ஆமாங்க! 37 வது முறையாக மும்பை அணி இந்தியாவின் தலையாய கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை சாம்பியனாகி இருக்கிறது. 37 முறை!! மற்ற அணிகள் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு சாதனை. இங்க அமுக்கி புடிச்சா தெரியும் மும்பையின் ராஜாங்கம். மும்பை தன்னை 'இந்தியாவில் கிரிக்கெட் என்றால் நாங்கள் தான்' என்பதை மீண்டும் தெளிவாக உறுதி செய்துள்ளது.
நேற்று நடந்த பெங்கால் புலிகளுடன் மும்பை வான்கடேயில் முடிவடைந்த இறுதி போட்டியில் மும்பை அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்காலை தோற்கடித்தது. இதில் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்களும் ஆடினர். சச்சின், கங்குலி, அகார்கர், பொவார் மற்றும் ஜாஹிர் கான். இதில் ஜாஹிர் கான் இதுவரை பரோடா அணிக்காகவே ஆடி வந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை மும்பை அணியினர் வலைத்து போட்டு கொண்டு பெங்காலை விரட்டி அடித்தனர். கூலிக்கு ஆள் வச்சு அடிக்கிறது இது தானோ. இந்த போட்டியில் அவர் 5 + 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியை வெற்றி பெற செய்தார்.
நம்ம புலி கங்குலி வெற்றி இலக்கான 472-ஐ தொட எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், மறுமுனையில் எல்லாரும் சொதப்பி விட்டார்கள். கங்குலி 90 ஓட்டங்கள் எடுத்தார். கங்குலி ஆட்டமிழக்கும் வரை ஆட்டம் சூடு பிடித்திருந்தது. இறுதியில் பெங்கால் 339 -க்கு ஆட்டமிழந்தது. பெங்காலின் ஆட்டத்தை அங்கு வந்திருந்த திலிப் வெங்சர்க்கார் வெகுவாக பாராட்டினார். 'அவர்கள் தோற்றாலும் - நாங்கள் வங்கப் புலிகள் என்பதை நிருபித்தனர்' என்றார்.
மும்பையின் இந்த ராஜாங்கம் தகர்ந்து மற்ற அணிகள் கோலோச்சப் போவது எப்போது?
2 comments:
இதே 'Form'ஐ கங்கூலியும் சச்சினும் இனி வரும் சர்வதேச ஆட்டங்களிலும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
நல்ல தகவல்கள்
நன்றி மணிகண்டன். சரியா சொன்னீங்க. ரெண்டு பேரும் இதே ஃபார்ம்-ல இருந்தா யார் நம்மல அசைக்க முடியும்?
Post a Comment