நான் பாட்டுக்கு ஆஸ்திரேலியா கடுமையான் முறையில் தோல்விகளிலிருந்து மீண்டு வரும், அவர்களுக்குத்தான் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கூடுதல்னு ஆசிப் அண்ணாச்சி மற்றும் நண்பர் முத்துகுமரன் கிட்ட வாய்ச் சவடால் உட்டுட்டேன். அந்த நெனப்புல கொஞ்சம் கொஞ்சமா மண்ணு விழுந்துகிட்டு இருக்கு.
ஆமாங்க! ஆஸ்திரேலிய அணிக்கு கெட்ட காலம் போல இருக்கு. ஏற்கனவே பல பேரு அரை-குறை உடல் தகுதியோட இருக்கானுங்க. அதுல தொடர்ச்சியா ரெண்டு தொடர்கள் தோல்வி வேற. ஏற்கனவே பவுலிங் கொஞ்சம் வீக். இதுல இடி விழுந்த மாதிரி ஒரு செய்தி நேத்து வந்துச்சு. அதாவது, காயமடைந்த ப்ரெட் லீ உலகக் கோப்பைக்கு முன் குணமடைய வாய்ப்பில்லை என்றும் அதனால் அவர் உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப் படுகிறார் என்றும். வெளங்குமா? மெக்ராத் மட்டும் வயசான காலத்துல இருந்து என்னத்த சாதிக்க முடியும்? ஸ்டூவர்ட் க்ளார்க் என்பவர் ப்ரெட் லீ-க்கு பதிலாக சேர்க்கப் பட்டிருக்கிறார். இவரால் ப்ரெட் லீயின் இடத்தை நிரப்ப முடியுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆசிப் அண்ணாச்சி, நம்ம சவாலை கொஞ்சம் கெடப்புல போட்டு வையுங்க. அதை எல்லாம் சீரியஸா எடுக்க வேண்டாம். நம்மெல்லாம் அப்படியா பழகியிருக்கோம்?
21 comments:
என்னது சிபிராஜ் நடிச்ச லீ படம் வராதா?
அய்யோ.
எங்க தலைவர் நடிப்பு சிங்கம் சிபி படம் வராமல் வாடும்
சிபி ரசிகர் மன்றம்
கவுந்தபாடி
உலககோப்பை ஆச்திரேலிய அணிக்கு இல்லையென்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது.
காசுவெட்டி போட்டாச்சு.
தனி விண்டோவ எடுத்துடுங்க பாஸ்ட் வீச்சாளரே!
100 $ வாங்க போகலையா?
//கவுந்தம்பாடி ஒன்றியம் said...
என்னது சிபிராஜ் நடிச்ச லீ படம் வராதா?
அய்யோ.
எங்க தலைவர் நடிப்பு சிங்கம் சிபி படம் வராமல் வாடும்
சிபி ரசிகர் மன்றம்
கவுந்தபாடி
//
சிபிக்கு ரசிகரா? கொக்கா மக்கா... சரி சரி வீராச்சாமி ரசிகர் தம்பி இருக்கும் போது சிபிக்கு இருந்தா தப்பே இல்ல.
//தம்பி said...
உலககோப்பை ஆச்திரேலிய அணிக்கு இல்லையென்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது.
காசுவெட்டி போட்டாச்சு.
//
உங்க காட்டுல இப்போ மழை பெய்யுது தம்பி. பாக்கலாம் என்ன நடக்க போவுதுன்னு?
//தனி விண்டோவ எடுத்துடுங்க பாஸ்ட் வீச்சாளரே!
//
அப்படியே ஆகட்டும் தம்பி. உத்தரவு!
//100 $ வாங்க போகலையா?//
அதெல்லாம் கெஸ் பண்ணி சொல்லும் படியான கேள்வியாவுல்ல இருக்கு. அதுனால நான் ஜகா வாங்கிட்டேன்.
லீ இல்லாமல் போனது பெரிய விடயம்தான். ஆயினும், மெக்ராத் போல ஸ்டூவர்ட் க்ளார்க்கும் மிக நுண்ணியமாகப் பந்து வீசத் தக்கவர். முதலிலேயே அவர் அணியில் சேர்க்கப் பட்டிருக்கவேண்டும். அந்தளவுக்கு நல்ல ஒரு பந்து வீச்சாளர். ஆனாலும், இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வைசா
//வைசா said...

அப்படியா! இதுவரை அவரின் பந்துவீச்சை பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. தகவலுக்கு நன்றி நண்பரே.
ஆஸ்திரேலிய அணி இனி சேஸிங் செய்வதாக முடிவு எடுத்திருக்கிறார்களாம். தொடர்ச்சியாக இரண்டு 330+ அவர்களின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியாக அமைந்துவிட்டது. டாஸ் எதிரணி ஜெயித்தால் இவர்கள் பாடு திண்டாட்டம்தான். எல்லாம் சின்ன மைதானங்களாக இருக்கும் மேற்கிந்திய தீவுகளில் இருக்கிறது ஆஸ்திரேலியாவுக்கெதிரான சரவெடிகள்.
தொடர்ந்து நம்பிக்கையோடு
//முத்துகுமரன் said...

