Sunday, February 18, 2007

ஆஸிக்கு முந்திரி பருப்பு அல்வா

மீண்டும் ஆஸ்திரேலியா தோல்வி. உலகக் கோப்பை துவங்குவதற்கு சற்று முன் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்புக்கு மேல ஆப்படிக்குறாங்க. இதை கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்க மாட்டானுங்க. தொடர்ந்து நாலு மேட்சுல தோல்வி.

என்னதான் நட்சத்திர வீரர்கள் (பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள்) இல்லாட்டாலும் ஒருவாரு சமாளித்து ஆடி 336 ரன் அடிச்சுட்டானுங்க. ஆனாலும், நியுசிலாந்து சொந்த செலவுல முந்திரி பருப்பெல்லாம் போட்டு கிண்டி சுடச்சுட (நன்றி நண்பர் முத்துக்குமரன்)அல்வாவை ஆஸ்திரேலியா வாயில வச்சி திணிச்சுருச்சு. ஆஸிகள் வாய் வெந்து போயி நிக்குறானுங்க.

ஆனாலும், எனக்கென்னமோ ஆஸ்திரேலியாவை தரம் குறைத்து மதிப்பிட பயமா இருக்கு. அடிப்பட்ட புலி. பாயும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலக அணிகளே! "Get ready for the Brutal Attack!"

ஸ்கோர் இங்கே.

4 comments:

நாமக்கல் சிபி said...

//ஆஸிகள் வாய் வெந்து போயி நிக்குறானுங்க//

அதனால்தான் அவர்களில் ஒரு சில பவுலர்கள் வாயில் வெள்ளை நிற பேண்டேஜ் போட்டுக் கொள்கிறார்களா?

:))

Naufal MQ said...

அட அதுக்குத்தான் போடுறானுங்களா? எப்படி சிபி இதெல்லாம். :)

இளவரசன் said...

ஐ சி சி ரேன்கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.
South Africa is in first place.

Naufal MQ said...

முதன் முறையாக ஆஸ்திரேலியா ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திலிருந்து இறங்கியுள்ளது.