கங்குலி - ஏடன் கார்டன்
நாளை (பிப்-8) தொடங்கவுள்ள இலங்கை - இந்தியா ஒரு நாள் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் கோல்கத்தாவில் உள்ள ஏடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இது உலகில் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய மைதானம் ஆகும். இதில் 80 ஆயிரம் பேர் ஆட்டத்தை காண முடியும்.
நாளை நடக்கவுள்ள ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் அதற்குள் விற்று தீர்ந்து விட்டன. தனது சொந்த ஊர் மக்களின் முன் மீண்டும் ஆட உள்ள கங்குலி நாளைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். எப்படியும் ஏடனில் ஒரு சதமாவது அடித்து விட வேண்டும் என்று நேற்றைய பேட்டியில் கூறியுள்ளார். பல சாதனைகள் படைத்த கங்குலி இதுவரை ஏடன் கார்டனில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்டில் அதிகமானதாக 65 ஓட்டங்களும் ஒரு நாள் போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை அவரது இப்போதய ஏடன் கார்டன் ரெக்கார்ட். இதை நாளை மாற்றி அமைப்பாரா என்பதை நாளை பார்க்கலாம்.
===================================================================
அஃப்ரிடிக்கு புதிய தொல்லை:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது அஃப்ரிடி பார்வையாளர் ஒருவரை மட்டையால் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
செஞ்சூரியனில் 4-ந்தேதி நடந்த போட்டியில் தெ.ஆ அணி பாக் அணியை 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் 17 ஓட்டங்களில் அவுட்டாகி பெவிலியன் செல்லும் வழியில்தான் அஃப்ரிடி பார்வையாளரை தாக்கியுள்ளார். ஏன் தாக்கினார் என்ற விபரங்கள் இதுவரை எதுவும் தெரியவில்லை. ஆனால், இதை பாக் அணி நிர்வாகம் மறுத்துள்ளது.
11 comments:
என்ன வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலயே??
பன மரத்துல வவ்வாளா? எனக்கே சவாலா?
//கங்குலி said...
என்ன வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலயே??
//
எப்படியோ டீமுக்கு கொஞ்சம் ரன் அடிச்சு கொடுத்தா சரிதான்.
//சமிந்தா வாஸ் said...
பன மரத்துல வவ்வாளா? எனக்கே சவாலா?
//
வாஸ்,
தல நம்மாளுதான். கொஞ்சம் பாத்து செய்யுங்க.
இப்ப டீம்ல கீறவரு போலி-கங்குலியாமே. மெய்யாலுமா?
//போலி-மண்டூ said...
இப்ப டீம்ல கீறவரு போலி-கங்குலியாமே. மெய்யாலுமா?
//
அதை போலியாகிய நீங்க சொல்லக்கூடாது.
நிச்சயமா இன்னைக்கு கலக்கப் போறாரு பாருங்க.
கலக்கலைன்னா இந்த பின்னூட்டத்தை 'Delete' பண்ணிடுங்க
நிச்சயமா இன்னைக்கு கலக்கப் போறாரு பாருங்க.
கலக்கலைன்னா இந்த பின்னூட்டத்தை 'Delete' பண்ணிடுங்க
அவருக்கு முன்னாடி வருன பகவான் கலக்கிட்டு போயிட்டாரே :)
கங்குலி சதமடிக்க வாழ்த்துகிறோம்!!
இப்படிக்கு
அ.உ.க.ர.ம.த.செ.
மழை காரணமாக இலங்கை 102/3 என்ற நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது!!!!
:(((((((((((((
Post a Comment