என் மனதில் தோன்றிய எண்ணத்தை ரிக்கி பாண்டிங் வாசித்தறிந்தது போலுள்ளது. நானும் இதையேதான் நினைத்திருந்தேன். ஆஸி டாஸ் வென்றால் துணிந்து சேஸ் செய்ய முடிவெடுக்கலாம். வெல்ல வழி வகுக்கும்.
நானும் தொடர்ந்து நம்பிக்கையுடன். ஹி ஹி.
சந்தேகமில்லாமல் ஸ்டூவர்ட் க்ளார்க்கும் சிறந்த பந்துவீச்சாளர்தான்.
ஆஸ்திரேலிய பத்திரிகையொன்று அவரை லிட்டில் மெக்ராத் என்றுதான் குறிப்பிடும்.
நடந்துமுடிந்த ஆஷிஸ் தொடரிலும் சிறப்பாகவே பந்துவீசியிருந்தார்.
மெக்ராத்திடமுள்ள அந்தத் துல்லியம் இவரிடம் அப்பிடியே இருக்கிறது.
வாட்சனா கிளார்க்கா என்று வந்தபோது சகலதுறை ஆட்டத்துக்காக வாட்சனைச் சேர்த்துக்கொண்டார்கள்.
ஃபாஸ்ட் பௌலர் அண்ணாச்சி,
ஆஸிக்கு ஆப்புன்னு நான் அன்னைக்கே சொன்னேன். கேட்டியளா?
உலகக் கோப்பையை தோத்ததும் இவனுக்கு அடி அவனுக்கு ஜூரம்னு காரணம் கண்டுபுடிக்க இப்பவே வழி கிடைச்சுடுச்சு
நியூசிலாந்துக்குத்தான்யா இந்த தடவை கோப்பை. ஆஸிக்கு கிடைக்கும் கேப்பை (களி) :-)
சாத்தான்குளத்தான்
//Anonymous said...

தகவலுக்கு நன்றி அனானி நண்பரே.
ஆசிப் அண்ணாச்சி, அனானி சொன்ன தகவலை கவனத்தில் கொள்க.
//ஆசிப் மீரான் said...
ஃபாஸ்ட் பௌலர் அண்ணாச்சி,
ஆஸிக்கு ஆப்புன்னு நான் அன்னைக்கே சொன்னேன். கேட்டியளா?
உலகக் கோப்பையை தோத்ததும் இவனுக்கு அடி அவனுக்கு ஜூரம்னு காரணம் கண்டுபுடிக்க இப்பவே வழி கிடைச்சுடுச்சு
நியூசிலாந்துக்குத்தான்யா இந்த தடவை கோப்பை. ஆஸிக்கு கிடைக்கும் கேப்பை (களி) :-)
சாத்தான்குளத்தான்
//
நியுசிலாந்துக்கு கோப்பை கிடைப்பதில் எனக்கொன்றுன் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆஸி சருக்குமா? என்பது தான் எனது சந்தேகமே. பொறுத்திருந்து பார்க்கலாம்.
////100 $ வாங்க போகலையா?//
அதெல்லாம் கெஸ் பண்ணி சொல்லும் படியான கேள்வியாவுல்ல இருக்கு. அதுனால நான் ஜகா வாங்கிட்டேன்.
//
கெஸ் பண்றது யோசிக்கரத விட சுலபாமச்சேங்க..அதனால தான் அப்படி கேட்டிருக்கேன் :))
//ஆயினும், மெக்ராத் போல ஸ்டூவர்ட் க்ளார்க்கும் மிக நுண்ணியமாகப் பந்து வீசத் தக்கவர்//
ஆமாங்க அவரும் திறமையான ஆள் தான்.ஆனா என்ன லீயவிட கொஞ்சம் அனுபவம் கம்மி..
//நியூசிலாந்துக்குத்தான்யா இந்த தடவை கோப்பை//
தென்னாப்பிரிக்காவும் ரேசில முந்திகிட்டு இருக்காங்க அண்ணச்சி :)
வாங்க மணிகண்டன்,
ஒரு கேள்விக்கு வேண்டுமானால் நம்மால் கெஸ் பண்ன முடியும். எல்லாத்துக்கும் சரியா கணிப்பது ரொம்ப கடினம். அதான் நான் ஒதுங்கிட்டேன்.
//ஒரு கேள்விக்கு வேண்டுமானால் நம்மால் கெஸ் பண்ன முடியும். எல்லாத்துக்கும் சரியா கணிப்பது ரொம்ப கடினம். அதான் நான் ஒதுங்கிட்டேன்//
என்னங்க எல்லாரும் இப்படி ஒதுங்கறீங்க ..சும்மா அடிச்சு விடுங்க..வந்தா 100 போனா ..:)
//100 $ வாங்க போகலையா?
//
என்னங்க தம்பி, உன்னிகிருஷ்ண பனிக்கர் கிட்ட கேட்டீங்களா ????
ஓ.கே! இதோ இறங்கிடுவோம். ஓவர் டூ மணிகண்டன்'ஸ் ப்லோக்.
Post a Comment