Tuesday, February 27, 2007
ஊக்க மருந்தும் வேகப்பந்து வேதாளங்களும்
இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளின் போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் இருவரும் ஊக்க மருந்து உட்கொண்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுடன், பயிற்சியாளருக்கும் அக்தருக்கும் இருக்கும் மனக்கசப்பின் பின் விளைவாக இது கருதப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பாக் கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. இது கிரிக்கெட் உலகையே உலுக்கியது.
இருப்பினும், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களின் தூண்டுதல் பேரில் அவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். தற்போதைய உலகக் கோப்பை அணியிலும் இருவரின் பெயரும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாக் அணி மேற்கு இந்தியாவிற்கு புறப்படும் முன் அனைவருக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும் என்றும் இதனால் ஐ.சி.சியால் நடத்தப்படவிருக்கும் சோதனைகளில் யாரும் சிக்கி அணிக்கு அவப் பெயர் ஏற்படாமல் தடுக்க இயலும் என்றும் பாக் வாரியம் அறிவித்தது. உடனே அக்தரும் ஆஸிஃபும் லண்டனுக்கு பறந்தனர். அதற்கு அவர்கள் தெரிவித்த காரணமோ வேறு. அதாவது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் முழங்கால், முழங்கை காயங்களுக்கு தகுந்த வைத்தியம்/ஆலோசனை பெறுவதற்கே என அவர்களால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து வெளியாகும் செய்தி ஒன்று இருவரும், தங்கள் உடலில் உள்ள ஊக்க மருந்தான Nandrolone-ன் தடயம் உடலிலிருந்து முற்றிலும் அழிப்பதற்காகவே வந்துள்ளதாக தெரிவிக்கிறது. ஒருவர் ஊக்க மருந்து உட்கொண்டால் அதற்கான தடயம் உடலில் ஆறு மாதம் வரை இருக்குமாம். அதை அழிப்பதற்காகத்தான் இருவரும் லண்டன் சென்றுள்ளனர் என தெரிவிக்கிறது அந்த ஊடகம்.
அதற்கிடையில், பாக் கிரிக்கெட் வாரியம் மற்ற அனைத்து வீரர்களுக்கும் சோதனை நடத்தி முடிவும் அறிவித்து விட்டது. யாருக்கும் எதிர்மறையான முடிவு வரவில்லை. இந்த இருவருக்காக மட்டும் பாக் வாரியம் காத்திருக்கிறது. இருவரும் வருவதாக தெரியவில்லை. இதனால் பாக் வாரியம் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னதான் திறமை இருந்தாலும் இதெல்லாம் டூ மச் இல்லையா? பாக் கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் பதிலாக மாற்று வீரர்களாக முஹம்மது சமி மற்றும் அசார் மஹ்மூத் இருவரையும் தேர்வு செய்து வைத்துள்ளது. அக்தர் -ஆஸிஃப் வருகை தாமதமானால் சமி மற்றும் அசாருக்கு நல்வினைப்பயன் கிடைக்கும்.
சிக்கல்களில் சிக்கி தவிப்பது ஒன்றும் அக்தருக்கு புதிதல்ல. அவர் வந்த நாள் முதல் பல வித சிக்கல்களில் சிக்கி வெளியேறி வந்தவர்தான். அவரது திறமை ஒப்பற்றது. அவரை கண்டு மற்ற அணி வீரர்கள் நடுங்கி வருகின்றனர். ஆனால், இடையிடையே அவரது ஒழுங்கீனம் அவருக்கு அவப்பெயரையும் சிக்கல்களையும் ஈட்டி கொடுக்கிறது. ஆஸிஃப் கதையோ வேறு. புதிய இளம் திறமையான பந்துவீச்சாளர். அவர் இது போன்றவற்றிலிருந்து விலகி இருப்பதே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு நல்லது.
யாராக இருந்தாலும் தவறு செய்பவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
Monday, February 26, 2007
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பைக்குப் பின் இந்த ஆண்டு மட்டும் 21 போட்டிகளில் (டெஸ்ட் & ஒருநாள்) ஆட இருப்பதாக அட்டவனை உருவாக்கப்பட்டுள்ளது. இது மிக கூடுதலாகும் என கவலை தெரிவித்துள்ளார். இதனால் வீரர்களும் சோர்வடையும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
மேலும் தெரிவிக்கையில், சில நாடுகள் அளவிற்கதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்றார். இது குறித்த வாதங்கள் சர்வதேச
வீரர்கள் சங்கத்திற்கும் ஐ.சி.சி இடையில் தொடர்ந்து நடை பெற்று வருவதாகவும் கூறினார்.
இதற்கு அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் அமைப்பினரும், ஐ.சி.சி
மற்றும் ஒலி/ஒளிபரப்பு ஊடகங்களின் பண மோகமே காரணம் என்று சாடினார் அவர். கூடுதலான போட்டிகளால் வீரர்களின் உடல் தகுதி பற்றியோ, கிரிக்கெட் மீது சலிப்பு வரும் என்பதை பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.
2000-ம் ஆண்டிலிருந்து இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிகள் கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதே இதற்கு அடிகோல். இரு அணிகளும் 2000- 2005 ஆண்டுகளில் மோதியுள்ள மூன்று டெஸ்ட் தொடர்களும் மிக விருவிருப்பானதாக அமைந்திருந்தது. அதில் இரு அணிகளும் தலா ஒரு தொடர் வெற்றியும், ஒரு தொடர் சமநிலையானது நினைவிருக்கலாம். இதனால் இரு அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கிறது.
