Sunday, February 4, 2007

எதிர்பார்த்தது போலவே மீண்டும் சேவாக்

நேற்று இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே மீண்டும் சேவாக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் அவர் மிடில் ஆர்டரிலேயே ஆட வேண்டி வரும் என நினைக்கிறேன். பார்க்கலாம் பழையது போல சேவாக் பட்டய கெளப்புகிறாரா என்று.

அணியில் மேலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முனாஃப் படேல் மற்றும் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணி இது என்றே கூறலாம். இது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் 'இந்த 15 பேரிலிருந்தும் மேலும் வெளியேற்றப்பட்டுள்ள காம்பீர், ராய்னா & பொவார் ஆகியோரிலிருந்தும் உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்படும்' என கூறினார்.

அட பாவிகளா! அப்போ கைஃப்? ராய்னா பெயரெல்லாம் பரிசீலிக்கப்படும் போது கைஃப் என்ன அவ்வளவு கேவலமாகவா ஆடினார்? Something wrong somewhere.

Squad:
Rahul Dravid (capt), Sachin Tendulkar, Sourav Ganguly, Yuvraj Singh,
MS Dhoni, R Uthappa, Ajit Agarkar, Zaheer Khan, Harbhajan Singh, Anil Kumble,
Dinesh Karthik, Irfan Pathan, Munaf Patel, Virender Sehwag, Sreesanth

No comments: