6 Patel to Tharanga, OUT, he's dragged it back and the Eden Gardens erupt! That wasn't short enough to pull and Tharanga tried to force it through midwicket from outside off stump, he got a thick inside edge that cannoned into off stump
WU Tharanga b Patel 14 (19b 3x4 0x6) SR: 73.68

Naufal MQ said...

7.4 Patel to Jayawardene, OUT, Munaf has his second! Jayawardene falls to a tame shot, that was fullish on off stump, Jayawardene got under it and scooped it softly to Dravid at mid-on, catches don't come much easier than that
DPMD Jayawardene c Dravid b Patel 0 (4b 0x4 0x6) SR: 0.00