எனக்கும் டிம் மே கூறுவது சரி என்றே படுகிறது. அளவிற்கு மிஞ்சினால் கிரிக்கெட்டும் நஞ்சு தானே.
கிரிக்கெட்டின் போக்கை மாற்றிய ஜாண்டி ரோட்ஸ்
Jonty Rhodes. இவரின் வருகைக்குப்பின் தான் கிரிக்கெட் உலகில் தடுப்பாட்டத்தின் (Fielding) இன்றியமையாமை உணரப்பட்டது. அதுவரையிலும் கிரிக்கெட் என்றாலே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டுமே நினைவுக்கு வரும். தடுப்பாட்டத்தின் போது ஏதோ 'அணிந்திருக்கும் உடை அழுக்காகி விடக் கூடாது' என்று விதி உள்ளது போல் நடந்துகொள்வார்கள் அனைத்து அணியினரும்.
1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது தான் இந்த 'மின்னல்' அறிமுகமானார். அந்த உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்று இம்ரான் கான் உலகக் கோப்பையை முத்தமிடும் காட்சி என்னதான் பல ஊடகங்களில் அச்சடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டாலும், பாகிஸ்தானுக்கெதிராக தெ.ஆ மோதிய போட்டியின் போது ஜாண்டி ரோட்ஸ் இண்ஜமாமை ரண்-அவுட்டாக்கிய காட்சி பல நாட்களுக்கு ரசிகர்கள் மனதை விட்டு அகல மறுத்தது உண்மை. நானெல்லாம் அப்போது பள்ளியில் படித்து(?)க் கொண்டிருந்த காலம். இன்னும் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது அந்த ரண்-அவுட்டை பற்றி சிலாகித்து நாங்கள் பேசி அரட்டை அடித்தவை.
நான் மட்டுமில்லை உலக அளவில் ஜாண்டி ரோட்ஸிற்கு ரசிகர்கள் உருவாகினர். முதன் முறையாக தடுப்பாட்டத்தையும் ரசித்து பார்க்க தொடங்கினர். தடுப்பாட்டத்தால் ஒரு ஆட்டத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்யலாம் என்ற நிலை முதன் முதலில் உருவானது அந்த ரண்-அவுட்டில்லிருந்துதான் என்பது மிகையில்லாத உண்மை. அந்த ரண்-அவுட்டின் வீடியோ கீழே.
அதே கால கட்டத்தில் (அதற்கு முன்பிருந்தே) இந்திய அணியில் ஒரு நட்சத்திர தடுப்பாட்ட வீரர் இருந்து வந்தார். அவர் தான் அசாருத்தீன். அசாருத்தீனின் த்ரோவை ரசிப்பதற்கே ஒரு கூட்டமிருந்தது. பந்தை இலாகவமாக பின்னோக்கி மின்னல் வேகத்தில் அவர் எறிவது ஒரு கண்கொள்ளா காட்சிதான். அப்போது இந்திய அணியில் ஜாண்டி ரோட்ஸுடன் ஒப்பிடுவதற்கு (ஜாண்டி ரோட்ஸுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்பது தான் உண்மை) ஒருவர் இருந்தார் என்றால் அது அசார் மட்டும் தான். அப்போதைய இலங்கை வீரர் ரோஸன் மகானாமவும் நல்ல தடுப்பாட்ட வீரராக இருந்தார்.
பின்பு தான் எல்லா அணிகளும் தடுப்பாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின. இந்திய அணியில் அஜய் ஜடேஜா, ப்ரவின் அம்ரே, ராபின் சிங் வந்தனர். தற்போதய அணியில் யுவ்ராஜ் சிங், முஹம்மது கைஃப், சுரெஷ் ராய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளனர். இந்திய அணியினரின் தடுப்பாட்டம் முன்னேற்றமடைந்துள்ளது என்பதற்கு சான்று கீழே உள்ள வீடியோ.
இன்றய கால கட்டத்தில் அனைத்து அணியினருமே பெரும்பாலும் சிறந்த தடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணியாகவே தங்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். இதற்காக தனியாக பயிற்சியாளர்களை கூட அமைத்து வருகின்றனர். இப்போதைய கிரிக்கெட் தாரக மந்திரம் என்னவென்றால் 'Catches win matches' என்பது தான். உங்கள் பார்வைக்காக சில Stunning Catches.
பின் குறிப்பு: ஒரு வருத்தமளிக்கக் கூடிய உண்மை என்னவென்றால் 'மின்னல்' ரோட்ஸிற்கு வலிப்பு நோய் உள்ளதென்பது தான். கொடுமையல்லவா இது?
Sunday, February 25, 2007
ஒருநாள் போட்டிகளிலிருந்து கும்ப்ளே ஓய்வு
தனியார் தொலைக்காட்சியில் அவர் பேட்டியளித்த போது தனது ஓய்வு திட்டத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை உலகக் கோப்பையே தனது இறுதி தொடராக இருக்கும்.
உலகக் கோப்பை போட்டிகள் தனக்கு மிகுந்த சவலாக இருக்கும். இருந்த போதிலும்
இந்தியாவிற்கு தனது சிறப்பான பங்களிப்பை அளிக்க இயலும் என்றும் தெரிவித்தார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கிடையே நிறைய வித்தியாசம்
இருப்பதாகவும், 16 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தனக்கு கை
கொடுக்கும் என்றும் கூறினார். உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற
நம்பிக்கையையும் தெரிவித்தார்.
கும்ப்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்து உலகக் கோப்பைக்கு அனுப்பி வைப்போம். 'சென்று வென்று வருக!'
Saturday, February 24, 2007
லீ இல்லை!
ஆமாங்க! ஆஸ்திரேலிய அணிக்கு கெட்ட காலம் போல இருக்கு. ஏற்கனவே பல பேரு அரை-குறை உடல் தகுதியோட இருக்கானுங்க. அதுல தொடர்ச்சியா ரெண்டு தொடர்கள் தோல்வி வேற. ஏற்கனவே பவுலிங் கொஞ்சம் வீக். இதுல இடி விழுந்த மாதிரி ஒரு செய்தி நேத்து வந்துச்சு. அதாவது, காயமடைந்த ப்ரெட் லீ உலகக் கோப்பைக்கு முன் குணமடைய வாய்ப்பில்லை என்றும் அதனால் அவர் உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப் படுகிறார் என்றும். வெளங்குமா? மெக்ராத் மட்டும் வயசான காலத்துல இருந்து என்னத்த சாதிக்க முடியும்? ஸ்டூவர்ட் க்ளார்க் என்பவர் ப்ரெட் லீ-க்கு பதிலாக சேர்க்கப் பட்டிருக்கிறார். இவரால் ப்ரெட் லீயின் இடத்தை நிரப்ப முடியுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆசிப் அண்ணாச்சி, நம்ம சவாலை கொஞ்சம் கெடப்புல போட்டு வையுங்க. அதை எல்லாம் சீரியஸா எடுக்க வேண்டாம். நம்மெல்லாம் அப்படியா பழகியிருக்கோம்?
Thursday, February 22, 2007
Men In Blue
1980-கள் முதல் இந்தியா நீல நிற உடையை தேர்வு செய்து அணிந்து வருகிறது. அதில் அவ்வப்போது சிற்சில மாற்றங்களுடன் உடை வடிவமைக்கப்படும். வடிவமைக்கப்படும். உலகக் கோப்பைக்கான உடைகள் தனித்தன்மையுடன் காட்சியளிக்கும்படி வடிவமைக்கப்படும். அதாவது உலகக் கோப்பைக்கு வடிவமைக்கப்படும் உடை மற்ற எந்த தொடரிலும் பயன்படுத்தப்பட மாட்டாது.
முதன் முதலில் உலகக் கோப்பையில் 1992-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த போதுதான் வண்ண உடை பயன்படுத்தப்பட்டது. அதில் இந்தியா வழக்கத்திற்கு மாறாக வெளிர் நீலத்திற்கு பதில் கருநீலம் அணிந்தது.
1996-ல் இந்திய துனைக் கண்டத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா வழக்கம்போல் நீலத்திற்கு மாறியது.
1992 &1996 -ல் நடைபெற்ற உலக் கோப்பை போட்டிகளில் எல்லா அணியினருக்கும் டிஸைன் ஒரே போல் இருக்கும். வண்னங்கள் மட்டும் மாறுபட்டிறுந்தது. ஆனால், 1999 இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியிலிருந்து டிஸைன்களும் அணிக்கணி வேறுபட்டது. வண்ணங்கள் மட்டும் அவர்கள் தெரிவு (பெரும்பாலும் அதே வண்ணங்களுடன்). இந்தியாவிற்கு மீண்டும் நீலம். எனக்கு மிகவும் பிடித்த டிஸைன் 1999 உலகக் கோப்பை டிஸைன் தான்.
2003 உலகக் கோப்பையில் கீழுள்ளது போல வடிவமைப்புடன் இந்திய அணியின் உடை வடிவமைக்கப்பட்டது.
வரும் உலகக் கோப்பைக்கான உடை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் நீல நிறம் கொஞ்சம் வெளுத்துள்ளது. இந்திய தேசிய கொடியின் நிறங்களும் இடம் பெற்றுள்ளன. உலகப் புகழ் பெற்ற Nike நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. கீழே நமது அணியினர் அந்த உடையுடன் காட்சி தருகின்றனர் பாருங்கள்.
இதெல்லாம் சரி. உலகக் கோப்பையை வென்று தருமா இந்த உடை? (இப்படை தோற்கின் எப்படை வெல்லும்)
Tuesday, February 20, 2007
ஹய்யோ! ஹய்யோ!!
என்ன கெட்ட காலமோ தெரியல ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கு மேல் அடி விழுந்து வருகிறது. இதற்கு அவர்களும் ஒருவகையில் காரணமே. சிலர் காயம் காரணமாக விளையாடவிட்டாலும். சிலர் ஓய்வெடுக்கட்டும் என்றே நியுசிலாந்திற்கு அனுப்பப்படவில்லை. ஒரு தோற்கும் போது ஏற்படும் நெருக்கடி மிகக் கொடுமையானது. அது இன்று ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஊடகங்கள் அந்த அணியின் தோல்வியை கிழித்து வருகிறது. தேவையில்லாத நெருக்கடியில் ஆஸ்திரேலியா தவித்து வருகிறது.
இதனால், இரண்டு வகையான போக்குகளை ஆஸ்திரேலியாவிடம் இருந்து உலகக் கோப்பையில் எதிர்பார்க்கலாம். ஒன்று, அவர்கள் மனவலிமை மிக்கவர்களாதலால், கடுமையான குணத்துடன் எதிரிகளை தகர்த்தெரிவார்கள். இல்லையேல், தளர்ந்து போய் தள்ளாடுவார்கள். நான் எதிர்பார்ப்பது முதலாவதை. நீங்கள்?
