Monday, February 5, 2007

ஸைமண்ட்ஸ் ?

ஸைமண்ட்ஸ் காயம்:
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ ஸைமண்ட்ஸ் இங்கிலாந்துடன் நடந்த போட்டியின் போது காயமடைந்தார். அவருடைய தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. காயம் பலமானதாகவே கருதுவதாக உடற்பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். அவருக்கு உடனே அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.



உலகக் கோப்பைக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் அவர் உலகக் கோப்பையில் கலந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் ஸைமண்ட்ஸ் விரைவில் குணமடந்தால் அணிக்கு நல்லது என தெரிவித்துள்ளார். ஸைமண்ட்ஸ் போன்ற அதிரடி ஆல்-ரவுண்டர் அணியில் இருப்பது எவ்வளவு பலம் என்பது பாண்டிங்-கிற்குத் தானே தெரியும். உலகக் கோப்பைக்கான அணி விபரம் பிப்ரவரி 13க்குள் ஐ.சி.சி யிடம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.





=======================================================

ஆஸ்திரேலியா வெற்றி:


ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடை பெற்ற நேற்றைய ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வழக்கம்போல் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 290 ஓட்டங்களை எடுத்தது. பதிலளித்து ஆடிய ஆஸி அணி 48.2 ஓவர்களில் 291 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாண்டிங் 104 ஓட்டங்களும், ஹாட்ஜ் 99 ஓட்டங்களும் எடுத்தனர். முழு ஸ்கோர் விபரம்.


===============================================

தெ.ஆ வெற்றி:

உலகக் கோப்பைக்கான ஆயத்த வேலைகளை தெ.ஆ அணியும் செவ்வனே செய்து வருகிறது. நேற்று பாக்கிஸ்தானுடன் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாக்கிஸ்தான் அணியினர் அதிர்ந்து போய் உள்ளனர்.

முதலில் பேட் செய்த தெ.ஆ 50 ஓவர்களில் 392/6 எடுத்தது. இதில் யாரும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. (இதுதான் அணித் திறமை). பின்பு ஆடிய பாக் - 46.4 ஓவர்களில் 228 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. முழு ஸ்கோர் விபரம்.

No comments: