Wednesday, February 7, 2007

அன்றொரு நாள் இதே தினத்தில்

வெகு வெகு சமீபத்தில், கி.பி. 1999 -ம் ஆண்டு (1960 சமீபம்னா 1999 வெகு வெகு சமீபம்-னு சொல்லலாம்ல) பிப்ரவரி 7ம்-ந்தேதி டெல்லியில் நடந்த வேட்டை இது. ஆம், பாக்கிஸ்தான் அணியினுடனா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பாக்கிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 420 ஓட்டங்களை தருகிறது. பாக்கிஸ்தான் அணியோ அதை எட்டும் நோக்கில் 100 ரன்களை கடந்தும் விக்கெட் பறிகொடுக்காமல் ஆடிக் கொண்டிருக்கிறது.

அந்த நேரத்தில் தான் அனில் கும்ப்ளே முதல் விக்கெட்டாக அஃப்ரிடியை ஆட்டமிழக்கச் செய்கிறார். பின்பு தொடங்கியது மனித வேட்டை. நம்ம 'ஸைலண்ட் கில்லர்' கும்ப்ளே திடிரென விஷ்வரூபமெடுக்கிறார். மளமள வென எல்லா விக்கெட்டுகளையும் எடுக்கிறார். அவர் 9 விக்கெட்டுகள் எடுத்த பின், வேறு யாரும் பத்தாவது விக்கெட்டை எடுத்தவிட கூடாதென முடிவு செய்து மறுமுனையில் பந்துவீசிய ஸ்ரீநாத் 'எட்டா' பந்தாகவே வீசி தனக்கும் விக்கெட் கிடைக்காதவாறு பார்த்து கொள்கிறார். இறுதியில் வாசிமின் விக்கெட்டை வீழ்த்தி அந்த 'பெர்ஃபெக்ட் டென்'-ஐ எடுக்கிறார் கும்ப்ளே. இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இரண்டே வீரர்கள் தான் இந்த சாதனையை செய்துள்ளார்கள். ஒன்று ஜிம் லேக்கர். மற்றொருவர் நம்ம ஸைலண்ட் கில்லர். இந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.

3 comments:

கார்த்திக் பிரபு said...

good commentry !! keep goin ..yarukkum theriyadha seydhigal ellam sollunga

Naufal MQ said...

//கார்த்திக் பிரபு said...
good commentry !! keep goin ..yarukkum theriyadha seydhigal ellam sollunga
//
வாங்க கார்த்திக், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னால் இயன்றவரை முயற்சி செய்கிறேன்.

வடுவூர் குமார் said...

சே!!என்ன அலுவலகமையா?
யு டுயூப் எல்லாம் மடக்கி வைத்திருக்கார்கள்.
வீட்டுக்கு போனா இந்த பக்கம் எங்கோ போய்விடுகிறது.
எழுதி வைத்துக்கொள்கிறேன்.