Sunday, February 18, 2007
ஆஸிக்கு முந்திரி பருப்பு அல்வா
என்னதான் நட்சத்திர வீரர்கள் (பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள்) இல்லாட்டாலும் ஒருவாரு சமாளித்து ஆடி 336 ரன் அடிச்சுட்டானுங்க. ஆனாலும், நியுசிலாந்து சொந்த செலவுல முந்திரி பருப்பெல்லாம் போட்டு கிண்டி சுடச்சுட (நன்றி நண்பர் முத்துக்குமரன்)அல்வாவை ஆஸ்திரேலியா வாயில வச்சி திணிச்சுருச்சு. ஆஸிகள் வாய் வெந்து போயி நிக்குறானுங்க.
ஆனாலும், எனக்கென்னமோ ஆஸ்திரேலியாவை தரம் குறைத்து மதிப்பிட பயமா இருக்கு. அடிப்பட்ட புலி. பாயும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலக அணிகளே! "Get ready for the Brutal Attack!"
ஸ்கோர் இங்கே.
நடந்தவை நன்றாகவே நடந்தது
Saturday, February 17, 2007
தப்புக் கணக்கு வேண்டாம்!
ஆஸ்திரேலியா கொட்டம் நிரந்தரமாக அடக்கப்படுமானால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், தற்போது ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் சந்தித்து வருவது சிறு தற்காலிக தடுமாற்றமே.
ஆகையால், வலையுல கிரிக்கெட் மக்களுக்கு அறிவிப்பதென்னவென்றால். மக்களே! அவசரப்பட்டு ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியை கொண்டாட வேண்டாம்.
நேற்றைய போட்டியின் ஸ்கோர் இங்கே.
Thursday, February 15, 2007
அவரா இவர்?
10,000! ட்ராவிட்!!
ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இவர் ஒருநாள் போட்டிகளில் இடையிடையே புறக்கணிக்கப்பட்டு வந்தார். இவருடைய தெளிவான, காபி-புக் ஸ்டைல் ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்றனர். இவரால் அதிரடியாக ஆடி ரன் குவிக்க இயலாது என்றனர். இவருடைய ஸ்ட்ரைக்-ரேட் வெகு குறைவாக இருந்த காலம் அது.
2000- 2001 ஆண்டில் இவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் தான் இந்தியாவின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர்களாக கருதப்பட்ட அசாருத்தீன், ஜடேஜா மற்றும் ராபின்சிங் ஆகியோர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த கால கட்டத்தில் அணித்தலைவர் கங்குலி ட்ராவிட்டையே விக்கெட் கீப்பராக்கி அவருக்கு வாய்ப்பளித்து ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை வைத்து விளையாடும் முடிவுக்கு வந்தார். ட்ராவிட்டின் விக்கெட் கீப்பிங்கும் அத்தனை மோசமானதாக இருந்ததில்லை. அதற்கு பின்பு தான் அவர் தன்னுடைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தார் ஒருநாள் போட்டிகளில். அவருடைய ஸ்ட்ரைக்-ரேட் ஆவரேஜ் வெகுவாக கூடியது இந்த கால கட்டங்களில் தான். இந்தியாவும் அதிகமாக வெற்றிகளை குவித்ததும் இந்த கால கட்டங்களில் தான்.
பின்பு தனக்கென ஒரு இடத்தை ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் தக்க வைத்துக் கொண்டார். இப்போது உள்ள நிலையில் ட்ராவிட் இல்லாத மிடில் ஆர்டர் (ஒருநாள் அணியில்) நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. தற்போது அவர் 300க்கும் மேலானா போட்டிகளில் ஆடி விட்டார். 10000 ரன்களையும் அவர் குவித்து விட்டார். சபாஷ் ட்ராவிட். பத்தாயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்தியர். ஆறாவது வீரர் உலகளவில். வாழ்த்துக்கள் காப்டன்!
கீழே பத்தாயிரம் ரன்களை குவித்த வீரர்கள் பட்டியல் அவர்கள் பத்தாயிரம் ரன்கள எடுக்க எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதில் சச்சின் வெகு குறைவான இன்னிங்ஸ்களை மட்டும் எடுத்துள்ளார் பத்தாயிரம் அடிக்க. அடுத்து நம்ம தல கங்குலி வருகிறார்.
சச்சின் - 259 இன்னிங்ஸ்: 10,105 ரன்கள்: 42.63 சராசரி
கங்குலி - 263 இன்னிங்ஸ்: 10,018 ரன்கள்: 41.22 சராசரி
லாரா - 278 இன்னிங்ஸ்: 10,019 ரன்கள்: 40.56 சராசரி
ட்ராவிட்- 287 இன்னிங்ஸ்: 10,044 ரன்கள்: 39.08 சராசரி
இண்ஜமாம் - 299 இன்னிங்ஸ்: 10,018 ரன்கள்: 38.98 சராசரி
ஜெயசூர்யா - 328 இன்னிங்ஸ்: 10,057 ரன்கள்: 32.13 சராசரி
இம்மும்மூர்த்திகளும் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தருவார்களா?
Monday, February 12, 2007
உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் எதிர்பார்த்தது போலவே உள்ளது அணித் தேர்வு.
Robin Uthappa, Sourav Ganguly, Virender Sehwag, Rahul Dravid (capt), Sachin
Tendulkar, Yuvraj Singh, Dinesh Karthik, Mahendra Singh Dhoni (wk), Irfan
Pathan, Ajit Agarkar, Harbhajan Singh, Zaheer Khan, Anil Kumble, Munaf Patel,
Sreesanth.
என்னுடைய பதிவில் என்னுடைய தேர்வாக அமைந்த அணியைக் காண இங்கே சொடுக்குங்கள்.
இங்கிலாந்துக்கு ஒரு 'ஓ'
யாராவது நினைத்திருப்பார்களா இந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை அடிச்சு விரட்டும்னு. ஆஷஸ்ல படுதோல்வி. மைக்கேல் வாக்ன் மீண்டும் காயத்தால் விலகல். ஒரு நாள் போட்டி தொடர்லேயும் தோல்வித் துவக்கம். தட்டு தடுமாறி ஃபைனல்ஸ் வந்தது. இப்படி அடிக்கு அடி சறுக்கி இறுதியில் உலகத்தை வியப்படையச் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து ரெண்டு ஃபைனலில் ஜெயிச்சு கோப்பையை தட்டிகிட்டு போயிருக்கு.
ஆஸ்திரேலியாவை மற்ற டீமெல்லாம் ஜெயிக்கிறதே கஷ்டம். அதுவும் பெஸ்ட் ஆஃப் த்ரீ ஃபைனல்ஸ் என்றால் கேக்கவே வேணாம். நம்ம ஒன்னுல ஜெயிச்சாலும் மத்த ரெண்டையும் ஜெயிச்சுடுவானுங்க ஆஸ்திரேலியக் காரனுங்க. அதுனாலதான் அவனுங்க நாட்டுல நடக்குற தொடர்ல மட்டும் 3 ஃபைனல்ஸ். அந்த மாதிரி சூழ்நிலையில தகர்ந்து போயிருந்த இங்கிலாந்து டீம் ஜெயிச்சுருக்குனா சூப்பர் இல்லையா. அதான், நேத்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.
அந்த மகிழ்ச்சியில மண்ணை அள்ளி போட்டுட்டானுங்க நம்ம நாட்டு தடிப் பசங்க. ஜெயிக்குற மாதிரி விளையாடி கடைசியில தோற்பது நம்ம பசங்களுக்கு கை வந்த கலை. இந்த கலை தொடர்ந்தா உலகக் கோப்பைக் கனவுகளுக்கு அல்வாதான். கங்குலியும், சச்சினும் நல்லா ஆடி ஒரு வழியா தேத்தி கொண்டுவந்தானுங்க. கடைசில பாத்தா 'அதிரடி' தோணி அதிரடியே அடிக்காம கவுத்திடாரு. பாத்து விளையாடுப்பா விக்கெட்டை பறிகொடுத்துடாதே யாராச்சும் தோணி பேட் பண்ண வரும் போது சொல்லியிருப்பாங்க போல அதான் மனுஷன் வெறும் சிங்கில்ஸ்லேயெ வாழ்க்கையை ஓட்டிட்டாரு. டீமும் தோத்துப் போச்சு. அவர் அடிச்ச 48 ரன்ஸ்ல ஒரெ ஒரு 4 தான். அதுவும் அவுட்டாகுறதுக்கு முந்துன பந்துல. வெளங்குமா.
அப்படியே அந்த பக்கம் ஆப்பிரிக்காவுக்கு தெற்கே போனால், பாகிஸ்தானை வருத்து எடுத்துட்டானுங்க. இண்ஜமாம் மட்டும் போராடியிருக்காரு. இருந்தாலும் பயனில்லை. அப்ரிடிக்கு வேற 4 மேட்ச் தடை போட்டிருக்கு ஐ.சி.சி. இதையெல்லாம் கடந்து பாக் அணி மீலுமா? அதைப் பத்தி நிறைய பேச வேணாம். நம்ம பொழப்பே நாறிக் கெடக்கு. அடுத்த வீட்டு கதை நமக்கெதுக்கு.
இன்னிக்கு நம்ம நாட்டு உலகக் கோப்பை டீம் அறிவிக்க போறாங்களாம். பாக்கலாம் யார் யார் ஆயுதம் ஏந்த போறதுன்னு.
Saturday, February 10, 2007
முதல் இறுதி போட்டி: இங்கிலாந்து வெற்றி
டாஸ் வென்ற ஆஸ்திரெலிய அணி முதலில் பேட் செய்தது. ஹேடன் 82 ஓட்டங்களும் பாண்டிங் 75 ஓட்டங்களும் எடுத்து தமது அணியை 252 எடுக்கச் செய்தனர்.
பின்னர், இங்கிலாந்து அணி இந்த ஸ்கோரை காலிங்வுட்டின் 120 , பெல்லின் 65 மற்றும் ஃபிண்டாஃபின் 35 ஓட்டங்களின் உதவியுடன் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.
இறுதிப் போட்டிக்கே தட்டு தடுமாறி வந்து சேர்ந்த இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு சுடசுட அல்வா கொடுத்தது நல்ல மஜாவாத்தான் இருக்குது. ஆஸ்திரேலியா எப்படி பதிலடி கொடுக்குதுன்னு பொறுத்திருந்து பாக்கலாம்.
சாமுவேல்ஸ் - கொச்சார் உரையாடல்
Bookie: Connect to 206
Reception: 206, sir?
Bookie: Yes
Rec: Hello, room no 206, Marlon
Bookie: Hello, how are you
Marlon?
206: not clear
Bookie: Just relax buddy
206:
Just relax
Bookie: Hello my son, that's way I am here, came for my some
work and am held up
206: OK
Bookie: Tomorrow night I am going
back
206: OK
Bookie: So how are things with you and how is the
preparation?
206: Preparation is good enough
Bookie: Well, wish
you all the best
206: Thanks
Bookie: You play well
206:
(Not clear) Talking to Robinson
Bookie: Robinson...Yes
206: Yes,
our fielding well
Bookie: Ya, good that's a high-scoring game
206: Early in the morning... Batting move around the pitch...
Bookie: an in the evening lower down
206: Slow down...
Bookie: What you think that, who will bat...
206: Well...
Bookie: Who, who?
206: Dwayne (not clear) He's is making a debut
tomorrow...
Bookie: New batsman, bowlers...
206: All-rounder...
Bookie: He are a good player...
206: Making debut
Bookie: Ya, I can understand that Chris is in form...
206: (Not
clear)...
Bookie: And how is your batting going on?
206: My
batting is good...
Bookie: Big... a... tall score tomorrow
206:
(Not clear)
Room no 206: (not clear)
Bookie: When do you get
down to bowl
206: (not clear)
Bookie: Which over you will be
bowling
206: One down
Bookie: Normally after 17th or 18th over
206: By tomorrow... (not clear) than I can bowl... (not clear)
Bookie: He is seamer or spinner
206: Seamer
Bookie: He
is a seamer, who will start bowling tomorrow
206: Dwayne
Bookie:
Dwayne
206: Dwayne, tail and Bradshaw
Bookie: Tail and Bradshaw,
they will open. You will be as the third bowler
206: Jerome Taylor,
Chris Gayle will be 4th and 5th bowling
Bookie: You have got a nice
allrounder team now
Bookie: As a first match, I want you to play well
confident and don't hurry up, don't give the
catches, play well, consolidate
your position as well as possible if even if you can want couple of balls, it
doesn't matter, don¹t get run out.. don't get excited, have a strong position
206: (not clear)
Bookie: After this you guys going to Cuttack,
that's another place
206: (not clear)
Bookie: I am going back,
we will be in touch with you
206: Most welcome
Bookie: Whenever
you come back to Bombay? Most probably may be I will come there for one or two
days
206: I want to stay there for couple of days
Bookie: Yeah,
after (not clear)
206: Yeah
Bookie: Let me know I am flying back
tomorrow
206: Not yet
Bookie: Yeah my flight (not clear) O'clock
& from their I will fly back to Bombay
206: (not clear)
Bookie: Thank you very much chief
206: (not clear)
Bookie: All the best, after this I will have to work
206: (not
clear)
Bookie: Ok good
Thursday, February 8, 2007
ஓவர் டு ஏடன் கார்டன
டாஸ் போடப்பட்டு விட்டது. இந்திய அணித் தலைவர் ராகுல் ட்ராவிட் வென்றுள்ளார். இந்திய அணி முதலில் பந்து வீசும் என முடிவெடுத்துள்ளார். (Dew Factor?).
இந்த சுற்றுப்பயணத்திற்கு முரளிதரனும், சமிந்தா வாஸும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவமில்லாத பந்து வீச்சுடன் இலங்கை களமிறங்குகிறது. இந்திய அணியில் பத்தான் தோள்பட்டை காரணமாகவும், யுவராஜ் முதுகு வலி காரணமாகவும் மற்றும் அகார்கர் காய்ச்சல் காரணமாகவும் இன்று போட்டியில் விளையாடமாட்டர்கள்.
மைதானத்தில் கூடியிருக்கும் 1,00,000 ரசிகர்களும் தங்கள் 'தாதா' கலக்குவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றன. கடந்த முறை ஏடனில் நடந்த போட்டியில் மைதானம் முழுதும் இந்திய அணிக்கு எதிராக கூவியது நினைவிருக்கலாம். காலம் மாறிவிட்டது. தாதா மீண்டும் அணியில். இந்த முறை 1 லட்சம் பேரும் இந்திய அணிக்காக (தாதாவுக்கு) ஆதரவளிப்பார்கள்.
அணிகள் விபரம்:
India: 1 Robin Uthappa, 2 Sourav Ganguly, 3 Virender Sehwag, 4 Sachin Tendulkar, 5 Rahul Dravid (capt), 6 Dinesh Karthik, 7 Mahendra Singh Dhoni (wk), 8 Harbhajan Singh, 9 S Sreesanth, 10 Zaheer Khan, 11 Munaf Patel.
Sri Lanka: 1 Sanath Jayasuriya, 2 Upul Tharanga, 3 Mahela Jayawardene (capt) 4 Kumar Sangakkara (wk), 5 Marvan Atapattu, 6 Tillakaratne Dilshan, 7 Russel Arnold, , 8 Farveez Maharoof, 9 Lasith Malinga, 10 Malinga Bandara, 11 Nuwan Zoysa.
மீண்டும் மேட்ச் ஃபிக்ஸிங்கா?
என்னடா இவன் காலையிலேயே பொலம்புறானேனு பாக்குறீங்களா. பின்ன என்னங்க. காலையில ரேடியோல செய்தி கேட்கும் போது தான் சொன்னானுங்க. கேட்டவுடனே அய்யய்யோ திரும்பவும் கெளம்பிட்டாய்ங்களானு தூக்கி வாரி போட்டுச்சுங்க.
மேட்டர் இதுதாங்க. அதாவது கொஞ்ச நாள் முன்னாடி வெ.இ அணி இந்தியா வந்து வாங்கி கட்டிக்கிட்டு போச்சுல்ல. அப்போ, நாக்பூர்ல ஜனவரி 21ந்தேதி நடந்த மேட்ச் தொடர்பா தொலைபேசியில வெ.இ வீரர் சாமுவேலும் (Samuales) சூதாட்ட தரகர் முகேஷ் கொச்சாரும் பேசியிருக்காங்க. இதை நாக்பூர் காவல்துறை பதிவு செய்திருக்காங்க. இந்த மேட்டர் இப்ப வெளியில வந்துருச்சு.
இது தொடர்பா நாக்பூர் காவல்துறை உயர் அதிகாரி சொல்லும்போது, சாமுவேல் தனது அணியின் பேட்டிங் லைன்-அப் பற்றியும் பவுலிங் லைன் -அப் பற்றியும் தரகரிடம் தெரிவித்ததாக கூறினார். பைசா பரிமாற்றம் பற்றி அவுங்க எதுவும் பேசிக்கல என்றும் சொல்லியிருக்காரு அந்த அதிகாரி.
என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுனு தெரியாம நாமலும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாதுல்ல. அதுனால கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்னவெல்லாம் வெளிவருது. ஆனால், ஒன்னுங்க தன் ஆடும் அணியை எவன் பணத்துக்காக காட்டிகொடுத்தாலும் அவனை நிக்க வச்சு சுடனும். அதான் என்னோட பாலிஸி.
=================================================
Latest Update:
Marlon Samuels, the West Indies allrounder, was quoted in The Times of India as admitting to knowing Mukesh Kochar, the Indian bookie, but insisting: "I don't think he's a bookie. I usually talk about cricket but don't give out any such information." The Nagpur police have claimed that Samuels passed on match-related information to Kochar ahead of the one-day match in that city on January 21.
"I don't do such things man," Samuels was quoted as saying. "I have not done anything wrong. The West Indies Cricketers' Association will take up the matter if necessary." The report said Samuels laughed when told the Nagpur police had recorded his conversations with Kochar.
Wednesday, February 7, 2007
கங்குலி தனது சொந்த மண்ணில்
நாளை (பிப்-8) தொடங்கவுள்ள இலங்கை - இந்தியா ஒரு நாள் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் கோல்கத்தாவில் உள்ள ஏடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இது உலகில் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய மைதானம் ஆகும். இதில் 80 ஆயிரம் பேர் ஆட்டத்தை காண முடியும்.
நாளை நடக்கவுள்ள ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் அதற்குள் விற்று தீர்ந்து விட்டன. தனது சொந்த ஊர் மக்களின் முன் மீண்டும் ஆட உள்ள கங்குலி நாளைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். எப்படியும் ஏடனில் ஒரு சதமாவது அடித்து விட வேண்டும் என்று நேற்றைய பேட்டியில் கூறியுள்ளார். பல சாதனைகள் படைத்த கங்குலி இதுவரை ஏடன் கார்டனில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்டில் அதிகமானதாக 65 ஓட்டங்களும் ஒரு நாள் போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை அவரது இப்போதய ஏடன் கார்டன் ரெக்கார்ட். இதை நாளை மாற்றி அமைப்பாரா என்பதை நாளை பார்க்கலாம்.
===================================================================
அஃப்ரிடிக்கு புதிய தொல்லை:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது அஃப்ரிடி பார்வையாளர் ஒருவரை மட்டையால் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
செஞ்சூரியனில் 4-ந்தேதி நடந்த போட்டியில் தெ.ஆ அணி பாக் அணியை 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் 17 ஓட்டங்களில் அவுட்டாகி பெவிலியன் செல்லும் வழியில்தான் அஃப்ரிடி பார்வையாளரை தாக்கியுள்ளார். ஏன் தாக்கினார் என்ற விபரங்கள் இதுவரை எதுவும் தெரியவில்லை. ஆனால், இதை பாக் அணி நிர்வாகம் மறுத்துள்ளது.
அன்றொரு நாள் இதே தினத்தில்
வெகு வெகு சமீபத்தில், கி.பி. 1999 -ம் ஆண்டு (1960 சமீபம்னா 1999 வெகு வெகு சமீபம்-னு சொல்லலாம்ல) பிப்ரவரி 7ம்-ந்தேதி டெல்லியில் நடந்த வேட்டை இது. ஆம், பாக்கிஸ்தான் அணியினுடனா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பாக்கிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 420 ஓட்டங்களை தருகிறது. பாக்கிஸ்தான் அணியோ அதை எட்டும் நோக்கில் 100 ரன்களை கடந்தும் விக்கெட் பறிகொடுக்காமல் ஆடிக் கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் தான் அனில் கும்ப்ளே முதல் விக்கெட்டாக அஃப்ரிடியை ஆட்டமிழக்கச் செய்கிறார். பின்பு தொடங்கியது மனித வேட்டை. நம்ம 'ஸைலண்ட் கில்லர்' கும்ப்ளே திடிரென விஷ்வரூபமெடுக்கிறார். மளமள வென எல்லா விக்கெட்டுகளையும் எடுக்கிறார். அவர் 9 விக்கெட்டுகள் எடுத்த பின், வேறு யாரும் பத்தாவது விக்கெட்டை எடுத்தவிட கூடாதென முடிவு செய்து மறுமுனையில் பந்துவீசிய ஸ்ரீநாத் 'எட்டா' பந்தாகவே வீசி தனக்கும் விக்கெட் கிடைக்காதவாறு பார்த்து கொள்கிறார். இறுதியில் வாசிமின் விக்கெட்டை வீழ்த்தி அந்த 'பெர்ஃபெக்ட் டென்'-ஐ எடுக்கிறார் கும்ப்ளே. இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இரண்டே வீரர்கள் தான் இந்த சாதனையை செய்துள்ளார்கள். ஒன்று ஜிம் லேக்கர். மற்றொருவர் நம்ம ஸைலண்ட் கில்லர். இந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.
Tuesday, February 6, 2007
மீண்டும் மும்பை
நேற்று நடந்த பெங்கால் புலிகளுடன் மும்பை வான்கடேயில் முடிவடைந்த இறுதி போட்டியில் மும்பை அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்காலை தோற்கடித்தது. இதில் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்களும் ஆடினர். சச்சின், கங்குலி, அகார்கர், பொவார் மற்றும் ஜாஹிர் கான். இதில் ஜாஹிர் கான் இதுவரை பரோடா அணிக்காகவே ஆடி வந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை மும்பை அணியினர் வலைத்து போட்டு கொண்டு பெங்காலை விரட்டி அடித்தனர். கூலிக்கு ஆள் வச்சு அடிக்கிறது இது தானோ. இந்த போட்டியில் அவர் 5 + 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியை வெற்றி பெற செய்தார்.
நம்ம புலி கங்குலி வெற்றி இலக்கான 472-ஐ தொட எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், மறுமுனையில் எல்லாரும் சொதப்பி விட்டார்கள். கங்குலி 90 ஓட்டங்கள் எடுத்தார். கங்குலி ஆட்டமிழக்கும் வரை ஆட்டம் சூடு பிடித்திருந்தது. இறுதியில் பெங்கால் 339 -க்கு ஆட்டமிழந்தது. பெங்காலின் ஆட்டத்தை அங்கு வந்திருந்த திலிப் வெங்சர்க்கார் வெகுவாக பாராட்டினார். 'அவர்கள் தோற்றாலும் - நாங்கள் வங்கப் புலிகள் என்பதை நிருபித்தனர்' என்றார்.
மும்பையின் இந்த ராஜாங்கம் தகர்ந்து மற்ற அணிகள் கோலோச்சப் போவது எப்போது?
Monday, February 5, 2007
ஸைமண்ட்ஸ் ?
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ ஸைமண்ட்ஸ் இங்கிலாந்துடன் நடந்த போட்டியின் போது காயமடைந்தார். அவருடைய தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. காயம் பலமானதாகவே கருதுவதாக உடற்பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். அவருக்கு உடனே அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் அவர் உலகக் கோப்பையில் கலந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் ஸைமண்ட்ஸ் விரைவில் குணமடந்தால் அணிக்கு நல்லது என தெரிவித்துள்ளார். ஸைமண்ட்ஸ் போன்ற அதிரடி ஆல்-ரவுண்டர் அணியில் இருப்பது எவ்வளவு பலம் என்பது பாண்டிங்-கிற்குத் தானே தெரியும். உலகக் கோப்பைக்கான அணி விபரம் பிப்ரவரி 13க்குள் ஐ.சி.சி யிடம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
=======================================================
ஆஸ்திரேலியா வெற்றி:
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடை பெற்ற நேற்றைய ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வழக்கம்போல் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 290 ஓட்டங்களை எடுத்தது. பதிலளித்து ஆடிய ஆஸி அணி 48.2 ஓவர்களில் 291 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாண்டிங் 104 ஓட்டங்களும், ஹாட்ஜ் 99 ஓட்டங்களும் எடுத்தனர். முழு ஸ்கோர் விபரம்.
===============================================
தெ.ஆ வெற்றி:
உலகக் கோப்பைக்கான ஆயத்த வேலைகளை தெ.ஆ அணியும் செவ்வனே செய்து வருகிறது. நேற்று பாக்கிஸ்தானுடன் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாக்கிஸ்தான் அணியினர் அதிர்ந்து போய் உள்ளனர்.
முதலில் பேட் செய்த தெ.ஆ 50 ஓவர்களில் 392/6 எடுத்தது. இதில் யாரும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. (இதுதான் அணித் திறமை). பின்பு ஆடிய பாக் - 46.4 ஓவர்களில் 228 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. முழு ஸ்கோர் விபரம்.
Sunday, February 4, 2007
இனி கிராமங்களுக்கும் நேரடி கிரிக்கெட்
கிரிக்கெட் உட்பட முக்கிய விளையாட்டுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் போது டி.டி யுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டப்படி, உலகம் முழுதும் நடக்கும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை பெற்ற நிறுவனங்கள், அவற்றை டி.டி யுடன் கட்டாயமாக பகிர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.
இதன் மூலம் நாடு முழுதும் உள்ள மக்கள் விளையாட்டுப் போட்டிகளை கண்டு களிக்கலாம். கிராமங்கள் வரை கிடைக்கும் டி.டி யில் இது கிடைப்பதால் நல்ல விசயமாகவே படுகிறது. எதற்கெடுத்தாலும் காசு என்னும் வழியில் செல்லும் தனியார் சேனல்களுக்கு இது ஒரு அடியாகவே கருதுகிறேன்.
எதிர்பார்த்தது போலவே மீண்டும் சேவாக்
அணியில் மேலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முனாஃப் படேல் மற்றும் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணி இது என்றே கூறலாம். இது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் 'இந்த 15 பேரிலிருந்தும் மேலும் வெளியேற்றப்பட்டுள்ள காம்பீர், ராய்னா & பொவார் ஆகியோரிலிருந்தும் உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்படும்' என கூறினார்.
அட பாவிகளா! அப்போ கைஃப்? ராய்னா பெயரெல்லாம் பரிசீலிக்கப்படும் போது கைஃப் என்ன அவ்வளவு கேவலமாகவா ஆடினார்? Something wrong somewhere.
Squad:
Rahul Dravid (capt), Sachin Tendulkar, Sourav Ganguly, Yuvraj Singh,
MS Dhoni, R Uthappa, Ajit Agarkar, Zaheer Khan, Harbhajan Singh, Anil Kumble,
Dinesh Karthik, Irfan Pathan, Munaf Patel, Virender Sehwag, Sreesanth